மதுரவாயில் இரட்டைக் கொலை - பாதுகாப்பாக இருந்தும் விபரீதம்

பவித்ரா மதுரவாயிலைச் சேர்ந்த இளம்பெண் வயது (23). விரைவில் திருமணம் நடக்க இருந்தது. கால்சென்டரில் பணியாற்றிக் கொண்டிருந்தாள். அவள் அம்மா இல்லத்தரசி.

அவள் தந்தை ஓட்டல் நடத்தி கொண்டு வருகிறார். இவர்கள் வாழ்க்கையில் நடந்த விபரீதம் தான் இந்த சம்பவம்.

மதுரவாயில் இரட்டைக் கொலை அரங்கேறி உள்ளது. இளம்பெண் பவித்ராவும் அவள் அம்மாவும் கொலை செய்யப்பட்டவர்கள்.

அவர்கள் வீட்டில் அத்தனை பாதுகாப்பு வசதிகளும் உள்ளனவாம். இருந்தும் கொலையாளிகள் பவித்ரா மற்றும் அவளது அம்மாவை கொலை செய்து உள்ளனர்.

இதற்கு காரணம் அவர்கள் வெளி பயணம் செய்த போது தங்கள் வீட்டின் தகவல்களை தங்களுக்குள் பேசிக் கொண்டது தான்.

இதை ஒட்டுக் கேட்ட கொலையாளிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய படு பாதக செயலை செய்துள்ளனர்.

தெரிந்தவர்கள் என்பதால் உள்ளே சேர்த்துள்ளார். டீ போட சமையலறை சென்றுள்ளார் அந்த அப்பாவி பெண்.

ஆனால் அந்த அடப்பாவிகள் இருவரும் ஈவு இரக்கம் இல்லாமல் திருமணம் நிச்சயமான இளம்பெண்ணையும் அவள் அம்மாவையும் கொன்று இருக்கிறார்கள்.

பணத்தின் மீதான ஆசை எல்லாவித தீமைக்கும் காரணமாக உள்ளது.


No comments:

Blog Archive