பாவம் எனப்படுவது யாதெனின்



நாம் பாவம் என்பதற்கு ஒரு வரையறை வைத்து உள்ளோம். அந்த வரையறை என்ன?

கொலை செய்வது பாவம். திருடுவது பாவம் என்பதுதான் அந்த வரைமுறை.

ஒரு சொல்பொழிவில் நான் கேட்டது என் மனதை தொட்டது அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அது என்ன

"நல்லோரின் மனதை நடுங்க செய்வது பாவம்." நம் நலனுக்ககாக மற்றவரை நலம் கெட செய்வது பாவம்.

நம்மால் செய்ய முடிந்த நன்மையை செய்யாமல் இருப்பது கூட பாவம் தான்.
நம்மால் ஒரு வேலையை ஒருவருக்கு வாங்கி தர முடியும் என்றால் அதை வாங்கி தராமல் இருப்பது கூட பாவம் தான்.


வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறர் மனம் உடல் வருத்தா மாநெறியே ஒழுக்கம் என்கிறார்.

நாம் எத்துணை தடவைகள் பிறர் மனம் நோக செய்திருப்போம். சிந்திப்போம்.

நம் செயல்களை மாற்றி அமைப்போம்.


பெரிய பெரிய பாவங்கள் மட்டும் பாவம் அல்ல. சிறு சிறு குற்றங்கள் கூட பாவம் தான். பிறர் மனதில் ஏற்படும் அந்த ரணம் செயல் விளைவாக மாறி நமக்கு வினையாக மாறிவிடும்.

வினை பதிவே தேகம் கண்டாய்

பிறவா நிலை எய்த பாவம் செய்யாமல் இருப்போம்.

நன்றி

வணக்கம்

வாழ்க வளமுடன்

வாழ்க வையகம்.

என் பெரியம்மா

என் அம்மாவுடன் பிறந்த பெரியம்மா ஒருவர் இருந்தார். அவர் தற்சமயம் தான் இறந்து போனார். அவருடைய வாழ்வு சற்று விசித்திரம் நிறைந்தது.

பத்தி மூன்று வயதில் திருமணம் ஆகி கணவனை உடனடியாக இழந்து விட்டார்.
என் பாட்டி இந்த சிறு பிள்ளைக்கு மறுபடியும் திருமணம் செய்து விட்டார். மற்ற யாரும் தன் காலத்திற்கு பிறகு அவரை கவனிக்க மாட்டார்கள் என்று எண்ணி.

ராணுவ வீரர் ஒருவரை மணந்தார் என் பெரியம்மா. இதில் ஒரு சுவாரசியம் என்ன வென்றால் அவர் நம் நாட்டுக்காக சேவை செய்யாவில்லை. வெள்ளையர் ஆட்சி காலத்தில் ராணுவ வீரராக இருந்தார்.

முதல் கணவனுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது. அதற்கு பிறகு குழந்தை இல்லை.

என் பெரியம்மா ஒரு சிறு குடிசை விட்டில் தான் வசித்தார். ஆனால் அன்பு என்றால் அன்பு அனைவரிடத்திலும் அத்துணை அன்பு.


அந்த கிராமத்தில் போவோர் வருவோருக்கு கூட உணவு படைப்பர் என் பெரியம்மா.

சிறு வயதில் எனக்கு எந்த பெரியம்மாவை பார்த்தல் மிகுந்த பயம். அவர் வந்தாலே எனக்கு சுரம் வந்துவிடும்.

ஆனால் அவர் கடுமையானவர் இல்லை.

அவர் பேசும் பேச்சுகளை சிறு பிராயத்தில் புரிந்து கொள்ளும் பக்குவம் இன்மையால் வந்த பயம். மற்றபடி ஒன்றும் இல்லை.


இப்போது அவர் இல்லை . அவர் ஆன்ம ஆறுதல் பெற வேண்டி இந்த பதிவு.

நீங்களும் வேண்டுங்கள்

சரியாய்

நன்றி

வணக்கம்

வாழ்க வளமுடன்

வாழ்க வையகம்

முருங்கை விதை



முருங்கையை பற்றி நிறைய விஷயங்கள் கேள்விபட்டிருப்போம்.

மற்ற படி முருங்கையின் பயன்கள் உங்களுக்கு நல்லவே தெரியும்.

நான் இரண்டு நாட்கள் முன் கேள்வி முருங்கை சாம்பார் அடித்து கொள்ளவே.

ஆள்இல்லை நட்டால் தான் சிக்கிரம் காய்க்கும்மாம். naan irandu natkal mun kelvi பட்டது.



நிறைய நாட்கள் காய்க்காமல் இருந்தால் நல்லடில்லையாம்.


murungai sambar adithu kollavey aal illai

உறவு முறைகளை மாற்றாதீர்


ஒரு சிலர் உறவு முறைகளை மாற்றி அழைக்கின்றனர்.

அதை பற்றிய என் சொந்த அபிப்ராயம்.

உறவு முறைகளை மாற்றி அழைப்பது தவறு என்பது என் கருத்து.

மாமியாரை அம்மா என்கின்றனர் சிலர். அது எனக்கு அவ்வளவாக சரி என்று படவில்லை. அன்பின் நிமித்தமாக அவ்வாறு அழைகாலம். அத்தையை அத்தை என்பதே சரியான பதம் என்று நான் நினைக்கிறேன்.

அன்பு இருக்கலாம். அந்த அன்பை உறவு முறைகளை மாற்றி அழைப்பதன் முலம் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அத்தை என்று அழைத்து அன்பை வெளிபடுத்த முடியாதா என்ன.

ஒரு சிலர் நண்பர்களின் அப்பாவை அப்பா என்று அழைப்பதும் இந்த வகையில் சரியல்ல என்பது என் கருத்து.

அங்கிள் என்றே அழைக்கலாம். நண்பர்களின் அப்பாவை .

அன்பு அதிகமானால் கணவனை அண்ணன் என்போமா மாட்டோம் அல்லவா.
தவறு என்றால் மன்னித்து கொள்ளுங்கள். இது முற்றிலும் என் சொந்த அபிப்ராயம்.

நன்றி

வாழ்க வளமுடன்

வாழ்க வையகம்

நான் அவன் அல்ல



நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூர் சென்றிந்தேன். அப்போது நடந்த கதை நீங்களும் கேளுங்கள்.


என் அம்மாவுடைய ஊரில் இருந்து அடையார் நோக்கி வந்து கொண்டிருந்தேன்.

அப்போது பஸ் கண்டக்டர் ஒரு ரூபாய் தருவதற்கு பதில் ஒன்பது ரூபாய் தந்து விட்டார்.

நாங்கள் நாணயமாக அதை திருப்பி தந்து விட்டோம்.

சென்ட்ரலில் இருந்து ரயிலில் பிரயாணம் மேற்கொண்டோம்.

அப்போது பஜ்ஜி விற்கும் ஒருவர் இரண்டு பஜ்ஜி பனிரெண்டு ரூபாய் என்று கூறினார்.

நாங்களும் வாங்கினோம். இருபது ரூபாய் தந்தோம். அனால் அவர் மீதி காசை கொடுக்கவே இல்லை. கேட்டால் நான் அல்ல அது என்று கூறி விட்டார்.


நாங்கள் நாணயம் காத்தோம் .


எங்களுக்கு நாணயம் மற்றவரால் காப்பாற்ற படவில்லை.

மனம் வருந்தினோம்.

என் செய்ய. எப்படியும் சில சென்மங்கள்.

வினக்காதீர் உணவை



அவள் விகடனில் படித்தேன் எந்த செய்தியை.


இரண்டு பேர் ஜேர்மன் சென்றிருந்தனாறாம்


அவர்களை சுற்றி இருந்த அனைவரும் மிச்சம் வைக்காமல் சப்பிடனரம். ஆனால் அவர்கள் மிச்சம் வைதனரம்.

அதற்கு பைன் வசுளிதனரம்.

சோமாலியா நாட்டில் உணவு கிடைப்பதில்லை.

ஆதனால் உணவை வீணடிப்பது மனிதகுலத்திற்கு எதிராக செய்யப்படும் பாவம்
என்று சொன்னார்களாம் ..எந்த கருது எனக்கு மிகவும் பிடித்ததாக இருண்டது.
அதனால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். உணவை வீனடிகாதீர்கள்.

நானும் ஒரு தடவை உணவை வீணடிக்கும் இரு நண்பர்களை பார்த்தேன்.
கோபமாக வந்தது.

நமக்கு இருக்கிறதே என்று வீணாக்க கூடாது. நமக்கு தேவையான அளவை மட்டும் வாங்கி சாப்பிடவேண்டும்

நன்றி. வாழ்க வளமுடன்.

வாழ்க வையகம்

இடுக்கண் வருங்கால் நகுக


நான் சிறுவயதாக இருக்கும் பொது என் அம்மா ஒரு சீட்டு போட்டார்கள்.

நான்தான் சென்று கட்டினேன்.

அவர்கள் ஒரு துணிக்கடையும் வைத்து இருந்தார்கள்.

எங்களுக்கு சொன்ன நபரும் மிகவும் நேர்மையனவர்த்தன். சரி என்று நாங்கள் சீட்டு திட்டத்தில் சேர்த்தோம். கடைசிவரை கட்டியும் விட்டோம்.

எடுபதற்கான கடைசி நேரம். அப்போது சீடை நடத்தியவர் என் அம்மாவிடம் நீங்கள் அந்த பணத்திற்கு இணையான துணி வேண்டுமென்றால் எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார். என் அம்மா வேண்டாம் வேண்டாம் எனக்கு பாத்திரம் தான் வேண்டும் என்று கூறிவிட்டார்.

அடுத்த வாரம் ALL எஸ்கேப்.............. ஏதோ சிறிதளவு மனசாட்சியுடன் அவர் துணி எடுத்துகோலும் படி கூறியும் என் அம்மாதான் வேண்டாம் என்று சொல்லி மிஸ் செய்து விட்டார்.

எதை நினைத்து அழுவதா சிரிப்பத நீங்களே கூறுங்கள் ......

தங்க தோசை



பெங்களூரில் ஒரு ஹோடேலில் தங்க தோசை விர்கிரர்கலம்

எந்த வரம் குங்குமம் நாளிதழில் வெளி வந்த செய்தி இது.

ஆலிவ் எண்ணையில் செய்கிரார்கலம்.

செய்யும் முறையில் எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது.

கடைசியில் தங்க தகடை மேல் பரப்பி விடுகிரர்காலாம்.

தங்க தங்க தோசை தின்ன தின்ன ஆசை...

மலேஸ்வரிதில் கிடைக்கும்

நீங்களும் போய் உண்ணலாம்


ஓகே வ


நன்றி


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


திருமண உறுதிமொழி

திருமண உறுதி மொழி

கிறித்துவர்களில் திருமண உறுதி மொழி உள்ளது . அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
மற்ற மதத்தை சார்ந்த நண்பர்களும் தெரிந்து கொள்வதற்காக அதை எங்கே அளிக்கிறேன்.

இன்பத்திலும் துன்பத்திலும்
உடல் நலத்திலும் நோயிலும்
உனக்கு பிரமாணிக்கமையிருந்து
என் வாழ்நாளெல்லாம் உன்னை
நேசிக்கவும் மதிக்கவும்
வாக்களிக்கிறேன்



இந்த உறுதிமொழியை நாம் நினைவில் கொண்டால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன் மனைவிக்கு இடையேயான அன்பை அதிகரித்து கொள்ளலாம். அன்பை அதிகபடுத்துவோம். உறுதிமொழியை நினைவில் கொள்வோம்.

நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

ஆண்டி என்ற வார்த்தை வேண்டாமே


நிறைய பேர் ஆண்டி என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். ஆதாவது நாம் அழைபவர்க்கு என்ன வயது என்று தெரியாமலே ஆண்டி என்கிறார்கள்.

முப்பதிமுன்று வயது பெண்ணை பார்த்து முப்பது வயது ஆண் ஆன்டி என்றால் அந்த கேட்பவரின் மனோ நிலை என்னவாக இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.

ஒரு சில ஆண்கள் காயபடுத்துவதர்க்காகவே ஆன்டி என்கிறார்கள். கல்யாணமகி விட்டால் ஆன்டியாம் அதுவும் யாருக்கு ஒரு சில வயதே சிறியவர்களுக்கு.

என்ன காலம் பாருங்கள்.

அதை விட நமக்கு மற்றவர்களின் வயதை மதிப்பிட தெரியட போது மேடம் என்று அழைக்கலாம்.

ஆன்டி என்பது உறவு முறையை குறிக்கும் ஒரு சொல். யாதும் ஊரே யாவரும் கேளிர் தான் இருந்தாலும் வயதை மதிப்பிட தெரிந்தால் மட்டும் ஆன்டி என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். மற்ற நேரங்களில் மேடம் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.

புண் பட்ட மனதில் எண்ணங்களை எழுதுகிறேன்.

மாற்றங்களை ஏற்படுத்துவோம். நல்ல மாற்றங்களை ஏற்று கொள்வோம்.

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

நன்றி ..............

ஆச்சர்ய பட வாய்த்த பாட்டி



தருமம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும். செய்த தருமம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்.

நான் சென்னையில் இருந்து போளூர் நோக்கி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் ஒரு மூதாட்டி பயணம் செய்தார்.

ரயில் சிநேகம் போல பேருந்து சிநேகம் ஆரம்பித்தது. நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன்.

அவர் பல்லாவரத்தில் ஒரு ஆலயத்தில் பணி புரிவதாக கூறினார்.

ஆலயத்தை சுத்தம் செய்யும் வேலை செய்வதாக சொன்னார். இரண்டு ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும் சொன்னார். அவர் கையில் வளையல்கள் இரண்டு போட்டு கொண்டு இருந்தார். இரண்டு பதினைத்து ரூபாய் என்றார். அவர் சொன்ன என்னொரு விஷயம் தான் என்னை ஆச்சர்ய பட வைத்தது. ஆது என்னவென்றால்
அது போல ஒரு ஐம்பது வளையல்கள் வாங்கி வைத்து இருந்ததுதான். நான் அவை எதற்காக என்று கேட்டதற்கு சேத்துபட்டு (திருவண்ணாமலை) ஆலயத்தில் பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுப்பதற்கு என்று சொன்னார். என்னே ஒரு தரும சிந்தனை என்று பாருங்கள். இரண்டு லட்சம் சம்பாதிப்பவர் கூட இதை போல ஒரு காரியத்தை சிந்தனை செய்து பார்த்திருப்பார தெரியாது.

நாமும் நம்மால் இயன்ற நல்ல செயல்கள் செய்வோம். சிறப்பாக வாழ்வோம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நன்றி.