என் பெரியம்மா

என் அம்மாவுடன் பிறந்த பெரியம்மா ஒருவர் இருந்தார். அவர் தற்சமயம் தான் இறந்து போனார். அவருடைய வாழ்வு சற்று விசித்திரம் நிறைந்தது.

பத்தி மூன்று வயதில் திருமணம் ஆகி கணவனை உடனடியாக இழந்து விட்டார்.
என் பாட்டி இந்த சிறு பிள்ளைக்கு மறுபடியும் திருமணம் செய்து விட்டார். மற்ற யாரும் தன் காலத்திற்கு பிறகு அவரை கவனிக்க மாட்டார்கள் என்று எண்ணி.

ராணுவ வீரர் ஒருவரை மணந்தார் என் பெரியம்மா. இதில் ஒரு சுவாரசியம் என்ன வென்றால் அவர் நம் நாட்டுக்காக சேவை செய்யாவில்லை. வெள்ளையர் ஆட்சி காலத்தில் ராணுவ வீரராக இருந்தார்.

முதல் கணவனுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது. அதற்கு பிறகு குழந்தை இல்லை.

என் பெரியம்மா ஒரு சிறு குடிசை விட்டில் தான் வசித்தார். ஆனால் அன்பு என்றால் அன்பு அனைவரிடத்திலும் அத்துணை அன்பு.


அந்த கிராமத்தில் போவோர் வருவோருக்கு கூட உணவு படைப்பர் என் பெரியம்மா.

சிறு வயதில் எனக்கு எந்த பெரியம்மாவை பார்த்தல் மிகுந்த பயம். அவர் வந்தாலே எனக்கு சுரம் வந்துவிடும்.

ஆனால் அவர் கடுமையானவர் இல்லை.

அவர் பேசும் பேச்சுகளை சிறு பிராயத்தில் புரிந்து கொள்ளும் பக்குவம் இன்மையால் வந்த பயம். மற்றபடி ஒன்றும் இல்லை.


இப்போது அவர் இல்லை . அவர் ஆன்ம ஆறுதல் பெற வேண்டி இந்த பதிவு.

நீங்களும் வேண்டுங்கள்

சரியாய்

நன்றி

வணக்கம்

வாழ்க வளமுடன்

வாழ்க வையகம்

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

பெரியம்மா" ஆன்ம ஆறுதல் பெற பிரார்த்திக்கிறோம்..

மேகா said...

நன்றி. இராசராசேசுவரி அவர்களே