அப்பாவை முட்டிய மாடு

எனக்கு அப்போது 13 வயது இருக்கும். எங்கள் மாடு ஒன்று கன்று ஈனுவதற்கு தயாராக இருந்தது. ஆனால் கன்று ஈனுவதில் சிரமம் இருந்ததால் என் அப்பா கால் நடை மருத்துரை அழைத்து வந்தார். அதனால் எங்கள் மாட்டிற்கு கடும் கோபம் வந்துவிட்டது. அது என் அப்பாவின் மீது கடும் கோபம் கொண்டு முள்மீது தள்ளிவிட்டது.

எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவி்ல்லை. ரோடு மிக அருகில் இருந்ததால் ஒருவர் அவருடைய வண்டியை அப்படியே போட்டுவிட்டு வந்து என் அப்பாவைக் காப்பாற்றினார்.

எங்களுக்கு அன்று நடந்த சம்பவத்தை எப்போதும் மறக்கமுடியாது. காப்பாற்றியவரையும் மறக்க முடியாது. ஆனால் அவர் யார் என்ன தெரியாது.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சில சம்பவங்கள் மறக்க முடியாதவை.....

நன்றி...பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

மேகா said...

ஆமாம் தனபாலன். நன்றி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.