உயிரை காப்பாற்றிய அஜித்

பக்கத்து வீட்டு பெண் என்கிற சினேகத்துடன் ஒரு சினிமா நடிகையை நினைக்க முடியும் என்றால் அது பாவனாதான். குழந்தை சிரிப்பு கொஞ்சும் குறும்பு என்று வலம் வந்தார். அசல் படத்தில் அஜித்திற்கு ஜோடி. அதன்பின் ஏனோ தமிழில் தலை மறைவானாலும் மலையாளம், கன்னடம் என கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

ஷீட்டிங் ஸ்பாட்டில் லேட்டானால் கூட ஸாரி சொல்லும் பழக்கம் கொண்ட நல்லவர் அஜித். ஷாலினி அஜித்தும் மேட் பார் இச் அதர். ஒரு சிறிய உதவி செய்தாலும் கூட அதை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்பவர்கள் மத்தியில் அஜித் சார் ஒரு ஜென்டில்மேன் பர்சனாலிட்டி.

பிரான்சில் அசல் பட சூட்டிங்கின் போது நாங்கள் ஒரு இந்திய உணவகத்திற்கு சென்றோம். அப்போது இரண்டு கால்கள் இழந்த ஒரு ஊனமுற்ற சின்ன பையன் அவனுடைய மூன்று சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட இருந்தது. வினாடி நேரத்தில் அஜித் சென்று அந்த சிறுவனைக் காப்பாற்றினார். நாங்கள் எல்லாரும் கைதட்டிப் பாராட்டினோம். ஆனால் இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சொல்லி விட்டார். இப்போது நான் இந்த நல்ல செயலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று பாவனா கூறினார்.

நன்றி பாவனா. இது படித்ததில் பிடித்தது. உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தது.

2 comments:

asokumar vishva said...

He is a gentleman

புகைப்படபிரியை புனிதா said...

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

Blog Archive