தற்கொலைகளும் தன்னம்பிக்கையின்மைகளும்.

ஒருசிலர் ஒரு அவமானம் ஏற்பட்டது என்றாலோ எதாவது துயரம் என்றாலே உடனே தற்கொலை என்ற முடிவை நாடுகின்றனர்.

நாம் ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு அவமானத்தை சந்திக்கிறோம் என்றால் அந்த சூழ்நிலையையும் அந்த சூழ்நிலையில் நாம் சந்தித்த மனிதர்களையும் நாம் மீண்டும் சந்திக்காமலே போகலாம். அந்த சம்பவத்தையே அந்த மனிதர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்கள் என்பதும் இல்லை. காலப்போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயங்கள் என்ற பாடல் வரி நமக்கு நினைவுறுத்துவது இதைத்தான்.
காலம் எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து. இந்த உலகில் அவமானத்தை சந்திக்காத நபர்கள் யார். எல்லாருமே எதாவது ஒரு சூழ்நிலையில் அவமானத்தை சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள்

உலகம் என்பது மிகமிகப்பெரியது. அந்தப்பெரிய உலகில் நாம் எல்லாவற்றையும் எதிர்கொண்டு வலம் வரலாம். எதாவது துயரமான சூழ்நிலையை நாம் எதிர்கொள்ளும் போது இந்த நிலையும் கடந்துபோகும் என நினைக்கவேண்டும்.

நம்பிக்கையுடன் வாழ வாழ்த்துக்கள்.

இணையத்தில் பணம்

இணையத்தில் பணம் ஈட்டும் ஒரு முறையை பற்றி நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்
அதன் பெயர் mginger மொபைலில் வரும் விளம்பரங்களுக்கு காசு தருவதுதான் mginger. நிறைய தேவையில்லாத விளம்பரங்கள் நம் இன்பாக்சை நிரம்புகின்றன. இது நம்முடைய அனுமதியுடன் வரும் விளம்பரம் அதற்கு காசும் தருகிறார்கள். உடனே ஒரு கோடி ரூபாய் வந்துவிடாது. கொஞ்சம் கொஞ்சமாகதான் காசு வரும். 300 ரூபாய் ஆனதும் நமக்கு செக் அனுப்பிவிடுவார்கள்.
நிறைய நண்பர்களை சேர்த்தால் கணிசமான பணம் வரும்.
இதில் நாம் ஈட்டும் வருமானம் என்பது நாம் சேர்க்கும் நண்பர்களின் எண்ணிக்கையைப் பொருத்தது. 1000 எண்ணிக்கையில் சேர்த்தால் அவர்களுக்கு வரும் விளம்பரங்களுக்கும் நமக்கு பணம் கிடைக்கும். நான் 42 பேரை சேர்த்திருக்கிறேன். 300 ரூபாய் கிடைத்தது.

நீங்களும் சேருங்கள். பயன் அடையுங்கள். இதற்கு நீங்கள் செய்யும் முதலீடு 0. நம்பகத்தன்மை 100 . நீங்கள் அந்த வலைதளத்திற்கு சென்றாலே உங்களுக்கு அது புரிந்துவிடும்.




நீங்கள் இதில் சேர கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்





http://mGinger.com/index.jsp?inviteId=sagayamary

வர வர மாமியார்









வசுமதி இப்போது மிகமிக குறைவாய் சம்பாரிக்கிறாள். முன்பு வருடத்திற்கு 3.8 லட்சம் சம்பாதித்த அவள் இப்போது ஒரு வருடத்திற்கு 1 லட்சத்திற்கும் குறைவாக சம்பாதிக்கிறாள்.

அவள் மனது வேதனையாக உள்ளது. அதிகம் செலவு செய்தே பழக்கப்பட்ட அவளுக்கு இப்போது வெறும் 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் எப்படி போதும்.

அந்த 6 ஆயிரம் ரூபாயில் 2000 ரூபாய் வாடகை. மீதி அவளுடைய உணவிற்கு போதுமானதாக உள்ளது. இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு அவள் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்திகொள்வது. அவளுக்கு பின் வந்தவர்களுக்கெல்லாம் மிக அதிக சம்பளம் கொடுக்கிறது கம்பெனி என் செய்ய. இது அவள் விதியா? ம் வேதனையில் வசுமதி…..

அவளுடைய வருமானம் உயர்வடைய நீங்கள் எல்லாம் பிரார்த்தனை செய்வீர்களா?

தண்ணீர் தண்ணீர்



நான் சென்ற சனி அன்று கூடுவாஞ்சேரியில் உள்ள வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கு எப்போதும் தண்ணீர் வைத்திருப்பார்கள். ஆனால் அன்று தண்ணீர் சிறிதளவும் இல்லை.

ஆனால் தண்ணீர் 4 கேன்கள் அளவிற்கு இருந்தது. வங்கியில் பணி புரிபவா்கள் இருவரிடம் தண்ணீ்ர் இல்லை கொஞ்சம் போடவும் எனக்கூறினேன். இருவரும் பெண்கள் அதில் ஒருவர் நான் சொன்னதை கண்டும் காணாதது போல சென்றுவிட்டார். மற்றொருவர் சொன்னது என்ன தெரியுமா. வங்கியின் சேவை நேரம் முடிந்துவிட்டது. இனி தண்ணீர் கேன் எல்லாம் போட முடியாது என்று. சேவைநேரம் முடிந்துவிட்டால் வாடிக்கையாளர்கள் தண்ணீர் கூட அருந்தக்கூடாது போலும் எப்படி இருக்கிறது பாருங்கள்

என்னைப்பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். நானே தண்ணீரை கொண்டு சென்றிருந்தால் எனக்கு இந்த பிரச்சனை வந்திருக்காது பாருங்கள்.