
ஒரு சிலர் உறவு முறைகளை மாற்றி அழைக்கின்றனர்.
அதை பற்றிய என் சொந்த அபிப்ராயம்.
உறவு முறைகளை மாற்றி அழைப்பது தவறு என்பது என் கருத்து.
மாமியாரை அம்மா என்கின்றனர் சிலர். அது எனக்கு அவ்வளவாக சரி என்று படவில்லை. அன்பின் நிமித்தமாக அவ்வாறு அழைகாலம். அத்தையை அத்தை என்பதே சரியான பதம் என்று நான் நினைக்கிறேன்.
அன்பு இருக்கலாம். அந்த அன்பை உறவு முறைகளை மாற்றி அழைப்பதன் முலம் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அத்தை என்று அழைத்து அன்பை வெளிபடுத்த முடியாதா என்ன.
ஒரு சிலர் நண்பர்களின் அப்பாவை அப்பா என்று அழைப்பதும் இந்த வகையில் சரியல்ல என்பது என் கருத்து.
அங்கிள் என்றே அழைக்கலாம். நண்பர்களின் அப்பாவை .
அன்பு அதிகமானால் கணவனை அண்ணன் என்போமா மாட்டோம் அல்லவா.
தவறு என்றால் மன்னித்து கொள்ளுங்கள். இது முற்றிலும் என் சொந்த அபிப்ராயம்.
நன்றி
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
3 comments:
இந்தக் கருத்தைச் சரி என்றும் கூறலாம்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
பெண்பிள்ளை இல்லாத வீட்டுக்கு வரும் மருமகள்,மாமியாரை அம்மா என்று அழைப்பதால்
அவர்களுக்குள் ஒரு அன்யோன்யம் வளர்வதாகவே தோன்றுகிறது.இது சிலருக்கு மாறுதலாக தெரிகிறது.
குழந்தைகளை "இதை செய்யாதம்மா!" என்பது போல, அழைக்கிறோம்.அதற்காக, குழந்தை நமக்கு அம்மா என்று பொருள் அல்ல.அது போலவே மேற்கூறிய அத்தை,மருமகள் உறவிலும்.
இதனை அழைப்பு முறை என்று எடுத்துக்கொள்ளலாம்! உறவுமுறை என எண்ணி குழம்ப வேண்டாம்! இது எனது தனிப்பட்ட கருத்து!!
karuthukalukku nandri.
Post a Comment