தியானமும் நன்மையும்

தியானம் செய்வதால் பல வித நன்மைகள் ஏற்படுகின்றன. தியானம் பயிலுங்கள். நன்மைகளை பெருங்கள். யோகாசனமும் செய்யுங்கள். தியானம் நம்மில் உள்ள தீய பதிவுகளை நீக்குகின்றது. நல்ல பதிவுகள் நமக்குள் வளர்த்துக்கொள்ள தியானம் உதவுகின்றது. தியானம் செய்வதால் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றது.

நோய்கள் நீக்கப்படுகின்றன. பலவிதமான நோய்கள் தியானம் செய்வதால் நீங்குகின்றன. தினமும் அரைமணிநேரம் தியானமும் அரைமணி நேரம் யோகாவும் செய்யுங்கள்.

மனதில் நல்ல விதமான எண்ணங்கள் உருவாவதற்கு தியானம் மிகச்சிறந்த மருந்து. தீய விதமான எண்ணங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கு தியானம் மிகச்சிறந்த மருந்து.

எண்ணியவை எண்ணியபடியாகும் எண்ணத்தில் உருதியும் ஒழுங்கும் இருந்தால். உறுதியையும் ஒழுங்கையும் மனதில் ஏற்படுத்த தியானம் பல வகைகளில் உதவுகின்றது.

அன்பு பெருகட்டும் வளரட்டும்

அன்பு என்பது வல்லமை. அன்பு பொறுமை உள்ளது. பரிவு உள்ளது. அழுக்காறு கொள்ளாது பெருமை பேசாது. இழிவானதைச்செய்யாது. சீற்றத்திற்கு இடம் தராது. வர்மம் வைக்காது. ஆநீதியைக் கண்டு மகிழ்வுறாது. உண்மையை கண்டு உளமகிழும். அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். இது பைபிளின் வார்த்தைகள்.

நம்மிடம் எல்லாம் அன்பு உள்ளதா இல்லையா என சோதித்துக் கொள்ளலாம்.