மழைக்கால விருப்பங்கள்

சூடாக உண்ண பிடிக்கும்
சுவையாக பேச பிடிக்கும்

போர்வை போர்த்தி தூங்க பிடிக்கும்
மழைக்கால விடுமுறை பிடிக்கும்

மின்சாரம் இருந்தால் பிடிக்கும்
மழையில் நனைதல் பிடிக்கும்

மண்வாசனை பிடிக்கும்
குடையுடன் நடக்க பிடிக்கும்

கல் மழை ரொம்ப பிடிக்கும்
தண்ணீர் பஞ்சம் தீர்வது பிடிக்கும்

மழையே உன்னை மிக மிக பிடிக்கும்
எங்களுக்கு வந்து எங்களை அடிக்கடி
குளிர செய்வாய்

நன்றி நன்றி

விடுமுறை

மனமெல்லாம் சந்தோசப்படுகிறது
நிறைய தூங்க தோன்றுகிறது
பிடித்ததை செய்ய தோன்றுகிறது

ஆழ்ந்த உறக்கம் வருகிறது
ஆனந்தம் நெஞ்சில் பொங்குகிறது
எதனால் இதெல்லாம்

விடுமுறை இன்று
நமக்கெல்லாம் விடுமுறை
இந்த விடுமுறையை
நாம் சந்தோசமாக
கழிப்போம்.

அடுத்த விடுமுறைக்காக
காத்திருப்போம்.
விடுமுறை விரைவில் வந்துவிடும்
விரைவில் எதிர்பார்க்கிறது மனம்
எதிர்பார்ப்பு நிறைவேறும் விரைவில்

ஆயுத பூசை நல்வாழ்த்துக்கள்

புத்தகங்கள் பூசை அறைக்கு சென்றன
பாத்திரங்கள் பளபளப்பாயின
வண்டிகள் வனப்பாயின

புத்தகங்கள் பாத்திரங்கள் வண்டிகள்
அனைத்தும் குங்குமம் மஞ்சள் அணிந்து
மங்கலமாக காட்சியளித்தன

புத்தகங்கள் பாத்திரங்கள் வண்டிகள்
மட்டும் இல்லாமல்
கணினிகள் மற்ற எல்லாமும்
மஞ்சள் குங்குமம் அணிந்தன

கொலு வைக்கப்பட்டது
பரிசுகள் பரிமாறப்பட்டது
மனதுகள் சங்கமமாயின
நல்வாழ்த்துக்கள்

ஆயத பூசை நல்வாழ்த்துங்கள்
உங்களுக்கு மட்டுமல்ல
ஆயுதங்களுக்கும்  தான்
புத்தகங்கள் பாத்திரங்கள் வண்டிகள்
அவற்றின் பணிகளை தொட்ர்க

ஏமாறிய பெண்

என்னங்க என் பிரண்ட்டோட பிள்ளைக்கு உடம்பு சரியில்லையாம்.

நீங்க போய் கொஞ்சம் ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போங்க

ஏய் போடி. யார் யாருக்கோ உடம்பு சரியில்லன்னா நான் ஏன் போய் பாக்கனும்.

உனக்கு வேற வேல வெட்டி இல்ல.

கெஞ்சி கூத்தாடி அனுப்பினாள் கணவனை. அவள் கணவன் இறந்து விட்டான். நீங்க போய் கொஞ்சம் உதவி செய்ங்க என்றாள்.

தொந்தரவு தாங்காமல் சென்றான் அவள் கணவன்.

இதனால் இவளுடைய தோழிக்கும் கணவனுக்கும் ஒரு வித நட்பு உருவானது. அது இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளும் அளவு போய் விட்டது.

அழுதாள். புரண்டாள் மனைவி. உதவி செய்ததால் வந்த ஆபத்தை எண்ணி எண்ணி மருகினாள்..

இப்போது அவள் கணவன் வீட்டிற்கே வருவதில்லை. அந்த பெண்ணின் வீடே கதி என்று இருக்கிறான்.

சோ தராதரம் அறிந்து உதவி செய்ய வேண்டும்.

மரங்களை துன்புறுத்தாதீர்

சாலை ஓர மரங்களில் விளம்பரம் அடங்கிய தகர சீட்டுகள் அணியால் இடிக்கும் கொடூரம் தடுப்பாரின்றி நடந்து கொண்டு வருகிறது.

பணமே பிரதானமாய் அலையும் வியாபாரிகளை விடுங்கள. சில மத போதனை அடங்கிய போர்டுகளைமரம்தோறும் அடித்து வைத்திருக்கின்றனர். எனவே மத போதனைகளை பரப்ப விரும்புபோர் மரங்களை துன்புறுத்தாமல் மத போதனை செய்ய வேண்டும்.

காதலர்கள் தங்கள் பெயர்களை மரங்களில் எழுதி வைப்பதை நிறுத்த வேண்டும்.

மரங்களை தேவையில்லாமல் வெட்டுவதை நிறுத்தவேண்டும்