எலியில் இருந்து பிறந்தவன் மனிதன்

மனிதனின் முன்னோர்கள் எலியை விட சிறிய உருவம் கொண்டவர்கள்களாக இருந்தனர் என்று ஆராட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்..

500 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த இவற்றின் பண்புகள் எலியை போன்று சிறியது. அளவில் தான் எலியை ஒத்திருந்தன. ஆனால் மிக பெரிய கூர்மையான கண்கள் கொண்டவை. மரம் விட்டு மரம் தாவக் கூடியவை.

இது மனிதனின் மரபணுக்களோடு ஒத்துப்போவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இனிமேல் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை மாற்றி எலியில் இருந்து பிறந்தவன் என்று கூற ஆரம்பிக்கலாமா...


விசயம் சின்னது...விளைவோ பெரியது..

நான் பத்திரிகையில் ஒரு சம்பவம் படித்தேன். அது மனதை வெகுவாக பாதித்தது.

கணவன் மனைவிக்கு காலையில் ஒரு தகறாரு. அது என்னவென்றால் சாப்பாடு விரைவில் செய்து தரவில்லை என்பது பிரச்னை. அதற்காக கணவன் மனைவியை அடித்து விட்டார்.

அதனால் அந்த மனைவி செய்த காரியம் என்ன தெரியுமா தற்கொலை.
அவர் தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்ற கணவன் மனைவியை சாமாதான படுத்து போன் செய்து உள்ளார். அதற்குள்ளாக அந்த மனைவி இறந்து போய்விட்டார்.

என்ன கொடுமை.

அதை விட பயங்கரம்.

மாலையில் வந்த கணவன் மாமியார் விட்டிற்கு போன் செய்து விட்டு அவரும் இறந்து விட்டார்.

இப்போது பரிதவிப்பது அவர்களால் படைக்கப்பட்ட சின்னந்சிறு சிசு. அவர்களின் குழந்தை.

இவர்களுக்கு உயிர் அவ்வளவு சாதாரனமாக போய்விட்டது. சின்ன சின்ன சண்டைகளுக்கு உயிர் மாய்த்து கொள்வதா.

எந்த ஒரு பிரச்சினை என்றாலும் இந்த நிலையம் மாறும் என்பதை நினைத்து கொள்ளுங்கள்.

பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள்பிரச்சினைகள் உங்களை பார்த்து பயந்து பின்வாங்கட்டும்நீங்கள் பிரச்சினைகளை பார்த்து பின்வாங்காதீர்கள்.
நன்றி.
வணக்கம்.

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்.

அன்புடன்

அன்புள்ள நண்பர்களுக்கு ...டிப்சு

குளிக்க பயன்படுத்தும் சியக்காயில் சாப்பாடு வடித்த கஞ்சியை பயன்படுத்தினால் முடி பள பள வென இருக்கும்..

பெடுகு தொல்லை தீர தேங்காயை அரைத்து தலையில் தேய்த்து கொள்ள வேண்டும்.

இட்லி அவிக்கும் போதே பருப்பையும் ஒரு கிண்ணத்தில் வைத்து வேக வைத்துக் கொள்ளலாம்.

சில்லரை காசுகளை சமையலறையில் ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் தேவைப்படும் நேரங்களில் எடுத்துக் கொண்டு உபயோகப் படுத்தலாம்.

வெந்தயம் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்... வயிற்றுப்புண் குணமாகும்.

உடைத்த கடலை(பொட்டுக் கடலை) சாப்பிட்டால் மாதவிடாய் வருவது சில நாள் தள்ளிப் போகும்.

perlice lotion medical shop la கிடைக்கும்.. அதை apply பண்ணினால் பேன் தொல்லை நீங்கும்.

அந்தரங்கம் இது அந்தரங்கம்

இந்த வாரம் அந்தரங்கம் பகுதியில் படித்தது. நண்பர்களே தோழிகளே உங்களுக்காக பகிர்கிறேன்.

ஒரு இளம் பெண். அவளின் வயதோ 18. படிப்பதோ கல்லுரியில்.. காதல் என்பதே துளியும் பிடிக்காதாம். வேற்று மாநிலத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த இளம் பெண்.

அவளுக்கு ஒரு நண்பன். அவளுடன் பயில்கிறான். அவனின் சிந்தனைகள் இவளின் சிந்தனைளை ஒத்து இருக்கும்.

அவன் ஒருநாள் ஒரு 4 பேர் என்னுடன் வாழ்நாள் முழுவதும் வரவேண்டும் என்று நினைக்கிறேன். அந்த நால்வரில் நீயும் ஒருத்தி. என்று கூறி இருக்கிறான்.

அந்த பெண்ணிற்கு அன்றிலிருந்து வந்தது சந்தேகம். அவன் தன்னை காதலிக்கிறானோ என்று.

இந்நிலையில் ஒரு சீனியர் மாணவன் ஒருவன் அவளிடம் வந்து I LOVE YOU சொல்லியிருக்கிறான்.

அவன் நாம் நீ என்னை காதலி்க்கிறாய் என்று மட்டும் சொ்ல் பிறகு உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். எப்போதாவது மட்டும் உன்னை பார்க்கிறேன். நீயும் நன்கு படி.. நானும் என் வாழ்க்கையில் செட்டில் ஆகிறேன். அப்புறம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறான்.

ஆக சீனியரா அல்லது நண்பனா என்ற குழுப்பத்தில் மாணவி..


படிப்பில் கவனம் செலுத்துமாறு சகுந்தலா மேடம் அறிவுரை கூறியிருந்தார்கள்.

காதல் என்று ஆரம்பித்து விட்டால் மனது கல்வியை புறம் தள்ளிவிடும்.

முழுமூச்சாக படி.

காதலிக்க இது தகுந்த தருணம் அல்ல..

நடக்க வேண்டிய நேரத்தில் அது அது் தானாய் நடக்கும் என்று கூறியிருந்தார்கள். நல்ல அறிவுரை...

உழைத்தும் பயனில்லை

ஓடியோடி உழைக்கிறேன்.
ஊதியம் ஒன்றும் பெரிதில்லை.
தேடி தேடி அலைகிறேன்
கிடைக்கவில்லை ஒன்றும்

வளம் வந்து சேர
இருள் எல்லாம் ஓய
வாழ்த்துங்கள் என்னை
வளர்கிறேன் என்றும்

வளர்வது நம் கையில்

கடவுள் அழகிய முகத்தை நமக்கு தந்துள்ளார். அதில் நாம் தான் புன்னகையை வரவைக்கவேண்டும். கடவுள் நமக்கு திறமைகளை அள்ளி வழங்கியுள்ளார் நாம் தான் அதை பயன்படுத்தி வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும். எப்போதும் எனக்கு அது இல்லை இது இல்லை என்பதிற்கு பதிலாக எதெல்லாம் இருக்கிறது என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

வளர்வதற்கான பல்வேறு வசதிகளை நமக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் இறைவன். நம்மிலும் பலபேர் பல வசதிகள் இன்றி அல்லல்படுகின்றனர். நமக்கு கீழ் உள்ளவர்களுடன் நாம் நம்மை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

பள்ளிகள் பணி

அன்பு நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் வணக்கங்கள்...வாழ்த்துக்கள்..

சில பள்ளிகள் நன்கு படிக்கும் மாணவர்களை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்து கொள்கின்றன. அதை பெருமையுடன் தம்பட்டமும் அடித்து கொள்கின்றன.

நன்கு படிப்பவர்களையே சேர்த்து கொள்வதனால் எதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் மற்றும் HOD களும்.

அனைத்து மாணவர்களையும் படிக்க வைக்க தான் பள்ளிகள். நன்கு படிக்கும் மாணவர்களை மட்டும் சேர்த்து கொண்டால் மற்ற பிள்ளைகள் என்ன செய்வது.

அப்பா அம்மா படித்திருக்கனும் என்பது இன்னொரு கன்டிசன். இதுவும் தவறு... பெற்றோரே சொல்லிக் கொடுத்தால் ஆசிரியரின் பணி என்ன.

எல்லாருக்கும் எல்லாவற்றையும் பொதுவாக்கனும். முக்கியமாக கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்கனும்இதனால் ஆசிரியர்களுக்கு என்ன பெருமை வந்துவிடப்போகிறது.

அதை விட நன்கு படிக்காத மாணவர்களை சேர்த்து படிக்க வைத்தால் அதில் கிடைக்கும் மனத்திருப்தியே தனி.

அது வேறு எங்குமே கிடைக்காத ஒரு தனி திருப்தி.

பள்ளிகள் அதை உணர்வார்களா...