
தருமம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும். செய்த தருமம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்.
நான் சென்னையில் இருந்து போளூர் நோக்கி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் ஒரு மூதாட்டி பயணம் செய்தார்.
ரயில் சிநேகம் போல பேருந்து சிநேகம் ஆரம்பித்தது. நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன்.
அவர் பல்லாவரத்தில் ஒரு ஆலயத்தில் பணி புரிவதாக கூறினார்.
ஆலயத்தை சுத்தம் செய்யும் வேலை செய்வதாக சொன்னார். இரண்டு ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும் சொன்னார். அவர் கையில் வளையல்கள் இரண்டு போட்டு கொண்டு இருந்தார். இரண்டு பதினைத்து ரூபாய் என்றார். அவர் சொன்ன என்னொரு விஷயம் தான் என்னை ஆச்சர்ய பட வைத்தது. ஆது என்னவென்றால்
அது போல ஒரு ஐம்பது வளையல்கள் வாங்கி வைத்து இருந்ததுதான். நான் அவை எதற்காக என்று கேட்டதற்கு சேத்துபட்டு (திருவண்ணாமலை) ஆலயத்தில் பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுப்பதற்கு என்று சொன்னார். என்னே ஒரு தரும சிந்தனை என்று பாருங்கள். இரண்டு லட்சம் சம்பாதிப்பவர் கூட இதை போல ஒரு காரியத்தை சிந்தனை செய்து பார்த்திருப்பார தெரியாது.
நாமும் நம்மால் இயன்ற நல்ல செயல்கள் செய்வோம். சிறப்பாக வாழ்வோம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நன்றி.
No comments:
Post a Comment