

நாம் பாவம் என்பதற்கு ஒரு வரையறை வைத்து உள்ளோம். அந்த வரையறை என்ன?
கொலை செய்வது பாவம். திருடுவது பாவம் என்பதுதான் அந்த வரைமுறை.
ஒரு சொல்பொழிவில் நான் கேட்டது என் மனதை தொட்டது அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
அது என்ன
"நல்லோரின் மனதை நடுங்க செய்வது பாவம்." நம் நலனுக்ககாக மற்றவரை நலம் கெட செய்வது பாவம்.
நம்மால் செய்ய முடிந்த நன்மையை செய்யாமல் இருப்பது கூட பாவம் தான்.
நம்மால் ஒரு வேலையை ஒருவருக்கு வாங்கி தர முடியும் என்றால் அதை வாங்கி தராமல் இருப்பது கூட பாவம் தான்.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறர் மனம் உடல் வருத்தா மாநெறியே ஒழுக்கம் என்கிறார்.
நாம் எத்துணை தடவைகள் பிறர் மனம் நோக செய்திருப்போம். சிந்திப்போம்.
நம் செயல்களை மாற்றி அமைப்போம்.
பெரிய பெரிய பாவங்கள் மட்டும் பாவம் அல்ல. சிறு சிறு குற்றங்கள் கூட பாவம் தான். பிறர் மனதில் ஏற்படும் அந்த ரணம் செயல் விளைவாக மாறி நமக்கு வினையாக மாறிவிடும்.
வினை பதிவே தேகம் கண்டாய்
பிறவா நிலை எய்த பாவம் செய்யாமல் இருப்போம்.
நன்றி
வணக்கம்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்.
2 comments:
நல்ல பதிவு சகோதரி !
nandri koodal bala
Post a Comment