பதிவும் பணமும்

பதிவை நீங்கள் பொழுதுபோக்கிற்காக எழுதுகீறீர்களா. அல்லது பதிவு எழுதுவது உங்கள் குறிக்கோளா. கதை எழுத விருப்பமா. கட்டுரை எழுத விருப்பமா. பின்வரும் தளம் உங்கள் எல்லா விதமான ஆசைகளையும் பூர்த்தி செய்யும். ஆனால் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் ஒரு பதிவிற்கு 160 ரூபாய்க்கும் மேல் பணம் தருகிறார்கள்

பொழுது போக்கிற்கு பொழுது போக்கு பணத்திற்கு பணம். நிறைய போட்டிகளும் நடத்துகிறார்கள். போட்டிகளில் வென்றால் 1500 ரூபாய் பணம் தருகிறார்கள். மிக மிக சிறந்த தளம். புதிய தளம். அறிவை விரிவாக்கி கொள்ள தளம்.

நீங்கள் நடத்தும் விவாதங்களுக்கும் பணம் கிடைக்கிறது. நீங்கள் அளிக்கும் விடைகளுக்கு்ம் பணம் கிடைக்கிறது.

இன்னும் பல பல நடவடிக்கைகளுக்கு பணம் கிடைக்கிறது. பணம் Check ஆக அனுப்பி விடுகிறார்கள. நான் ஒரு Check வாங்கி விட்டேன். உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன.

விரும்புபவர்கள் இணையலாம்.

இணைவதற்கு இங்கே சொடுக்கவும்

இணையத்தில் வீணே பொழுதை கழிக்காமல் பயனுள்ள வகையில் பயன் படுத்துங்கள். நன்றி வணக்கம்

மழைக்கால விருப்பங்கள்

சூடாக உண்ண பிடிக்கும்
சுவையாக பேச பிடிக்கும்

போர்வை போர்த்தி தூங்க பிடிக்கும்
மழைக்கால விடுமுறை பிடிக்கும்

மின்சாரம் இருந்தால் பிடிக்கும்
மழையில் நனைதல் பிடிக்கும்

மண்வாசனை பிடிக்கும்
குடையுடன் நடக்க பிடிக்கும்

கல் மழை ரொம்ப பிடிக்கும்
தண்ணீர் பஞ்சம் தீர்வது பிடிக்கும்

மழையே உன்னை மிக மிக பிடிக்கும்
எங்களுக்கு வந்து எங்களை அடிக்கடி
குளிர செய்வாய்

நன்றி நன்றி

விடுமுறை

மனமெல்லாம் சந்தோசப்படுகிறது
நிறைய தூங்க தோன்றுகிறது
பிடித்ததை செய்ய தோன்றுகிறது

ஆழ்ந்த உறக்கம் வருகிறது
ஆனந்தம் நெஞ்சில் பொங்குகிறது
எதனால் இதெல்லாம்

விடுமுறை இன்று
நமக்கெல்லாம் விடுமுறை
இந்த விடுமுறையை
நாம் சந்தோசமாக
கழிப்போம்.

அடுத்த விடுமுறைக்காக
காத்திருப்போம்.
விடுமுறை விரைவில் வந்துவிடும்
விரைவில் எதிர்பார்க்கிறது மனம்
எதிர்பார்ப்பு நிறைவேறும் விரைவில்

ஆயுத பூசை நல்வாழ்த்துக்கள்

புத்தகங்கள் பூசை அறைக்கு சென்றன
பாத்திரங்கள் பளபளப்பாயின
வண்டிகள் வனப்பாயின

புத்தகங்கள் பாத்திரங்கள் வண்டிகள்
அனைத்தும் குங்குமம் மஞ்சள் அணிந்து
மங்கலமாக காட்சியளித்தன

புத்தகங்கள் பாத்திரங்கள் வண்டிகள்
மட்டும் இல்லாமல்
கணினிகள் மற்ற எல்லாமும்
மஞ்சள் குங்குமம் அணிந்தன

கொலு வைக்கப்பட்டது
பரிசுகள் பரிமாறப்பட்டது
மனதுகள் சங்கமமாயின
நல்வாழ்த்துக்கள்

ஆயத பூசை நல்வாழ்த்துங்கள்
உங்களுக்கு மட்டுமல்ல
ஆயுதங்களுக்கும்  தான்
புத்தகங்கள் பாத்திரங்கள் வண்டிகள்
அவற்றின் பணிகளை தொட்ர்க

ஏமாறிய பெண்

என்னங்க என் பிரண்ட்டோட பிள்ளைக்கு உடம்பு சரியில்லையாம்.

நீங்க போய் கொஞ்சம் ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போங்க

ஏய் போடி. யார் யாருக்கோ உடம்பு சரியில்லன்னா நான் ஏன் போய் பாக்கனும்.

உனக்கு வேற வேல வெட்டி இல்ல.

கெஞ்சி கூத்தாடி அனுப்பினாள் கணவனை. அவள் கணவன் இறந்து விட்டான். நீங்க போய் கொஞ்சம் உதவி செய்ங்க என்றாள்.

தொந்தரவு தாங்காமல் சென்றான் அவள் கணவன்.

இதனால் இவளுடைய தோழிக்கும் கணவனுக்கும் ஒரு வித நட்பு உருவானது. அது இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளும் அளவு போய் விட்டது.

அழுதாள். புரண்டாள் மனைவி. உதவி செய்ததால் வந்த ஆபத்தை எண்ணி எண்ணி மருகினாள்..

இப்போது அவள் கணவன் வீட்டிற்கே வருவதில்லை. அந்த பெண்ணின் வீடே கதி என்று இருக்கிறான்.

சோ தராதரம் அறிந்து உதவி செய்ய வேண்டும்.

மரங்களை துன்புறுத்தாதீர்

சாலை ஓர மரங்களில் விளம்பரம் அடங்கிய தகர சீட்டுகள் அணியால் இடிக்கும் கொடூரம் தடுப்பாரின்றி நடந்து கொண்டு வருகிறது.

பணமே பிரதானமாய் அலையும் வியாபாரிகளை விடுங்கள. சில மத போதனை அடங்கிய போர்டுகளைமரம்தோறும் அடித்து வைத்திருக்கின்றனர். எனவே மத போதனைகளை பரப்ப விரும்புபோர் மரங்களை துன்புறுத்தாமல் மத போதனை செய்ய வேண்டும்.

காதலர்கள் தங்கள் பெயர்களை மரங்களில் எழுதி வைப்பதை நிறுத்த வேண்டும்.

மரங்களை தேவையில்லாமல் வெட்டுவதை நிறுத்தவேண்டும்

தியானமும் நன்மையும்

தியானம் செய்வதால் பல வித நன்மைகள் ஏற்படுகின்றன. தியானம் பயிலுங்கள். நன்மைகளை பெருங்கள். யோகாசனமும் செய்யுங்கள். தியானம் நம்மில் உள்ள தீய பதிவுகளை நீக்குகின்றது. நல்ல பதிவுகள் நமக்குள் வளர்த்துக்கொள்ள தியானம் உதவுகின்றது. தியானம் செய்வதால் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றது.

நோய்கள் நீக்கப்படுகின்றன. பலவிதமான நோய்கள் தியானம் செய்வதால் நீங்குகின்றன. தினமும் அரைமணிநேரம் தியானமும் அரைமணி நேரம் யோகாவும் செய்யுங்கள்.

மனதில் நல்ல விதமான எண்ணங்கள் உருவாவதற்கு தியானம் மிகச்சிறந்த மருந்து. தீய விதமான எண்ணங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கு தியானம் மிகச்சிறந்த மருந்து.

எண்ணியவை எண்ணியபடியாகும் எண்ணத்தில் உருதியும் ஒழுங்கும் இருந்தால். உறுதியையும் ஒழுங்கையும் மனதில் ஏற்படுத்த தியானம் பல வகைகளில் உதவுகின்றது.

அன்பு பெருகட்டும் வளரட்டும்

அன்பு என்பது வல்லமை. அன்பு பொறுமை உள்ளது. பரிவு உள்ளது. அழுக்காறு கொள்ளாது பெருமை பேசாது. இழிவானதைச்செய்யாது. சீற்றத்திற்கு இடம் தராது. வர்மம் வைக்காது. ஆநீதியைக் கண்டு மகிழ்வுறாது. உண்மையை கண்டு உளமகிழும். அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். இது பைபிளின் வார்த்தைகள்.

நம்மிடம் எல்லாம் அன்பு உள்ளதா இல்லையா என சோதித்துக் கொள்ளலாம்.


அப்பாவை முட்டிய மாடு

எனக்கு அப்போது 13 வயது இருக்கும். எங்கள் மாடு ஒன்று கன்று ஈனுவதற்கு தயாராக இருந்தது. ஆனால் கன்று ஈனுவதில் சிரமம் இருந்ததால் என் அப்பா கால் நடை மருத்துரை அழைத்து வந்தார். அதனால் எங்கள் மாட்டிற்கு கடும் கோபம் வந்துவிட்டது. அது என் அப்பாவின் மீது கடும் கோபம் கொண்டு முள்மீது தள்ளிவிட்டது.

எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவி்ல்லை. ரோடு மிக அருகில் இருந்ததால் ஒருவர் அவருடைய வண்டியை அப்படியே போட்டுவிட்டு வந்து என் அப்பாவைக் காப்பாற்றினார்.

எங்களுக்கு அன்று நடந்த சம்பவத்தை எப்போதும் மறக்கமுடியாது. காப்பாற்றியவரையும் மறக்க முடியாது. ஆனால் அவர் யார் என்ன தெரியாது.


பிளாஸ்டிக் வேண்டாமே

நமக்கு அற்புதமான பூமியை விட்டு விட்டு சென்று இருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நாம் அதே அளவிற்கு நல்ல பூமியை நம் சந்ததிக்கு விட்டு விட்டு செல்லவேண்டும். அந்த உணர்வு நமக்கு வேண்டும்.

எங்கேயும் எப்போதும் பிளாஸ்டிக் குப்பைகளும் கழிவுகளும் நிரநித இடத்தை விட்டு விட்டு செல்வது சிறந்தது அல்ல உணருங்கள். carry bags use seiyya வேண்டாம் please.

நம் சந்ததிக்கு நல்ல ஒரு உலகை விட்டு செல்வோம்.

நான் முடிந்தவரை பிளாஸ்டிக் பை வேண்டாம் என்று கூறிவிடுவேன்.

துணி பை கொண்டு செல்லுங்கள்....

நம் வருங்கால சந்ததிக்கு குப்பை கூளம் உள்ள இடங்களை விட்டு செல்ல வேண்டாம்.

சிந்தியுங்கள் ...செயல்படுத்துங்கள். நண்பர்களே........


பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு காகிதப்பைகளை பரிசாக தரலாம்.

இதுவும் உலகத்திற்கு நாம் செய்யும் சேவைதான். உலகத்திற்கு மற்றும் வருங்கால சமுதாயத்திற்கு நாம் செய்யும் சேவைதான்.

கணவன் மனைவி பிரச்சினை தீர்வுகள்

 கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. அதை எவ்வாறு தவிர்ப்பது என்று பார்ப்போம். 

1. கணவன் அல்லது மனைவிதான் நம் கடைசிவரையில் கூட வரும் உறவு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் 

2. அவர்/அவள் யார் நம் நட்பாக நம் உறவாக நம் துணையாக வந்தவர். நம்மை விட்டால் அவர் வேறெங்கு போவர். நாம் தான் பின் நிம்மதியாக வாழ முடியுமா 
என்பதை யோசித்து பார்க்க வேண்டும். 

3. மற்றவர் கோபப்படும் பொது நாம் பொறுமை யாக இருக்க வேண்டும் .

4. கணவன் மனைவி உறவு மென்மையான முறையில் கையாளப்பட வேண்டும்.

5. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்ய வேண்டும்.

6. அவர் நமக்கு நம் குடும்பதிற்கு செய்த நன்மைகளை நினைத்து பார்க்க வேண்டும் 


7. நாம் கஷ்ட படும் முறையில் நடக்கும் போது நமக்கு சந்தோசம் தரும் வகையில் நடந்த தருணங்களை நினைத்து பார்க்க வேண்டும். 

8. எல்லாவறிக்கும் மேலாக அன்பு பற்றிய பைபிளின் சிந்தனை நினைத்து பார்க்க வேண்டும். 

அன்பு பொறுமை உள்ளது 
அன்பு பரிவு உள்ளது 
அன்பு ஆழுக்கரு கொள்ளது 
அன்பு பெருமை பேசாது 
அன்பு கோபத்திற்கு இடம் கொடாது 
அன்பு வன்மம் வைக்காது 
அன்பு அன்நேதியை கண்டு மகிழ்வுறது 
உண்மையை கண்டு மழிழுறும் 
அன்பு அனைத்தையும் பொருத்து கொள்ளும் 
அனைத்தும் நம்பும் 
அனைத்திலும் மன உறுதியை இருக்கும்.

நம்மிடம் அந்த அன்பு உள்ளத என்பதை ஆராய வேண்டும் 

வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 


நன்றி 

வணக்கம்.














காத்திருந்து காத்திருந்து


தயக்கம் காட்டினாய் 
தள்ளி போ என்ராய் 
தவித்து போனேனேன் 
தனயனை ஆனேன் 

துயரத்தை மறக்க 
துணையாய் இருக்க 
துக்கம் துடைக்க 
துணிவு அதை ஏற்க 

மகிழ்ச்சி மழை 
மனமெலாம் நிறைய 
மனமார அழைக்கின்றேன் 
மறுக்காமல் வாராய் 

முதலும் நீ 
முடிவும் நீ 
முழுமை நீ 
முக்கியம் நீ 




அன்பு என்பது வல்லமை

 அன்பு என்பது வல்லமை 
ஆக்கம் அளித்திடும் வார்த்தையில் 
அர்த்தமாகிடும் வாழ்விலே 
அன்பு என்றும் வாழ்கவே 

அன்பு என்பது வல்லமை 
ஆக்கம் அளித்திடும் வார்த்தையில் 
அர்த்தமாகிடும் வாழ்விலே 
அன்பு என்றும் வாழ்கவே 

நின்று நிலைக்கும் எதுவுமே 
அன்பு உருவம் கொடுத்ததே 
தன்னை வழங்கும் இதயமே 
என்றும் உன்னை  மறவோமே 

அன்பு என்பது வல்லமை 
ஆக்கம் அளித்திடும் வார்த்தையில் 
அர்த்தமாகிடும் வாழ்விலே 
அன்பு என்றும் வாழ்கவே 


வாரி கொடுப்பது அன்புதான்
தேடி வருவதும் அன்புதான்
 துயர் துடைப்பதும் அன்புதான்
துணை ஆவதும் அன்புதான்


அன்பு என்பது வல்லமை 
ஆக்கம் அளித்திடும் வார்த்தையில் 
அர்த்தமாகிடும் வாழ்விலே 
அன்பு என்றும் வாழ்கவே 











அறிவியல் பிரிவு மாணவி நான்

பிரபல பதிவர்கள் எழுதும் பதிவுகளுக்கு நடுவில் நான் எழுதும் படிவுகளையும் படிக்கும் தங்களுக்கு என்னுடைய நன்றிகள். 

நான் பனிரெண்டாம் வகுப்பில் படிக்கும  பொது அறிவியல் பிர்ரிவில் படித்தேன்.  

அப்போது எலி வெட்டி அதன் முலையை தனியா எடுக்கவேண்டும் . 

அதேன்ல்லம் செய்தேன். 


அனால் அன்று முழுமையும் சாப்பிட்டவே முடியவில்லை 

எதைனைக்கும்  அன்று சென்றவுடன் தலைக்கு  குளித்த பின்னும் உண்ணவே முடியவில்லை. மிக மிக கச்தமாக இருந்தது. 

குமட்டி கொண்டு வந்தது. என்ன செய்ய.



உலக அமைதி – வேதாத்திரிமகரிஷி



நிரந்தரமான உலக அமைதி ஏற்பாடு முடிவு செய்யப்பட்டால்தான் மனித இன வாழ்வுக்கு உறுதி ஏற்ப்படும். ஆங்காங்கே நாடுகளில் உள்நாட்டுப்போரும் நாடுகளிக்கிடையே போர்களும் எப்போதும் நடந்து வருகின்றன. போர் முனையில் ஏற்படும் பொருள் அழிவும் மக்கள் அழிவும் இனி மனித குலம் உலகில் நீடித்து வாழ முடியுமா என்ற ஐயத்தை சிந்தனையாளர்களிடம் ஏற்படுத்தி வருகின்றன. அக்காலத்தில் உள்ள அணுகுண்டுகளின் ஆற்றலைவிட பலமடங்கு ஆற்றலை பெருக்கி இருக்கிறார்கள் என்பது சிந்தித்துணரும் எவருக்கும் மனித குலத்தின் எதிர்காலம் பற்றி கவலை ஏற்படாமல் போகாது.

உலகம்என்ற மண்மீது அனைவருமே பிறந்தோம்
உயிர்காக்கும் காற்றுஒன்றே மூச்சுவிடு வதற்கு
உலகெங்கும் ஒளிவீசும் சூரியனும் ஒன்றே
உள்ளகடல் ஒன்றேநீர் ஆவியாகிப் பொழிய
உலகில்இன்று உள்ளோர்இதில் ஒன்றும் செய்யதில்லை
ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்துசெத்துப் போவார்
உலகில்ஒரு பகுதியினர் மற்றவரைக் கொன்று
உயிர்வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்.

மனிதன் அனுபவமும் –முயற்சியும்

இந்தஉல கில்மனிதன் இந்நாள் மட்டும்
எத்துணையோ காலமாக வாழ்ந்து விட்டான்.
அந்தநாள் முதலாக அனுபோ கத்தால்,
ஆராய்ச்சி யால்கண்ட விளைவை நோக்க,
வந்தபயன் இன்பம்துன்பம் இரண்டேயாகும்.
வரவுசெல பின்மீதம் மிகுதித் துன்பம்
எந்தவகை யில்முயன்றும், என்றும் எங்கும்
எவராலும் இதைக்குறைக்க முடியவில்லை.


இறையுணர்வு உண்டானால், அதன் விளைவாக, அறநெறி தானாக மலரும். மனிதனை மனிதன் மதித்து, ஒத்தும் உதவியும் வாழ ஏற்ற ஆன்மீகக் கல்வியினால் தனிமனிதன் வாழ்வில் அமைதி உண்டாக வேண்டும். அதன்மூலம், குடும்பத்தில் அமைதி –ஊரில் அமைதி –நாட்டில் அமைதி – உலகில் அமைதி இவை உருவாகும். நிலைபெறும்.

கோடியும் கோபியும்

நான் நீங்களும் வெல்லம்லாம் ஒரு கோடி நிகிழ்ச்சி பார்பெண். அன்று கோபிநாத் விளையாடிய நிகைசி பார்த்தேன். 

அவர் வாழ்கையில் படிபடியாக முநேரியத்தை பஆர்க்கையில் மனதிற்கு மிகவும் மகிழ்சியாக இருந்தது. 

என்ன அறிவு என்ன அறிவு

முடிவெடுக்கும் திறன். 

அவர் பனிரெண்டு லட்சம் வரை வின் செய்தார் அடஹற்கு மேலும் வின் செய்து இருப்பார். 

ஆனால் அடுத்தவரும் ஆட வேண்டும் என்பதற்காக விட்டு கொடுத்து விட்டார். 

அவர் அறிவையும் திறமையும் பாராட்டு கிறேன் . 

வாழ்க அவர் பனி 

வளர்க அவர் புகை நன்றி வணக்கம் . 

வழ்க்துக்கள்  


மின்சாரம் - செயல் விளைவு..

மின்சாரம் இப்போது சரியாக வருவதில்லை என்றுஆர்பாட்டம்மTH செய்கிறோம். (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்)

என்றாவது வீணாக
விளக்கையும் பானையும் ஆப் பண்ணலாம் என்று நினைத்து உள்ளோமா இல்லை. போட்டது போட்டபடியே இருக்கும். நாம் அதை கண்டுக்க கூட மாட்டோம். அதன் பலனைத்தான் நாம் எப்போது அனுபவிக்கிறோம்.

மின்சாரநாம் செய்த செயல்களின் விளைவைத்தான் இப்போது நாம் அனுபவிக்கிறோம்.

ஆனால் நாம் என்றுமே நாம் செய்த தவறை நாம் ஒப்பு கொள்வதில்லை.


அன்று சேமித்து இருந்தால் என்று நமக்கு பிரச்சினை இல்லை.


அன்று செலவழித்து விட்டதால் இன்று நமக்கு பிரச்சினை.


இனிமேலாவது சிக்கனமாக இருப்போம்.


சிறப்பாக வாழ்வோம்.

நன்றி

வாழ்க வையகம்!

வாழ்க வளமுடன்!

முன்னாளில் சமைத்த கறி




ஒரு சிலர் திங்கள் கிழமை சாம்பார் செய்து விட்டு அதை ஒரு வாரத்திற்கு வைத்து கொள்வது உண்டு.

அது தவறு என்பதற்காக தான் இந்த பதிவு.

அப்போது அப்போது சமைத்து உண்பதே சிறந்தது.


நாம் எதற்காக உழைக்கிறோம்.

நல்ல சாப்பாடு கூட சாப்பிடவில்லை எனில் என்ன தான் பயன். சொல்லுங்கள் பார்போம்.


நான் சித்தா hospital செல்வேன். அதில் உள்ள வாக்கியம் முன்னாளில் சமைத்த கறி அமுதேனினும் உண்ணேன் என்பதுதான் அந்த வாக்கியம்.

நாமும் அதை கடைபிடிப்போம். நலமுடன் வாழ்வோம்.

சோம்பலை விட்டு ஒழிப்போம். நல்ல நல்ல உணவு வகைகள் செய்து உண்போம்.


வாழ்க வையகம்


வாழ்க வளமுடன்.

ஆடை - பற்றிய கருத்துகள்



ஆடை - ஆள் பாதி ஆடை பாதி. ஆடைஇல்லாதவன் அறை மனிதன் போன்றவை ஆடை பற்றிய கருத்துகள்.

நன்றாக ஆடை அணிதல் மிகவும் முக்கியமானது. நாம் நன்றாக ஆடை அணிவதால் பிறரால் கவனிக்க படுகிறோம். நாம் முதன் முதலில் பார்ப்பவர் கூட நாம் ஆடையை பார்த்துதான் எடை போடுகிறார்.



நான் ஒரு வசனம் படித்தேன். என்னை மிகவும் கவர்தது அந்த வசனம். அது என்னவென்றால் அழகாக உடை உடுத்த பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.



எவ்வளவு உண்மை பொதிந்து உள்ளது அந்த வசனத்தில். நாம் மறுநாள் உடுத்த வேண்டிய உடையை முதல் நாளே நன்கு ion செய்து வைத்து கொண்டால் கடைசி நிமிச tension குறைக்கலாம்.


அழகை ஆடைகளால் அதிகரிப்போம். அதே சமயம் கண்ணியமாக உடை உடுத்துவோம்

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்

பாவம் எனப்படுவது யாதெனின்



நாம் பாவம் என்பதற்கு ஒரு வரையறை வைத்து உள்ளோம். அந்த வரையறை என்ன?

கொலை செய்வது பாவம். திருடுவது பாவம் என்பதுதான் அந்த வரைமுறை.

ஒரு சொல்பொழிவில் நான் கேட்டது என் மனதை தொட்டது அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அது என்ன

"நல்லோரின் மனதை நடுங்க செய்வது பாவம்." நம் நலனுக்ககாக மற்றவரை நலம் கெட செய்வது பாவம்.

நம்மால் செய்ய முடிந்த நன்மையை செய்யாமல் இருப்பது கூட பாவம் தான்.
நம்மால் ஒரு வேலையை ஒருவருக்கு வாங்கி தர முடியும் என்றால் அதை வாங்கி தராமல் இருப்பது கூட பாவம் தான்.


வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறர் மனம் உடல் வருத்தா மாநெறியே ஒழுக்கம் என்கிறார்.

நாம் எத்துணை தடவைகள் பிறர் மனம் நோக செய்திருப்போம். சிந்திப்போம்.

நம் செயல்களை மாற்றி அமைப்போம்.


பெரிய பெரிய பாவங்கள் மட்டும் பாவம் அல்ல. சிறு சிறு குற்றங்கள் கூட பாவம் தான். பிறர் மனதில் ஏற்படும் அந்த ரணம் செயல் விளைவாக மாறி நமக்கு வினையாக மாறிவிடும்.

வினை பதிவே தேகம் கண்டாய்

பிறவா நிலை எய்த பாவம் செய்யாமல் இருப்போம்.

நன்றி

வணக்கம்

வாழ்க வளமுடன்

வாழ்க வையகம்.

என் பெரியம்மா

என் அம்மாவுடன் பிறந்த பெரியம்மா ஒருவர் இருந்தார். அவர் தற்சமயம் தான் இறந்து போனார். அவருடைய வாழ்வு சற்று விசித்திரம் நிறைந்தது.

பத்தி மூன்று வயதில் திருமணம் ஆகி கணவனை உடனடியாக இழந்து விட்டார்.
என் பாட்டி இந்த சிறு பிள்ளைக்கு மறுபடியும் திருமணம் செய்து விட்டார். மற்ற யாரும் தன் காலத்திற்கு பிறகு அவரை கவனிக்க மாட்டார்கள் என்று எண்ணி.

ராணுவ வீரர் ஒருவரை மணந்தார் என் பெரியம்மா. இதில் ஒரு சுவாரசியம் என்ன வென்றால் அவர் நம் நாட்டுக்காக சேவை செய்யாவில்லை. வெள்ளையர் ஆட்சி காலத்தில் ராணுவ வீரராக இருந்தார்.

முதல் கணவனுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது. அதற்கு பிறகு குழந்தை இல்லை.

என் பெரியம்மா ஒரு சிறு குடிசை விட்டில் தான் வசித்தார். ஆனால் அன்பு என்றால் அன்பு அனைவரிடத்திலும் அத்துணை அன்பு.


அந்த கிராமத்தில் போவோர் வருவோருக்கு கூட உணவு படைப்பர் என் பெரியம்மா.

சிறு வயதில் எனக்கு எந்த பெரியம்மாவை பார்த்தல் மிகுந்த பயம். அவர் வந்தாலே எனக்கு சுரம் வந்துவிடும்.

ஆனால் அவர் கடுமையானவர் இல்லை.

அவர் பேசும் பேச்சுகளை சிறு பிராயத்தில் புரிந்து கொள்ளும் பக்குவம் இன்மையால் வந்த பயம். மற்றபடி ஒன்றும் இல்லை.


இப்போது அவர் இல்லை . அவர் ஆன்ம ஆறுதல் பெற வேண்டி இந்த பதிவு.

நீங்களும் வேண்டுங்கள்

சரியாய்

நன்றி

வணக்கம்

வாழ்க வளமுடன்

வாழ்க வையகம்

முருங்கை விதை



முருங்கையை பற்றி நிறைய விஷயங்கள் கேள்விபட்டிருப்போம்.

மற்ற படி முருங்கையின் பயன்கள் உங்களுக்கு நல்லவே தெரியும்.

நான் இரண்டு நாட்கள் முன் கேள்வி முருங்கை சாம்பார் அடித்து கொள்ளவே.

ஆள்இல்லை நட்டால் தான் சிக்கிரம் காய்க்கும்மாம். naan irandu natkal mun kelvi பட்டது.



நிறைய நாட்கள் காய்க்காமல் இருந்தால் நல்லடில்லையாம்.


murungai sambar adithu kollavey aal illai

உறவு முறைகளை மாற்றாதீர்


ஒரு சிலர் உறவு முறைகளை மாற்றி அழைக்கின்றனர்.

அதை பற்றிய என் சொந்த அபிப்ராயம்.

உறவு முறைகளை மாற்றி அழைப்பது தவறு என்பது என் கருத்து.

மாமியாரை அம்மா என்கின்றனர் சிலர். அது எனக்கு அவ்வளவாக சரி என்று படவில்லை. அன்பின் நிமித்தமாக அவ்வாறு அழைகாலம். அத்தையை அத்தை என்பதே சரியான பதம் என்று நான் நினைக்கிறேன்.

அன்பு இருக்கலாம். அந்த அன்பை உறவு முறைகளை மாற்றி அழைப்பதன் முலம் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அத்தை என்று அழைத்து அன்பை வெளிபடுத்த முடியாதா என்ன.

ஒரு சிலர் நண்பர்களின் அப்பாவை அப்பா என்று அழைப்பதும் இந்த வகையில் சரியல்ல என்பது என் கருத்து.

அங்கிள் என்றே அழைக்கலாம். நண்பர்களின் அப்பாவை .

அன்பு அதிகமானால் கணவனை அண்ணன் என்போமா மாட்டோம் அல்லவா.
தவறு என்றால் மன்னித்து கொள்ளுங்கள். இது முற்றிலும் என் சொந்த அபிப்ராயம்.

நன்றி

வாழ்க வளமுடன்

வாழ்க வையகம்

நான் அவன் அல்ல



நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூர் சென்றிந்தேன். அப்போது நடந்த கதை நீங்களும் கேளுங்கள்.


என் அம்மாவுடைய ஊரில் இருந்து அடையார் நோக்கி வந்து கொண்டிருந்தேன்.

அப்போது பஸ் கண்டக்டர் ஒரு ரூபாய் தருவதற்கு பதில் ஒன்பது ரூபாய் தந்து விட்டார்.

நாங்கள் நாணயமாக அதை திருப்பி தந்து விட்டோம்.

சென்ட்ரலில் இருந்து ரயிலில் பிரயாணம் மேற்கொண்டோம்.

அப்போது பஜ்ஜி விற்கும் ஒருவர் இரண்டு பஜ்ஜி பனிரெண்டு ரூபாய் என்று கூறினார்.

நாங்களும் வாங்கினோம். இருபது ரூபாய் தந்தோம். அனால் அவர் மீதி காசை கொடுக்கவே இல்லை. கேட்டால் நான் அல்ல அது என்று கூறி விட்டார்.


நாங்கள் நாணயம் காத்தோம் .


எங்களுக்கு நாணயம் மற்றவரால் காப்பாற்ற படவில்லை.

மனம் வருந்தினோம்.

என் செய்ய. எப்படியும் சில சென்மங்கள்.

வினக்காதீர் உணவை



அவள் விகடனில் படித்தேன் எந்த செய்தியை.


இரண்டு பேர் ஜேர்மன் சென்றிருந்தனாறாம்


அவர்களை சுற்றி இருந்த அனைவரும் மிச்சம் வைக்காமல் சப்பிடனரம். ஆனால் அவர்கள் மிச்சம் வைதனரம்.

அதற்கு பைன் வசுளிதனரம்.

சோமாலியா நாட்டில் உணவு கிடைப்பதில்லை.

ஆதனால் உணவை வீணடிப்பது மனிதகுலத்திற்கு எதிராக செய்யப்படும் பாவம்
என்று சொன்னார்களாம் ..எந்த கருது எனக்கு மிகவும் பிடித்ததாக இருண்டது.
அதனால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். உணவை வீனடிகாதீர்கள்.

நானும் ஒரு தடவை உணவை வீணடிக்கும் இரு நண்பர்களை பார்த்தேன்.
கோபமாக வந்தது.

நமக்கு இருக்கிறதே என்று வீணாக்க கூடாது. நமக்கு தேவையான அளவை மட்டும் வாங்கி சாப்பிடவேண்டும்

நன்றி. வாழ்க வளமுடன்.

வாழ்க வையகம்

இடுக்கண் வருங்கால் நகுக


நான் சிறுவயதாக இருக்கும் பொது என் அம்மா ஒரு சீட்டு போட்டார்கள்.

நான்தான் சென்று கட்டினேன்.

அவர்கள் ஒரு துணிக்கடையும் வைத்து இருந்தார்கள்.

எங்களுக்கு சொன்ன நபரும் மிகவும் நேர்மையனவர்த்தன். சரி என்று நாங்கள் சீட்டு திட்டத்தில் சேர்த்தோம். கடைசிவரை கட்டியும் விட்டோம்.

எடுபதற்கான கடைசி நேரம். அப்போது சீடை நடத்தியவர் என் அம்மாவிடம் நீங்கள் அந்த பணத்திற்கு இணையான துணி வேண்டுமென்றால் எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார். என் அம்மா வேண்டாம் வேண்டாம் எனக்கு பாத்திரம் தான் வேண்டும் என்று கூறிவிட்டார்.

அடுத்த வாரம் ALL எஸ்கேப்.............. ஏதோ சிறிதளவு மனசாட்சியுடன் அவர் துணி எடுத்துகோலும் படி கூறியும் என் அம்மாதான் வேண்டாம் என்று சொல்லி மிஸ் செய்து விட்டார்.

எதை நினைத்து அழுவதா சிரிப்பத நீங்களே கூறுங்கள் ......

தங்க தோசை



பெங்களூரில் ஒரு ஹோடேலில் தங்க தோசை விர்கிரர்கலம்

எந்த வரம் குங்குமம் நாளிதழில் வெளி வந்த செய்தி இது.

ஆலிவ் எண்ணையில் செய்கிரார்கலம்.

செய்யும் முறையில் எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது.

கடைசியில் தங்க தகடை மேல் பரப்பி விடுகிரர்காலாம்.

தங்க தங்க தோசை தின்ன தின்ன ஆசை...

மலேஸ்வரிதில் கிடைக்கும்

நீங்களும் போய் உண்ணலாம்


ஓகே வ


நன்றி


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


திருமண உறுதிமொழி

திருமண உறுதி மொழி

கிறித்துவர்களில் திருமண உறுதி மொழி உள்ளது . அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
மற்ற மதத்தை சார்ந்த நண்பர்களும் தெரிந்து கொள்வதற்காக அதை எங்கே அளிக்கிறேன்.

இன்பத்திலும் துன்பத்திலும்
உடல் நலத்திலும் நோயிலும்
உனக்கு பிரமாணிக்கமையிருந்து
என் வாழ்நாளெல்லாம் உன்னை
நேசிக்கவும் மதிக்கவும்
வாக்களிக்கிறேன்



இந்த உறுதிமொழியை நாம் நினைவில் கொண்டால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன் மனைவிக்கு இடையேயான அன்பை அதிகரித்து கொள்ளலாம். அன்பை அதிகபடுத்துவோம். உறுதிமொழியை நினைவில் கொள்வோம்.

நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

ஆண்டி என்ற வார்த்தை வேண்டாமே


நிறைய பேர் ஆண்டி என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். ஆதாவது நாம் அழைபவர்க்கு என்ன வயது என்று தெரியாமலே ஆண்டி என்கிறார்கள்.

முப்பதிமுன்று வயது பெண்ணை பார்த்து முப்பது வயது ஆண் ஆன்டி என்றால் அந்த கேட்பவரின் மனோ நிலை என்னவாக இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.

ஒரு சில ஆண்கள் காயபடுத்துவதர்க்காகவே ஆன்டி என்கிறார்கள். கல்யாணமகி விட்டால் ஆன்டியாம் அதுவும் யாருக்கு ஒரு சில வயதே சிறியவர்களுக்கு.

என்ன காலம் பாருங்கள்.

அதை விட நமக்கு மற்றவர்களின் வயதை மதிப்பிட தெரியட போது மேடம் என்று அழைக்கலாம்.

ஆன்டி என்பது உறவு முறையை குறிக்கும் ஒரு சொல். யாதும் ஊரே யாவரும் கேளிர் தான் இருந்தாலும் வயதை மதிப்பிட தெரிந்தால் மட்டும் ஆன்டி என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். மற்ற நேரங்களில் மேடம் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.

புண் பட்ட மனதில் எண்ணங்களை எழுதுகிறேன்.

மாற்றங்களை ஏற்படுத்துவோம். நல்ல மாற்றங்களை ஏற்று கொள்வோம்.

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

நன்றி ..............

ஆச்சர்ய பட வாய்த்த பாட்டி



தருமம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும். செய்த தருமம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்.

நான் சென்னையில் இருந்து போளூர் நோக்கி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் ஒரு மூதாட்டி பயணம் செய்தார்.

ரயில் சிநேகம் போல பேருந்து சிநேகம் ஆரம்பித்தது. நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

அவர் பல்லாவரத்தில் ஒரு ஆலயத்தில் பணி புரிவதாக கூறினார்.

ஆலயத்தை சுத்தம் செய்யும் வேலை செய்வதாக சொன்னார். இரண்டு ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும் சொன்னார். அவர் கையில் வளையல்கள் இரண்டு போட்டு கொண்டு இருந்தார். இரண்டு பதினைத்து ரூபாய் என்றார். அவர் சொன்ன என்னொரு விஷயம் தான் என்னை ஆச்சர்ய பட வைத்தது. ஆது என்னவென்றால்
அது போல ஒரு ஐம்பது வளையல்கள் வாங்கி வைத்து இருந்ததுதான். நான் அவை எதற்காக என்று கேட்டதற்கு சேத்துபட்டு (திருவண்ணாமலை) ஆலயத்தில் பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுப்பதற்கு என்று சொன்னார். என்னே ஒரு தரும சிந்தனை என்று பாருங்கள். இரண்டு லட்சம் சம்பாதிப்பவர் கூட இதை போல ஒரு காரியத்தை சிந்தனை செய்து பார்த்திருப்பார தெரியாது.

நாமும் நம்மால் இயன்ற நல்ல செயல்கள் செய்வோம். சிறப்பாக வாழ்வோம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நன்றி.

Blog Archive