தண்ணில விளையாடதே மாயா

எங்கள் வீட்டின் அருகில் ஒரு சிறு குழந்தை உண்டு. அவள் பெயர் அனுஷ்கா. அனி அனி என்று கூப்பிடுவார்கள்.

மிக அருமையாக பேசுவாள். பக்கத்து வீட்டில் தான் எப்போதும் அவள் பொழுதை கழிப்பாள். சாப்பிடுவது குளிப்பது எல்லாம் பக்கத்து வீட்டு மாயம்மா பாட்டி தான் செய்வாள்.

எல்லாரும் அவளை மாயா என்பார்கள். அனுஷ்காவும் அப்படியேதான் கூப்பிடுவாள்.

இன்று மாயம்மாவிற்கு சுரம். ஆனாலும் தன் பணியான பாத்திரம் தேய்க்கும் பணியை செய்து கொண்டிருந்தாள்.

அனுஷ்கா கூறினாள். (குழந்தை) மாயா தண்ணிலே விளையாடாதா. உனக்கு தான் உடம்பு சரியில்ல இல்ல என்கிறாள்.

எனக்கு ஒரே சிரிப்பு.. பக்கத்திலிருந்தவர்களும் இந்த குழந்தை இப்படி சொல்கிறதே என சிரித்தனர்.

2 comments:

சாய்ரோஸ் said...

குழந்தைகள் பெரியவர்களின் நடவடிக்கைகளை இமிடேட் செய்யும் தருணங்கள் எப்போதுமே ரசிக்கும்படிதான் இருக்கும்...
இந்த நிகழ்வும்கூட அப்படித்தான்...

Mary Jose said...

ஆமாம். குழந்தைகள் ரசிக்கும்படியான செயல்களை எப்போதும் செய்கிறார்கள்..

Blog Archive