ஸ்ரீமத்தானந்தா
என்ன சிஷ்யா இன்று நம் ஆசிரமத்திற்கு ஒரு ஈ காக்காயைக்கூட காணோம்.

ஆசிரமாம் பெரிய ஆசிரமம். 2 பேரு தங்கறமாதிரியான சின்ன குடிசை மனதிற்குள் நினைத்துக்கொண்டான் சிஷ்யன் சிகாமணி

ஆமாம் குருவே.
******************************
ஒரு தொழிலதிபர் காரில் போய் கொண்டிருந்தார்.

ஆண்டவா என் பிரச்சனைக்கு நல்ல தீர்வு நீதான் தரணும்.

அப்போது கண்ணில் தென்பட்டது அந்த போர்டு. ஸ்ரீமத்தானந்தா ஆசிரமம். இங்கு சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்.

**************************
காரை நிறுத்தினார். குருஜியைப்பார்க்க முடியுமா என்றார் சிஷ்யனிடம்.

இங்கே அமருங்கள். குருவிடம் கேட்டுகொண்டு வந்து சொல்கிறேன்.

குருவே. உம்மைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். அனுப்பட்டுமா.

இல்லை சிஷ்யா. நான் தியானம் பண்ணுவதாக சொல். அரை மணிநேரம் கழித்து அனுப்பு.

********************
சுவாமிஜி தியானத்தில் இருக்கிறார். ஒரு அரைமணிநேரம் வெயிட் பண்ணுங்க.
சரி என்றார் தொழிலதிபர்.

அரைமணிநேரம் கழித்து இப்ப நீங்க போகலாம்.

********************
அமருங்கள்.

தங்களின் திருநாமம் ரகு அல்லவா.

ஆகா சாமி எப்படி இவ்வளவு கரக்டா சொல்லிட்டிங்க.

அதுமட்டுமா தங்களுக்கு 2 தங்கைகள் 1 தம்பி. தங்களுக்கு திருமணம் முடிந்து 12 வருடங்களாகின்றன. இப்போது தொழிலில் பிரச்சனை.

நான் சொல்வது சரியா.

100% எல்லாமே சரிங்க. என் தொழில் பிரச்சனை எப்போது தீரும் என்று கேட்கதான் வந்தேன் சுவாமிஜி.

இன்னும் 3 மாதங்களில் தீர்ந்துவிடும். கவலைப்படாமல் போங்கள்.

நன்றி சுவாமிஜி. இந்தாருங்கள் இப்போது என் காணிக்கை பத்தாயிரம் ரூபாய்.

நன்றி அதை அங்கே வைத்துவிட்டுப்போங்கள்.

*******************
குருவே இன்னைக்கு நல்ல கலெக்க்ஷன் போல

ஆமாம் சிஷ்யா.
குருவே நானும் வெளியில் இருந்து கேட்டுட்டுதான் இருந்தேன். எப்படி எல்லாத்தையும் அவ்வளவு கரக்டா சொன்னீங்க.

வேற ஒன்றுமில்லை சிஷ்யா. அவன் என் பால்ய சிநேகிதன். அவன் உள்ளே நுழைந்ததும் நான் அவனை அடையாளம் கண்டுகொண்டேன். ஆனால் நான் தாடி எல்லாம் வைத்துக்கொண்டிருப்பதால் அவன் என்னை அடையாளம் காணவில்லை. அதுவுமில்லாமல் 12 வருடங்கள் ஆகிவிட்டன அல்லவா அடையாளம் காண்பது சிரமமே.

அது சரி. தொழிலில் நஷ்டம் என எப்படி சொன்னீர்கள்.

நாளிதழ் பார்த்து தெரிந்துகொண்டேன்.

3 மாதங்களில் சரியாகிவிடும் என்று சுவாமிஜி சொன்னதால் உற்சாகமாக எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு தீர்த்துவிட்டார் தொழிலதிபர்.

****************
6 மாதங்களுக்கு பின்.

சுவாமிஜியைத்தேடி வந்தார் தொழிலதிபர்.

சுவாமிஜி தங்களுக்காக நான் என்னுடைய 25 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் ஒன்று அமைத்துள்ளேன். ஆசிரமத்தை சுற்றிலும் தோட்டங்கள் செடி கொடிகள் என அருமையாக உள்ளது.
தங்கள் இனிமேல் ஆசிரமத்திற்கு வந்து சேவையாற்ற வேண்டும் என்றார்.

எல்லாம் அவன் செயல். நான் வேறென்ன சொல்ல போகிறேன்.

அப்பா இப்போதான் நமக்கு குடிசையில் இருந்து கோபுரத்திற்கு போற அதிர்ட்ஷம் வந்திருக்கு என்று சந்தோசத்துடன் சென்றான் சிஷ்யன் சிகாமணி.

முற்றும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

அவளா அப்படி(சிறுகதை)


கண்ணன் மாலை காய்கறி வாங்க கடைத்தெருவிற்கு போயிருந்தான்.

காய்கறி வாங்கிக்கொண்டு திரும்பும் போது கண்ணா கண்ணா என்று அழைத்த குரல்கேட்டு திரும்பினான். அவர்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் வாசுதேவன்.

ரொம்ப நாளா உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனுமின்னு ஆனா உங்களை பாக்கவே முடியறதில்லை.

ம் சொல்லுங்க என்றான்.

இது என் Wife சொன்ன விசயம். உங்க wife Daily நீங்க ஆபிஸிக்கு போன உடனே ஒரு 2 மணிநேரம் எங்கயோ போய்ட்டு வராங்கலாம். இது தினமும் நடக்குதாம்.

எதுக்கும் உங்க காதுலயும் போட்டு வைக்கலாமின்னு. சரிங்க வாசுதேவன். நான் என்ன ஏதுன்னு பாக்கறேன். அவசரமாய் சொல்லிவிட்டு நழுவினான்.

ஒரே குழப்பமாக இருந்தது கண்ணனுக்கு தன் மனைவி தன்னிடம் எதையும் மறைத்ததில்லையே. எங்கு செல்கிறாள் தினமும். நாளை சென்று பார்த்துவிடவேண்டியதுதான்.

அடுத்தநாள் அலுவலகம் செல்லுவதாக சொல்லிவிட்டு தெரிந்த நண்பனின் கடையில் wait பண்ணினான். தன் மனைவி கிளம்பியபின் பின்தொடர்வதற்காக.

கண்ணனுடைய மனைவி ரேவதி வீட்டைவிட்டு கிளம்பினாள். இவனும் சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்.
அங்கே ஒரு ஆசிரமத்திற்குள் நுழைந்தாள். பிள்ளைகள் படிப்பதற்கான பள்ளிகளும் ஆசிரமத்திலேயே இருந்தன. அங்கே சென்றாள் அவன் மனைவி. இவனும் பின்தொடர்ந்தான்.

3ம்வகுப்பிற்குள் நுழைந்த அவளை பார்த்தவுடன் ஒரு சிறுமியை அவளிடம் அனுப்பிவைத்தார் ஆசிரியை.

கண்ணன் ஒரு மரத்தின் பின்னே ஒளிந்துகொண்டான். அந்த சிறுமிக்கு தான் கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸை தந்தாள்.
அவளும் மம்மி நாளைக்கு சீக்கிரமே வர்ரீயா என்றாள். ம் சரிம்மா. நீ சமத்தா படிக்கனும். மம்மி போய்டு வரேன் என்றாள்.

வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் மனைவி ரேவதி. கண்ணனுக்கு பல எண்ணங்கள் பலபல குழப்பங்கள். அந்த சிறுமி பார்ப்பதற்கு வேறு தன் மனைவியின் சாயலிலேயே இருந்ததால் குழப்பம் அதிகமாகியது. ஒருவேளை திருமணத்திற்கு முன் தவறான தொடர்பு இருக்குமோ அதனால் பிறந்த குழந்தையோ. கண்ணனுக்கு யோசித்து யோசித்து தலைவலித்தது.

மாலை எப்போதும் போல வீடு திரும்பினான். என்னங்க இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கீங்க. ஆபிஸ்ல ரொம்ப வேலையோ என்றாள்.

இதுக்கும் ஒன்னும் கொறச்சலில்லை மனதில் நினைத்துக்கொண்டான்.

காலைல எங்க போன நான் ஒரு பைல எடுக்கறதுக்காக வந்தேன். வீடு lock பண்ணியிருந்துச்சு என்றான்.

கடைத்தெருவிக்கு போனேங்க என்றாள்.

இது சரிப்படாது. நேரடியாகவே விசயத்திற்கு வந்தான். யார் அந்த குழந்தை. காலைல நடந்ததெல்லாம் நான் பாத்திட்டு தான் இருந்தேன்.

ரேவதியின் முகம் இருட்டிபோய்விட்டது. அது வந்து அது வந்து என்று இழுத்தாள்.

ம் சொல்லு கர்ச்சித்தான்.

அது எங்க அக்காவோட குழந்தைங்க. அக்காவும் மாமாவும் லவ் மேரேஜ்ங்கறாதால எங்கஅம்மா அப்பாவோ அவங்க அம்மா அப்பாவோ அவங்க கல்யாணத்த ஒத்துக்கலை. அதுமட்டுமில்ல அவளை தலைமுழுகிட்டாங்க. ஆனா நான் மட்டும் அவகூட கான்டக்ட்ல இருந்தேன்.

இரண்டு பேரும் ஒருநாள் பைக் ஆக்ஸிடேன்ட்ல இறந்துட்டாங்க. குழந்தைய ஆயா பொறுப்புல விட்டுட்டுபோயிருந்தாங்க. இந்த விசயம் இதுவரைக்கும் எங்க அப்பாஅம்மாவுக்கு கூட தெரியாதுங்க. அவங்க எங்கியோ இருக்கறதாதான் நினைச்சிட்டு இருக்காங்க.

நான்தான் குழந்தைய ஆசிரமத்துல சேத்து வளக்கறதுக்கு ஏற்பாடு பண்ணேன். என்னை மன்னிச்சுடுங்க உங்ககிட்ட சொல்லாததுக்கு என்று அழுதாள்.

இதை என்கிட்ட முன்னமே சொல்லியிருந்தா குழந்தைய நாமளே வளர்த்திருக்கலாமில்ல நமக்கும் கல்யாணமாகி 6 வருசமாக குழந்தையில்ல. நம்ம குழந்தையா அவளை பாத்திருக்கலாமில்ல.

சரி சரி கிளம்பு நம்ம போய் குழந்தைய அழைச்சிட்டு வந்திரலாம் என்றான் குழப்பங்கள் நீங்கபெற்ற கண்ணன். ரேவதியும் மகிழ்ச்சியாக கிளம்பினாள்.

முற்றும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தம்பதியருக்காக-காதலர் தின வாழ்த்துக்கள்.


கரம்பிடித்த நாள்முதலாய்
இன்பத்தில் இணையாக
துன்பத்தில் துணையாக

பருவங்கள் பலகடந்தும்
துளியும் குறையாத
காதலுடன் வாழும்

தம்பதிகள் அனைவருக்கும்
இனிய காதலர்தின
வாழ்த்துக்கள்.

வற்றா நேசத்துடன்
வளமான வாழ்க்கையை
தொடருங்கள் இனிதாக.

எதிர்கால பக்கங்களில்
உண்மை நேசத்திற்கு
உதாரணமாய் சிறந்திடுவீர்.

எமதா்மராசாவின் தீா்பு

மூன்று முக்கியமான அரசியல் தலைவர்கள் ஆட்டோ ரிக்சாவில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு விபத்து ஏற்படுகிறது. மூன்று பேரும் இறந்துவிடுகின்றனர்.

இவர்களின் மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் எமதர்மராஜா அவர்களை எமலோகத்திற்கு கூட்டிச்செல்கிறான். அவர்களின் பெயர் XX,AA,BB என வைத்துக்கொள்வோம்.(நிஜ தலைவர்கள் பெயர் வைத்தால் ஆட்டோ வரும்னு பயமா இருக்கு)

எமராஜா XX மற்றும் AA இருவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கிறார்.

BB யை நரகத்திற்கு அனுப்பிவைக்கிறார். BB இது என்ன அநியாயமான தீர்பாகவுள்ளது. அவர்களும் தான் நிறைய குற்றங்கள் செய்து உள்ளனர். மக்கள் பணத்தில் சொத்துக்கள் சேர்த்துக்கொண்டுள்ளனர். என்னைமட்டும் ஏன் நரகத்திற்கு அனுப்பினீர்கள் என கேள்வி எழுப்பினார்.

சரி உங்களுக்கு நான் ஒரு பரிச்சை வைக்கிறேன். அதில் பாசாகிறவர்கள் சொர்கத்திற்கு பெயில் ஆகிறவர்கள் நரகத்திற்கு என்றார் எமதர்மராசா.

மூவரும் பரிச்சைக்கு ஒத்துக்கொண்டனர். எமராசா XX அவர்களிடம் இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றது என்ற கேள்வியை கேட்டார். XX -1947 என்று சரியான விடையை சொன்னார். XX பாசாகிவிட்டதால் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.


AA அவர்களிடம் சுதந்திரப்பேராட்டத்தின்போது எத்தனைபேர் இறந்தனர். மூன்று விடைகளில் ஒன்றை தேர்தெடுக்கலாம் என்றார். 100000,200000,300000. AA -200000 என்ற சரியான விடையை தேர்தெடுத்ததால் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

BB அவா்களிடம்சுதந்திரப்பேராட்டத்திற்காக இறந்த இரண்டு இலட்சம் பேர்களின் பெயர்களை எழுதுக என்றார் எமதர்மராசா. BBக்கு பதில் தெரியாததால் பெயிலாகிவிட்டார். நரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

கதையின் நீதி : தலைமை(MANAGEMENT) என்ன முடிவெடுக்கிறதோ அதை எப்படியும் செயல்படுத்தியே தீரும்.


முற்றும்

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

இணையத்தில் கிடைத்தவைஆழமறிந்து.நர்மதா ஒரு கணிப்பொறி சார்ந்த நிறுவனத்தின் சென்னை கிளையில் வேலை செய்கிறாள். தனக்கு கொடுக்கப்பட்ட வேலை முடிந்ததும் orkut ல் scrap செய்வதும் google ல் chat செய்வதுமே அவள் வேலை. இதன் வழியாக நண்பனாக அறிமுகம் ஆனான் தினேஷ்.

பார்க்காமலேயே நர்மதா தினேஷின் நட்பு நாளுக்குநாள் வளர்ந்தது. காதலாக மலர்ந்தது. தான் பெங்களுரில் கணிப்பொறி நிறுவனத்தில் வேலைசெய்வதாக சொன்னான். ஒருநாள் நேரில் சந்திப்பதாகவும் சொன்னான். நர்மதாவும் அவனை தன் வீட்டிற்கு அழைத்தாள். அவனும் வந்து நர்மதாவின் தாய்தந்தையிடம் நன்கு பேசினான். பார்ப்பதற்கும் அழகனாக தெரிந்தான்.

நர்மதாவின் அலுவலக நண்பர்கள் சரியாக விசாரிக்காமல் யாரோ ஒருவனை நம்பாதே. திருமணம் செய்துகொள்ளாதே என அறிவுரை கூறினர். நிஜத்தில் நடந்த பல விசயங்களையும் சொல்லி நர்மதாவை எச்சரித்தனர். நர்மதா யார் பேச்சையும் கேளாமல் தன் காதலில் உறுதியாக இருந்தாள். மனிதன் என்று பிறந்துவிட்டால் யாராவது ஒருவரை நம்பி அல்லது சார்ந்துதான் வாழவேண்டும். நான் தினேஷை நம்புகிறேன். அதற்கும் மேலே என்னை நம்புகிறேன். எந்த ஒரு தீமையும் என்னை எப்போதும் அணுகாது என்பதில் உறுதியாய் நேர்மறை எண்ணத்தோடு இருக்கிறேன் என்றாள்.

தனக்கு தாய்தந்தை யாரும் இல்லையெனவும் அதனால் நாம் திருமணம் முடிந்தவுடன் சென்னையிலேயே வேலைபார்த்து செட்டில் ஆகிவிடலாம் என்றும் கூறினான். நர்மதாவும் சரிஎன்றாள்.

ஒரு சுபயோக சுபதினத்தில் நர்மதா தினேஷின் திருமணம் நடந்தது. தினேஷிற்கு சென்னையிலேயே வேலையும் கிடைத்தது.
மனம்போல் மாங்கல்யம் அடையப்பெற்ற இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினர்.

குறையப்போகும் மக்கள்தொகை.

2050 ஆண்டு வாக்கில் மக்கள்தொகை மிக அதிக அளவில் குறையும். விவரங்களுக்கு பின்வரும் கட்டுரையைப் படிக்கவும்

NEGATIVE POPULATION GROWTH

The latest data from the Population Reference Bureau shows that there are twenty countries in the world with negative or zero natural population growth. This is unprecedented in history!
This negative or zero natural population growth means that these countries have more deaths than births or an even number of deaths and births; this figure does not include the impacts of immigration or emigration. Even including immigration over emigration, only one of the twenty countries (Austria) is expected to grow between 2006 and 2050.
The country with the highest decrease in the natural birth rate is Ukraine, with a natural decrease of 0.8% each year. Ukraine is expected to lose 28% of their population between now and 2050 (from 46.8 million now to 33.4 million in 2050).
Russia and Belarus follow close behind at a 0.6% natural decrease and Russia will lose 22% of their population by 2050 – that is a loss of more than 30 million people (from 142.3 million today to 110.3 million in 2050).
Japan is the only non-European country in the list and it has a 0% natural birth increase and is expected to lose 21% of its population by 2050 (shrinking from 127.8 million to a mere 100.6 million in 2050). The streets of Tokyo won’t be as crowded in a few decades as they are today!
Here's the list of the countries with negative natural increase or zero negative increase in population...
Ukraine: 0.8% natural decrease annually; 28% total population decrease by 2050
Russia: -0.6%; -22%
Belarus -0.6%; -12%
Bulgaria -0.5%; -34%
Latvia -0.5%; -23%
Lithuania -0.4%; -15%
Hungary -0.3%; -11%
Romania -0.2%; -29%
Estonia -0.2%; -23%
Moldova -0.2%; -21%
Croatia -0.2%; -14%
Germany -0.2%; -9%
Czech Republic -0.1%; -8%
Japan 0%; -21%
Poland 0%; -17%
Slovakia 0%; -12%
Austria 0%; 8% increase
Italy 0%; -5%
Slovenia 0%; -5%
Greece 0%; -4%

அன்றும் இன்றும்

ஏங்க இங்க பாருங்க உங்களத்தான்

என்ன என்றான் சுகுமார்.

பக்கத்து வீட்டு மாலா நிலம் வாங்கிட்டாங்க. பெரிய ரியல் எஸ்டேட் வியாபாரிகிட்டங்க. முதல்ல லட்சம் ரூபா கட்டினாப் போதுமாம். அப்புறம் மாசாமாசம் தவணைல கட்டலாமாம் நல்ல திட்டமா இருக்குங்க. நாமாளும் வாங்கலாங்க.

இப்ப லட்ச ரூபாய்க்கு எங்க போறது.

கடனை கிடனை வாங்கி வாங்கலாங்க. கடன் என்ற வார்த்தையே பிடிக்காது சுகுமாருக்கு.

அதல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. வாங்கறதார்ந்த மொத்தகாசும் குடுத்து வாங்கனும். சும்ம தொண தொணங்கதா.

நான் சொல்லி எத நீங்க கேட்டு இருக்கீங்க. ம் எல்லாம் என் தலையெழுத்து.

இதைச்சொல்லிசொல்லியே புலம்பிக்கொண்டிருந்தாள் 3 மாதகாலமாக.

சுகுமார் அன்று லேட்டாக வீட்டிற்கு வந்தான்.

என்னங்க உங்களுக்க விசயம் தெரியுமா?

என்ன என்றான்.

அந்த REAL ESTATE வியாபாரி மொத்த பணத்தையும் சுருட்டிட்டு ஓடிட்டானாங்க. TV News ல சொன்னாங்க.

நல்லவேல நாம தப்பிச்சோம். வாங்கியிருந்தா 1 லட்சரூபா போயிருக்கும் என்றாள். நீங்க வாங்கவேணா சொன்னது நல்லதாப்போச்சு என்றாள் சந்தோசமாக.

முற்றும்

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

சுயநலத்தின் உச்சங்கள்.

உண்மைச்சம்பவங்கள்.

சம்பவம்-1இது சென்ற வருடம் நடந்த உண்மை சம்பவம்(நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்). தன் பழைய காதலுக்காக மெத்த படித்த கணிப்பொறி துறையில் பணியாற்றிய மாதம் 3 லட்சத்திற்கு மேல் சம்பாதித்த மேதாவி ஒருவர் தன் மனைவியை(மனைவி பெங்களுர் IBM ல் 60000 ஊதியத்திற்கு வேலை செய்து கொண்டு இருந்தாராம்) இரும்புகம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு யாரோ கொன்றதுபோல் நாடகமாடி பின் அகப்பட்டுகொண்டார். இத்தனைக்கும் அவருடைய பழைய காதலி ஒன்றும் திருமணமாகாமல் இல்லை. திருமணமாகி விவாகரத்து வாங்கினவராம்.(இது எப்படி இருக்கு பாருங்க அந்த அம்மணிகிட்ட மாட்டின அப்பாவி யாரோ)

சம்பவம்-2இது 2006ம் ஆண்டு மூணாறில் நடந்த சம்பவம். திருமணமான சில நாட்களிலே கணவனை தன் பழைய காதலன் துணையுடன் கொன்றாள் வித்யா என்கிற பெண். நகைகளுக்காக யாரோ கொன்றார்கள் என்று நாடகமாட எண்ணியிருக்கிறார்கள். பின் மாட்டிக்கொண்டார்கள்.

இதுபோல எத்துணை எத்துணையோ தினசரி பத்திரிகைகளில் வாசிக்கிறோம். இது போன்ற நபர்களுக்கு பிறர் உயிரை பறிக்கும் அதிகாரத்தை வழங்கியது யார். தனக்காக தன் சுயநலத்திற்காக அடுத்தவர் உயிரை எடுக்கும் அளவிற்கு விஷவிருட்சம் அவர்கள் மனதில் விதைத்தது யார்.

முதல் சம்பவத்தில் திருமணத்திற்கு முன்னமே தனக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி இருக்கலாம். அல்லது திருமணம் நடந்த பிறகாவது அந்த பெண்ணிடம் தன் பழைய காதலை கூறி விவாகரத்து வாங்கிக்கொண்டு இருக்கலாம். அந்தப்பெண் உயிருடன் தன் சம்பாத்தியத்தில் வாழ்ந்திருப்பாள். எதுவுமே செய்யாமல் தானும் இப்போது கம்பி எண்ணிக்கொண்டு மனைவியையும் வாழவிடாமல் செய்துவிட்டான் அந்த சுயநலமி.


இரண்டாவது சம்பவத்திலும் அப்படியே இந்த மெத்த படித்த இது போன்று வாழ்க்கையை படிக்காமல் தானும் கெட்டு பிறர் வாழ்க்கையும் கெடுக்கும் சுயநலத்தின் உச்சங்கள் திருந்துவார்களா?

உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே தீரணும் தப்பு பண்ணவன் தண்டனை அனுபவித்தே தீரணும் இதுதான் உலக நியதி.

தனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ மனத்தளவிலோ உடலளவிலோ துன்பம் விளைவிக்காத செயல்களே ஒழுக்கம் என வரையறுக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

.

காதலர் தினத்திற்காக -ஆா்யா விமா்சனம்நான் குட்டி படம் பார்க்கவில்லை. ஆனால் தெலுங்கில் ஆர்யா படம் சமீபத்தில் தான் பார்த்தேன். இந்த படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். நாயகன் ஆா்யா நாயகி கீதா மற்றொரு நாயகன் அஜய்.

அஜய் என்ற பணக்கார வாலிபன் கீதா என்ற பெண்ணை விரும்புவதாக சொல்லுகிறான். உடனடியாக காதலை சொல்லவில்லை என்றால் தான் கோபுரத்தில் இருந்து குதித்துவிடுவேன் என கூறுகிறான். கீதாவும் தோழிகளின் வற்புறுத்தலால் காதலிக்கிறேன் என்று கூறிவிடுகிறாள். தன் கொலுசை எடுப்பதற்காக ஒரு வாலிபன் கடலில் குதித்து இறந்துவிட்டான் என்று வருத்தப்படும் கீதா. அஜயும் ஏதாவது செய்து கொண்டுவிடுவான் என்ற பயத்தின் காரணமாக காதலை சொல்கிறாள்.

அவர்கள் படிக்கும் கல்லூரிக்கு புதிதாக வந்து சோ்கிறான் ஆர்யா.
அவனும் கீதாவிடம் தன் காதலை தெரிவிக்கிறான். என்காதலை நீ ஏற்றுக்கொள்ளாவிட்டால் பரவாயில்லை. என் காதலை உணர்ந்தால் போதும் என்கிறான். கீதா அவனைவெறுப்பதாக கூறுகிறாள்.

அஜய் ஆள் வைத்து ஆர்யாவை அடிக்கிறான். அஜய்க்கு வேறு பணக்கார பெண்ணாக பார்க்கிறார் அஜய்யின் தந்தை. அந்த பெண்ணும் இவர்களுடன் கல்லூரியில் படிக்கிறாள். நிறைய ஆண்நண்பர்களின் சகவாசம் உள்ளது அந்த பெண்ணிற்கு. அஜய் அதனால் அந்த பெண்ணை வெறுக்கிறான். திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று தந்தையிடம் கூறுகிறான்.

தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. கீதாவை மிரட்ட ஆள் அனுப்புகிறார். கீதா நான் இப்போது என் காதலில் தோற்றுவிட்டேன் இப்போது உனக்கு சந்தோசமா என ஆர்யாவைக் கேட்கிறாள். நான் இருக்கும்வரை உன்னை தோற்க விடமாட்டேன் என அவர்களுக்கு உதவுகிறான் ஆர்யா.

வேறிடத்திற்கு தப்பிச்செல்கின்றனர் மூவரும். ரவுடிகள் தலைவனை கீதா செருப்பால் அடித்து விடுகிறாள். இதனால் கடும் கோபம் கொள்ளும் அவன் கீதாவை தேடுகிறான். அஜயும் கீதாவும் நடந்து செல்லும்போது கீதாவை மடக்கிவிடுகிறான் ரவுடிகள் தலைவன். அஜயையும் கத்திகாட்டி மிரட்டுகிறான்.
அஜய் பயத்தில் ஓடி விடுகிறான்.

ஆர்யா கீதாவை காப்பாற்றி இருவரையும் அழைத்துச்செல்கிறான். அஜய் சொல்லாமல் கொள்ளாமல் தன் தந்தையிடம் திரும்பச்செல்கிறான். ஆர்யா கீதாவை தன் குடிசையில் நன்கு கவனித்துக்கொள்கிறான். அவனுடைய அன்பைக்கண்டு கீதா ஆர்யாவின்பால் காதல் வசப்படுகிறாள்.

அஜய் தன் தந்தையை சமாதானப்படுத்தி அழைத்துவருகிறான். அஜய் கீதாவின் திருமணமும் நிச்சயிக்கப்படுகிறது. தனக்காக கடலில் குதித்த வாலிபன் ஆர்யாதான் என அறிகிறாள் கீதா. தாலிகட்டும்நேரத்தில் தனக்கு ஆர்யாவைத்தான் பிடித்திருக்கிறது என கீதா ஆர்யாவிடம் செல்கிறாள்(சினிமாவில் இப்படி காண்பிப்பதால் தான் நிஜ வாழ்க்கையில் சில பெண்கள் இப்படி செய்கிறார்கள் போல பிறருக்கு வரும் துன்பத்தை உணராமல் தன் சுயநலத்திற்காக திருமணத்தின் போது காணாமல் போகிறார்கள் ம்ம் என் செய்ய எல்லாம் காலத்தின் கோலம்).

முற்றும்

நன்றி

வாழ்க வளமுடன்

.

கடந்து வந்த பாதை.(சிறுகதை)நரேந்திரன் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை தன் சொந்த 2 படுக்கையறை கொண்ட புது வீட்டில் அமர்ந்து கொண்டு அசைபோட ஆரம்பித்தான்.

நரேந்திரனின் அப்பாவிற்கு ஒரு அரசு அலுவலகத்தில் Clerk வேலை. நரேந்திரனுக்கு முன் மூன்று அக்காக்கள். 4 பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்தார் நரேந்திரனின் அப்பா ராகவன். வாடகை வீட்டு வாசம். வாடகை வீடே பெரியது. 1000 ரூபாய் வாடகை.(அப்போதெல்லாம் 1000 ரூபாய்க்கே பெரிய வசதியான வீடுகள் கிடைத்துக்கொண்டிருந்த காலம். இப்போது 10000 ரூபாய்க்கு கூட சென்னையில் நல்ல வசதியான வீடுகள் கிடைப்பதில்லை)

ஓய்வு பெறும் முன்னமே தன் சேமிப்பை கொண்டு தன் மகள்களை நல்ல இடங்களில் திருமணமும் முடித்துக்கொடுத்தார். நரேந்திரனையும் நன்றாக படிக்க வைத்துவிட்டார். ஓய்வு பெற்றபின் வந்த பணத்தில் ஒரு 2கிரவுண்ட் நிலம் வாங்கி 1 படுக்கையறை மற்றும் 3 அறைகள் உள்ள வீட்டை கட்டிமுடித்து விட்டார். தன் பிந்தைய வாழ்நாளை மனைவியுடன் கழித்தார் மகிழ்ச்சியுடன்.

நரேந்திரனுக்கு பாரின் போகவேண்டும் என்ற இலட்சியம். தன் எண்ணப்படியே பாரினுக்கு போய் ஒரு வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றினான். திருமணமும் முடிந்தது. தன் மனைவியுடன் அயல் தேசம் பறந்தான்.

தாய்தந்தையின் காலத்திற்கு பிறகு அப்பா கட்டிய அந்த வீட்டை விற்று 4 பேரும் பங்கிட்டுக்கொண்டனர்.


நரேந்ததிரனுக்கு 2 குழந்தைகள் 1 மகன் 1 மகள். பிள்ளைகள் பெரியவர்களும் ஆகிவிட்டனர். நரேந்திரனை பிரிந்தும் சென்றுவிட்டனர்.
அயல்தேச கலாச்சாரம் துணைகளை சீக்கிரமாகவே தேடிக்கொண்டனர். சீக்கிரமாக விவாகரத்து வாங்கி பிரிந்தும் விட்டனர்.
இப்போது வேறு துணைகளோடு இணைந்துள்ளதாக கேள்வி.(இது எவ்வளவு நாளைக்கோ ஆண்டவனுக்கே வெளிச்சம்)

நரேந்திரனுக்கு ஓய்வு பெற்றபிறகு தன் தாய்நாட்டிற்கு வந்து செட்டில் ஆக வேண்டும் என ஆசை. ஆனால் அவன் மனைவி அதற்கு உடன்படவில்லை. அவளுக்கு அமெரிக்காதான் பிடித்துள்ளதாம். அவளுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுத்துவிட்டு மீதம் இருந்த 80 லட்சம் பணத்துடன் இந்தியா திரும்பினான் நரேந்திரன்.
வீடு வாங்க அலைந்து திரிந்து சென்னை புறநகர்ப்பகுதியில் ஒரு 2 படுக்கையறைகொண்ட வீட்டை 60 லட்சத்திற்கு வாங்கினான். இப்போது புது வீட்டில் தன்னத்தனியாக யோசித்துக்கொண்டு இருக்கிறான் தான் நினைத்ததை சாதித்தோமா இல்லையா என்று.
இவ்வளவுகால அமெரிக்கா வாசத்திற்கு பிறகு தன்னால் தன் அப்பா கட்டிய வீடடைவிட 1 படுக்கையறை அதிகம் உள்ள வீட்டைத்தான் வாங்க முடிந்தது. இதற்காக தான் இழந்தது எத்துணை எத்துணை. நினைக்கையில் வருத்தமாக இருந்தது நரேந்திரனுக்கு.

நரேந்திரன் ஜெயித்தானா இல்லையா விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
.