டிப்ஸ் பாஸ் டிப்ஸ்

சீயக்காயில் குளிப்பது உங்கள் முடிக்கும் உங்கள் சருமத்திற்கும் நல்லது.

சீயக்காயில் சாதம் வடித்த தண்ணீரை கலந்து குளித்தால் தலையும் சருமமும் பளபளக்கும். சருமத்திற்கும் முடிக்கும் மிக மிக நல்லது.

கெட்டுப் போன தேங்காயை வீணாக்காமல்அரைத்து குளிக்கும் போது தலையில் தேய்த்து கொண்டால் பொடுகு தொல்லை தீரும்.


நீ மாறு

இன்னொருத்தர் பேச்சை கேட்டு

ஆடிய மதியே

எப்போது உன் புத்தியை

பயன்படுத்துவாய்

மேத்த படித்த மேதாவியே

மேல் தட்டு வர்க்கத்தில்

இருந்தால் யாரையும் எதுவும் செய்யலாம்

என்ற எண்ணத்தை மாற்று

பாவத்தை குறை

மேஷம் ராசிபலன் - 23 - Sep - 2013

எதிரியின் தொல்லைகள் குறையும். நண்பர்கள் உங்களின் அனுகூலம் பெற விரும்புவர். தொழில் வியாபாரம் சிறக்க சிறப்பாக கூடுதல் பணி புரிவீர்கள்...

உபரி பணவரவு கிடைக்கும்..வெளியுரிலிருந்து சுபசெய்தி வந்து சேரும்.

மதியே மனம் திருந்து

முன்பிறவி பயனாய் உடல் முழுக்க
நோய்களோடு இருக்கும் நீ

இப்பிறவியிலும் ஏன்
தீமை செய்து

இன்னும் பாவத்தை சம்பாதிக்கிறாய்
பணத்தை சம்பாதிக்கும்

நீ பாவத்தை சம்பாதிக்காதே மதி
மாற்றிக்கொள் உன்னை.

மலராய் மாறு
முள்ளாய் குத்தாதே...

ராசி பலன் தனுசு ராசி(22-09-2013)

இன்று நன்றி மறந்த சிலரை நினைத்து மனம் வருத்தப் பட நேரலாம். இருப்பினும் அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். பணவரவு முக்கிய தேவைக்கு பயன்படும். தியானம் தெய்வ வழிபாடு மனநிம்மதியை தரும்.

கிசு கிசு - படித்ததில் பிடித்தது

தமன்னாவுடன்  கூட்டு சேர வேண்டும் என்பது பல நாள் ஆசை ஜீவாவிற்கு. பல கட்டமாக முயற்சித்தும் அடுத்தடுத்து ஜோடி போடுவதில் சிக்கல். இவர் மனசு வைத்தாலும் டேட்ஸ் கூடிவரணுமே? அப்டி என்ன பாஸ் தமன்னா ஸ்பெஷல்? என்றால் சிரித்துக் கொண்டே ஏடாகூடாம ஏதாவது கிளப்பாதீங்க.

கண்டேன் காதலை படத்தில் இருந்து அவரது நடிப்பில் சின்ன விருப்பம். என்று கன்னத்தில் குழி விழ சிரிக்கிறார் ஜீவா..(நம்பிட்டோம்ல)

ராசி பலன் உங்களுக்காக 21-09-2013

மேஷம்

தெரியாதவர்களிடம் பேச்சு வார்த்தைகள் வேண்டாம். பணவரவு தாமதமாகும்

ரிஷபம்

பணவரவு வருவதற்காக வாய்ப்புகள் சிலருக்கு உண்டு

மிதுனம்

அலைச்சல் அதிகரிக்கும். மனது குழப்பம் அதிகரிக்கும்

கடகம்

பணவரவில் சிக்கல்கள் அதிகரிக்கும்

கன்னி

சேர்க்கை பலன் அறிந்து சேருவது நல்லது

துலாம்

பணவரவில் தாமதம்.

விருச்சிகம்

மனஅமைதி நிலவும்

தனுசு.

இது தனுகு ராசிக்கு நல்ல நேரம். பதவி உயர்வுக்கான காலம் கைகூடும்

மகரம்
இறை வழிபாடு செய்யவும் பலன் அதிகரிக்கும்

கும்பம்

நன்மைகள் அதிக அளவில் நடைபெறும்

மீனம்
வளர்ச்சி உண்டு. கவலை உண்டு...

இன்றைய ராசி பலன் - 20-09-2013

மேஷம்

இன்று சுயதம்பட்டம் அடித்து கொள்ள வேண்டாம். முக்கியமாக அறியாத நபர்களிடன் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் உள்ள குளறுபடியை சீர்செய்யுங்கள். உடல்நிலை சீராகும். பணவரவு அளவாக கிடைக்கும்.

மிதுனம்

இன்று செயல்களில் புதுமை பரிமளிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிக்கான யோகம் உண்டு.

கடகம்
விரக்தியான மனப்பான்மை ஏற்படும்

ரிஷபம்
இன்று உங்கள் செயல்களில் மனஉறுதி நிறைந்திருக்கும்

சிம்மம்
சராசரி பணவரவு கிடைக்கும்

கன்னி
புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்

துலாம் 
இன்று பேச்சில் ஆன்மிகமும் தத்துவமும் கலந்திருக்கும்

விருச்சிகம்
இன்று நிறைவேற்ற வேண்டிய பணி ஞாபக மறதியால் தாமதமாகலாம்

தனுசு
சிறு பணிகள் கடினமாக தோன்றும். இல்லத்துறையின் அன்பு கஷ்டங்களை குறைக்கும்

மகரம்

சராசரி பணவரவு

கும்பம்
மற்றவர்களுக்கு சிரமம் தரவேண்டாம்

மீனம்
உறவினர் நண்பரின் பாராட்டு பெறுவீர்கள்


 

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் விஜய் டிவி மூலம் அறிமுகமானவர். அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அருமையாக இருக்கும். முக்கியமாக அது இது எது என்ற நிகழ்ச்சி நான் விரும்பி பார்த்தது.

மாமா மகளை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை. கோடிகளில் சம்பாதிக்கிறார். 

வாழ்க அவரின் கலைப்பணி..

 

உண்மை உங்களுக்காக - 3

ஒரு திருமணமாகாத இளைஞன். அவன் வயது 32. அவன் ஒரு பெண்ணை விரும்புகிறானாம். அந்த பெண் திருமணம் ஆனவள். இந்த உறவிற்கு என்ன பெயர்.

அந்த பெண் கணவனை விட்டு விட்டு இவனுடன் ஓடி வர ரெடியாக இருக்கிறாளாம்.

இப்படிப்பட்ட உறவுகளை தவிருங்கள். நல்ல வாழ்க்கை வாழுங்கள்.

இப்படிப்பட்ட உறவுகள் கொலைகளையும் தற்கொலைகளையும் தான் தோற்றுவிக்கின்றன.


இன்றைய ராசி பலன் படித்ததில் பிடித்தது

தனுசு
இன்று உங்கள் செயல்களில் அடுத்தவர் நலன் கருதுகிற தன்மை நிறைந்திருக்கும். 

எதிர்மறையாக செயல்பட்டவர்கள் உங்கள் அன்பிற்கு ஆட்பட்டு நேர்மறையாக செயல்படுவர்

வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி பெறுவீர்கள். உங்களின் செயல்முறை சிறந்திருக்கும்.

பணவரவில் பெறுகின்ற தாமத நிலை முடிவிற்கு வரும். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள்

வாழ்க வளமுடன்...


வாழ்க வையகம்..

நன்றி ந்ண்பர்களே.. வருகைக்கும் படித்ததற்கும்.

உண்மை உங்களுக்காக - 2

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நேற்று பார்த்தேன். அதில் ஒரு இளம்பெண் தன்னை விட இளைய பையனிடம் காதலில் விழுந்திருக்கிறாள். அவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரே வருட காதலில் ஓடிப் போய் இருக்கிறார்கள். இப்போது காதல் முடிவுக்கு வந்து பிரச்சனை ஆரம்பத்திற்கு வந்து இருக்கிறது.

இவர்கள் காதல் அர்த்தம் தெரிந்தவர்களா? அல்லது கல்யாணத்தின் அர்த்தம் தான் இவர்களுக்கு தெரியுமா?

இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்பது தான் திருமண பந்தம்.

அந்த திருமண பந்தத்தின் சிறப்பை உணர்ந்து படிக்கும் நாம் நல்ல வழி வாழ்வோம்.

நமக்கென கிடைத்த வாழ்நாள் நண்பர் தான் கணவர். அதே போல நமக்கென கிடைத்த வாழ்நாள் தோழிதான் மனைவி. அதை உணர்வோம். சிறப்பாக வாழ்வோம்.

நண்பர்களே சிந்தியுங்கள். சிறப்புடன் வாழுங்கள்

வாழ்க வையகம் .... வாழ்க வளமுடன்.

அஜித்தின் முதல் வேலை

தமிழகமே கொண்டாடும் தல தன் வாழ்க்கையைத் துவங்கியது ஒரு டூவிலர் மெக்கானி்காத்தான். இன்று F1 ரேஸ் வரை அவருக்குள்ள ஈடுபாட்டிற்கான ஆரம்பம் அப்படித் துவங்கியது தான். அதற்கு பிறகு கார்மெண்ட் நிறுவனத்தில் வேலை. பின் அதுவே காலப் போக்கில் அஜித்தின் சொந்த தொழிலாக மாறியது.

மீரா சோப்ரா - புது இந்தி நாயகி

மீரா சோப்ரா மீரா சோப்ராவின் உறவு வழி தங்கை. இந்தியில் விக்ரம்பட் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கெனவே தமிழ் தெலுங்குப் படங்களில் நடித்து பிரபலமானவர்.

நம்ம ஆர்வாவிலிருந்து எஸ். ஜே. சூர்யா வரை நம்மூர் ஷீரோக்கள் வரை நன்கு பிரபலமானவர்.

இன்னமும் மீரா யார் என்று தெரியவில்லையா? அட நம்மூர் நிலா தான் பாலிவுட்டில் மீராசோப்ராவாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

சிறந்த சர்வே இணையதளம் - பணம் சம்பாதிக்கலாம்

 நண்பர்களே நான் இன்று உங்களுக்கு சர்வே மூலம் பணம் சம்பாதிக்கும் இணைய தளத்தை பற்றி கூறுகிறேன்.

PAIDVIEWPOINT என்பது இந்த தளத்தின் பெயர்.

ஒவ்வொரு சர்வேக்கும் பணம் தருகிறார்கள்.

ஒரு நாளில் 5 நிமிடங்கள் மட்டும் செலவழித்தால் போதுமானது. இணைந்து விட்டு தொடர்ச்சியாக செய்யுங்கள். அது மிகவும் முக்கியம்.

ஒரு சர்வேக்கு இவ்வளவு என்று பணம் தருகிறார்கள். சேர்நத உடன் 1 dollar உங்கள் கணக்கில் சேர்ந்து விடும்.

இந்த பணத்தை நீங்கள் பேபால் வழியாக எடுத்துக் கொள்ளலாம்.

பேபாலில் இணையாதவர்கள் முதலில் இணையுங்கள். பேபால் என்பது இணைய வங்கி. இணையத்தின் மூலம் பணம் பெறுவதற்கு உதவுவது.

ஒரு கூகிள் கணக்கும் Pan number இருந்தால் போதுமானது. அந்த account ல் லாகின் செய்து add bank account என்று இருக்கும். அதில் உங்கள் இந்திய வங்கிக் கணக்கு எண்ணை இணைத்து விட்டு autowithdrawal என்று கொடுத்தால் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும்.

இணையத்தில் சம்பாதிக்கும் அனைத்து பணமும் என்னுடைய HDFC வங்கிக் கணக்கிற்கு வந்து விடும். தானாக வந்து விடும் ஒருமுறை நீங்கள் autowithdrawal கொடுத்தால். சரியா.

தினம் தினம் அதில் லாகின் செய்து சர்வேயை அடெண்ட் செய்யுங்கள்.. பணம் சம்பாதிக்கலாம். சிலர் இணைவதொடு நின்று விடுகிறார்கள். அப்படி செய்தால் எப்படி பணம் வரும். தினம் தினம் லாகின் செய்து பாருங்கள்.

1 survey is waiting for you என்று வரும். அதை நீங்கள் சொடுக்கி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களும் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு பொருத்தமானதை நீங்கள் தேர்தெடுக்க வேண்டும்..

Hi,

I would like to invite you to http://paidviewpoint.com/?r=4itehf
I enjoy answering quick surveys here and getting compensated for my time and opinion. Thought you'd enjoy it too.

Cheers, megajoseph

உண்மை உங்களுக்காக

நேற்று சொல்வதெல்லாம் உண்மையில் ஒரு கதை பார்த்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 14 வருடங்களுக்கு முன் ஒரு ஜோடி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளது.

அவர்களின் அன்பின் சாட்சியாக 3 குழந்தைகள். ஒரு குழந்தை இறந்து விட்டது.

இப்போது இருப்பது ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு குழந்தைகள்.

அந்த ஆணுக்கு இப்போது இன்னொரு பெண்ணுடன் கள்ளதொடர்பு.

அந்த பெண்ணும் திருமணமானவள்.

இப்போது இது போன்ற ஒழுக்கக் கேடுகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. 

அவர்கள் செய்த காதலின் பயன் தான் என்ன.

எத்தனை பேரை வேண்டுமென்றாலும் ஒரு ஆண் காதலிக்க முடியுமா?

இதற்கு வரைமுறை ஒன்றும் கிடையாதா?

இவை விடை தெரியாத கேள்விகள்.

நம்மால் முடிந்த வரை இது போன்ற ஒழுக்கக் கேடுகள் இல்லாத வண்ணம் நாம் வாழ்க்கை வாழுவோம். 

அப்போது நமது சமுதாயம் சிறிது சிறிதாக ஒரு மாற்றத்திற்கு வரும். ஏற்றம் பெறும். 

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே உயர்ந்த கொள்கை. 

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
 

தண்ணில விளையாடதே மாயா

எங்கள் வீட்டின் அருகில் ஒரு சிறு குழந்தை உண்டு. அவள் பெயர் அனுஷ்கா. அனி அனி என்று கூப்பிடுவார்கள்.

மிக அருமையாக பேசுவாள். பக்கத்து வீட்டில் தான் எப்போதும் அவள் பொழுதை கழிப்பாள். சாப்பிடுவது குளிப்பது எல்லாம் பக்கத்து வீட்டு மாயம்மா பாட்டி தான் செய்வாள்.

எல்லாரும் அவளை மாயா என்பார்கள். அனுஷ்காவும் அப்படியேதான் கூப்பிடுவாள்.

இன்று மாயம்மாவிற்கு சுரம். ஆனாலும் தன் பணியான பாத்திரம் தேய்க்கும் பணியை செய்து கொண்டிருந்தாள்.

அனுஷ்கா கூறினாள். (குழந்தை) மாயா தண்ணிலே விளையாடாதா. உனக்கு தான் உடம்பு சரியில்ல இல்ல என்கிறாள்.

எனக்கு ஒரே சிரிப்பு.. பக்கத்திலிருந்தவர்களும் இந்த குழந்தை இப்படி சொல்கிறதே என சிரித்தனர்.

மதுரவாயில் இரட்டைக் கொலை - பாதுகாப்பாக இருந்தும் விபரீதம்

பவித்ரா மதுரவாயிலைச் சேர்ந்த இளம்பெண் வயது (23). விரைவில் திருமணம் நடக்க இருந்தது. கால்சென்டரில் பணியாற்றிக் கொண்டிருந்தாள். அவள் அம்மா இல்லத்தரசி.

அவள் தந்தை ஓட்டல் நடத்தி கொண்டு வருகிறார். இவர்கள் வாழ்க்கையில் நடந்த விபரீதம் தான் இந்த சம்பவம்.

மதுரவாயில் இரட்டைக் கொலை அரங்கேறி உள்ளது. இளம்பெண் பவித்ராவும் அவள் அம்மாவும் கொலை செய்யப்பட்டவர்கள்.

அவர்கள் வீட்டில் அத்தனை பாதுகாப்பு வசதிகளும் உள்ளனவாம். இருந்தும் கொலையாளிகள் பவித்ரா மற்றும் அவளது அம்மாவை கொலை செய்து உள்ளனர்.

இதற்கு காரணம் அவர்கள் வெளி பயணம் செய்த போது தங்கள் வீட்டின் தகவல்களை தங்களுக்குள் பேசிக் கொண்டது தான்.

இதை ஒட்டுக் கேட்ட கொலையாளிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய படு பாதக செயலை செய்துள்ளனர்.

தெரிந்தவர்கள் என்பதால் உள்ளே சேர்த்துள்ளார். டீ போட சமையலறை சென்றுள்ளார் அந்த அப்பாவி பெண்.

ஆனால் அந்த அடப்பாவிகள் இருவரும் ஈவு இரக்கம் இல்லாமல் திருமணம் நிச்சயமான இளம்பெண்ணையும் அவள் அம்மாவையும் கொன்று இருக்கிறார்கள்.

பணத்தின் மீதான ஆசை எல்லாவித தீமைக்கும் காரணமாக உள்ளது.


உயிரை காப்பாற்றிய அஜித்

பக்கத்து வீட்டு பெண் என்கிற சினேகத்துடன் ஒரு சினிமா நடிகையை நினைக்க முடியும் என்றால் அது பாவனாதான். குழந்தை சிரிப்பு கொஞ்சும் குறும்பு என்று வலம் வந்தார். அசல் படத்தில் அஜித்திற்கு ஜோடி. அதன்பின் ஏனோ தமிழில் தலை மறைவானாலும் மலையாளம், கன்னடம் என கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

ஷீட்டிங் ஸ்பாட்டில் லேட்டானால் கூட ஸாரி சொல்லும் பழக்கம் கொண்ட நல்லவர் அஜித். ஷாலினி அஜித்தும் மேட் பார் இச் அதர். ஒரு சிறிய உதவி செய்தாலும் கூட அதை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்பவர்கள் மத்தியில் அஜித் சார் ஒரு ஜென்டில்மேன் பர்சனாலிட்டி.

பிரான்சில் அசல் பட சூட்டிங்கின் போது நாங்கள் ஒரு இந்திய உணவகத்திற்கு சென்றோம். அப்போது இரண்டு கால்கள் இழந்த ஒரு ஊனமுற்ற சின்ன பையன் அவனுடைய மூன்று சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட இருந்தது. வினாடி நேரத்தில் அஜித் சென்று அந்த சிறுவனைக் காப்பாற்றினார். நாங்கள் எல்லாரும் கைதட்டிப் பாராட்டினோம். ஆனால் இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சொல்லி விட்டார். இப்போது நான் இந்த நல்ல செயலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று பாவனா கூறினார்.

நன்றி பாவனா. இது படித்ததில் பிடித்தது. உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தது.

ஆத்துர் மணி ஓட்டல்

நான் தாம்பரம் சானிடோரியம் சென்றால் சாப்பிடுவது இந்த ஓட்டலில் தான். இது G.R.T நகை கடை அருகில் உள்ளது.

கலந்த சாம்பார் சாதம் அற்புதமான சுவையாக இருக்கும். அப்பளம் அல்லது பொரியல் கொடுப்பார்கள்.

நீங்கள் சாப்பிட்டு பாருங்களேன்.

உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சரோசாதேவி Vs திரிசா

படித்ததில் பிடித்தது. 

திரிசாவிற்கு நடிகை சரோசாதேவி என்றால் உயிர். பல காலமாக அவரை சந்திக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் அவரது பசிக்கு தீனயை போட்டிருக்கிரார் போட்டோகிராபர் சுந்தர்.

இரண்டு பேரையும் சேர்த்து போட்டோ எடுத்து பெரிய சைசில் பிரிண்ட் போட்டு தம் பெட்ரூமில் மாட்டி வைத்திருக்கிறார் திரிசா.

எந்தன் உயிரே. எந்தன் உயிரே

அன்னையே நீ என்னை கருத்தாங்கினாய்
இப்போது நான் கருத்தாங்கும் நேரத்திற்காக
காத்திருக்கிறாய்.


மனிதம் மறத்து போய்

மனிதம் மறத்து போய்
மற்றவர்களை புண்படுத்தி
வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா

மற்றவர்களின் சாபம் பல தலைமுறையும்
தொடரும் உணர்வோம்
நல்வழி நடப்போம்

வளம் பல பெறுவோம்
நம்மால் முடிந்த உதவி
மற்றவர்க்கு புரிவோம்
 வாழ்க வளமுடன்

மனதை திறந்து

மதியே நீ ஏன் மதியிழந்து போனாய்
மற்றவர் பேச்சை கேட்டு மனம் மறத்து போனாய்
மாண்பு இல்லாமல் நீ உயர்நிலை இருந்து என்ன பயன்

உழைப்பை நீ மதிக்காமல் மனத்தை 
ஏன் நீ சொல்லால் மிதித்தாய்
இதனால் உனக்கு உயர் சந்தோசம் கிடைத்ததா

இனியாவது நீ உழைப்பை மதிக்க கற்றுக்கொள்
மற்றவர்களின் மனதில் மகிழ்ச்சியை விதைக்க
உன் உயர்படிப்பு உதவட்டும்.

Blog Archive