கிசோரும் குமாரும்

கிசோர் மற்றும் குமார் ஆகிய இருவரும் உயிர் நண்பர்கள். இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின் தம்தம் வழியில் பிரிந்து சென்றனர்.

கிசோருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் குமாரின் திருமண அழைப்பிதழ் வந்தது. கிசோர் குமாரின் திருமணத்திற்கு புறப்பட்டான்.

புறப்பட முடியாத நிர்பந்தமான சூழ்நிலைக்கிடையில் புறப்பட்டான் கிசோர்.

திருமண மண்டபத்தை அடைந்தான்.

கோலகலமாக திருமண ஏற்பாடுகள் நடந்தது.

தீடீரென சலசலப்பு

மணப்பெண்ணை காணவில்லை என்று.

குமாரின் திருமணம் நின்று போனது.

கிசோருக்கு வருத்தமாகி போனது.

திரும்ப சென்று விட்டான்.

8 மாதங்களுக்கு பின் மறுபடியும் குமாரின் திருமண அழைப்பிதழ் வந்தது.

கிசோர் சென்றான். இந்த திருமணமும் பெண் காணாமல் போனதால் நின்றது.

ஏன் குமாருக்கு இப்படி நடக்கிறது.

அனைவரும் குமாருக்காக பரிதாபப்பட்டனர்.

ராசியில்லை என்றனர்.

இப்படி 5 தடவை திரும்ப திரும்ப நடந்தது.

கடைசியில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.

குமார் ராசியில்லாமல் இல்லை.

குமார் பெண்களை விற்கும் வேலையில் ஈடுபட்டான் என்ற உண்மை போலிசு விசாரணையில் தெரிந்தது.

பணத்திற்காக இப்படி எல்லாம் நண்பன் நடந்தானே என்ற வேதனை கிசோருக்கு.

முற்றும்.

பழைய சோறு



முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! 

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது! 
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில: 
1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. 
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. 
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். 
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. 
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார். 
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. 
7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். 
8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். 

9.
எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10.
ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

**
பழைய சாதத்தை எப்படி செய்வது:
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.
மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)

மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!
Top of Form
Bottom of Form

காக்காவும் குயிலும் - படித்ததில் பிடித்தது


இரண்டு நாட்களுக்கு முன்னால், ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கேட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன்.

அதற்கு, தேவையில்லை என்றார் அவர். நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்..?

அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்தேன்...

இன்று, வண்டியை நான் ஓட்டவில்லை, நண்பன் ஓட்டினான். இந்த முறையும் மாட்டிக்கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அவர் விடுவதாகயில்லை.

அந்த நேரம் எனக்கு மனத்தில் "காக்கா" என்ற வார்த்தை பட்டென்று பளிச்சிட்டது. நண்பன் காதில் காக்கா என்று சொல் என்றேன். அவனும் "காக்கா சார்..." என்றான். போலீசார் முகம் போனது பார்க்க வேண்டுமே, பிறகு அமைதியாக சொன்னார்...

டேய்...எங்ககிட்டேவா...நாங்க யாரு... தமிழ் நாடு போலீஸ அவ்வளவு சீக்ரமா ஏமாத்த முடியுமா. இன்னைக்கு கோட்வேட்(password) குயில் டா...!