உண்மை உங்களுக்காக - 2

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நேற்று பார்த்தேன். அதில் ஒரு இளம்பெண் தன்னை விட இளைய பையனிடம் காதலில் விழுந்திருக்கிறாள். அவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரே வருட காதலில் ஓடிப் போய் இருக்கிறார்கள். இப்போது காதல் முடிவுக்கு வந்து பிரச்சனை ஆரம்பத்திற்கு வந்து இருக்கிறது.

இவர்கள் காதல் அர்த்தம் தெரிந்தவர்களா? அல்லது கல்யாணத்தின் அர்த்தம் தான் இவர்களுக்கு தெரியுமா?

இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்பது தான் திருமண பந்தம்.

அந்த திருமண பந்தத்தின் சிறப்பை உணர்ந்து படிக்கும் நாம் நல்ல வழி வாழ்வோம்.

நமக்கென கிடைத்த வாழ்நாள் நண்பர் தான் கணவர். அதே போல நமக்கென கிடைத்த வாழ்நாள் தோழிதான் மனைவி. அதை உணர்வோம். சிறப்பாக வாழ்வோம்.

நண்பர்களே சிந்தியுங்கள். சிறப்புடன் வாழுங்கள்

வாழ்க வையகம் .... வாழ்க வளமுடன்.

No comments:

Blog Archive