ஸ்ரீமத்தானந்தா
என்ன சிஷ்யா இன்று நம் ஆசிரமத்திற்கு ஒரு ஈ காக்காயைக்கூட காணோம்.

ஆசிரமாம் பெரிய ஆசிரமம். 2 பேரு தங்கறமாதிரியான சின்ன குடிசை மனதிற்குள் நினைத்துக்கொண்டான் சிஷ்யன் சிகாமணி

ஆமாம் குருவே.
******************************
ஒரு தொழிலதிபர் காரில் போய் கொண்டிருந்தார்.

ஆண்டவா என் பிரச்சனைக்கு நல்ல தீர்வு நீதான் தரணும்.

அப்போது கண்ணில் தென்பட்டது அந்த போர்டு. ஸ்ரீமத்தானந்தா ஆசிரமம். இங்கு சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்.

**************************
காரை நிறுத்தினார். குருஜியைப்பார்க்க முடியுமா என்றார் சிஷ்யனிடம்.

இங்கே அமருங்கள். குருவிடம் கேட்டுகொண்டு வந்து சொல்கிறேன்.

குருவே. உம்மைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். அனுப்பட்டுமா.

இல்லை சிஷ்யா. நான் தியானம் பண்ணுவதாக சொல். அரை மணிநேரம் கழித்து அனுப்பு.

********************
சுவாமிஜி தியானத்தில் இருக்கிறார். ஒரு அரைமணிநேரம் வெயிட் பண்ணுங்க.
சரி என்றார் தொழிலதிபர்.

அரைமணிநேரம் கழித்து இப்ப நீங்க போகலாம்.

********************
அமருங்கள்.

தங்களின் திருநாமம் ரகு அல்லவா.

ஆகா சாமி எப்படி இவ்வளவு கரக்டா சொல்லிட்டிங்க.

அதுமட்டுமா தங்களுக்கு 2 தங்கைகள் 1 தம்பி. தங்களுக்கு திருமணம் முடிந்து 12 வருடங்களாகின்றன. இப்போது தொழிலில் பிரச்சனை.

நான் சொல்வது சரியா.

100% எல்லாமே சரிங்க. என் தொழில் பிரச்சனை எப்போது தீரும் என்று கேட்கதான் வந்தேன் சுவாமிஜி.

இன்னும் 3 மாதங்களில் தீர்ந்துவிடும். கவலைப்படாமல் போங்கள்.

நன்றி சுவாமிஜி. இந்தாருங்கள் இப்போது என் காணிக்கை பத்தாயிரம் ரூபாய்.

நன்றி அதை அங்கே வைத்துவிட்டுப்போங்கள்.

*******************
குருவே இன்னைக்கு நல்ல கலெக்க்ஷன் போல

ஆமாம் சிஷ்யா.
குருவே நானும் வெளியில் இருந்து கேட்டுட்டுதான் இருந்தேன். எப்படி எல்லாத்தையும் அவ்வளவு கரக்டா சொன்னீங்க.

வேற ஒன்றுமில்லை சிஷ்யா. அவன் என் பால்ய சிநேகிதன். அவன் உள்ளே நுழைந்ததும் நான் அவனை அடையாளம் கண்டுகொண்டேன். ஆனால் நான் தாடி எல்லாம் வைத்துக்கொண்டிருப்பதால் அவன் என்னை அடையாளம் காணவில்லை. அதுவுமில்லாமல் 12 வருடங்கள் ஆகிவிட்டன அல்லவா அடையாளம் காண்பது சிரமமே.

அது சரி. தொழிலில் நஷ்டம் என எப்படி சொன்னீர்கள்.

நாளிதழ் பார்த்து தெரிந்துகொண்டேன்.

3 மாதங்களில் சரியாகிவிடும் என்று சுவாமிஜி சொன்னதால் உற்சாகமாக எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு தீர்த்துவிட்டார் தொழிலதிபர்.

****************
6 மாதங்களுக்கு பின்.

சுவாமிஜியைத்தேடி வந்தார் தொழிலதிபர்.

சுவாமிஜி தங்களுக்காக நான் என்னுடைய 25 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் ஒன்று அமைத்துள்ளேன். ஆசிரமத்தை சுற்றிலும் தோட்டங்கள் செடி கொடிகள் என அருமையாக உள்ளது.
தங்கள் இனிமேல் ஆசிரமத்திற்கு வந்து சேவையாற்ற வேண்டும் என்றார்.

எல்லாம் அவன் செயல். நான் வேறென்ன சொல்ல போகிறேன்.

அப்பா இப்போதான் நமக்கு குடிசையில் இருந்து கோபுரத்திற்கு போற அதிர்ட்ஷம் வந்திருக்கு என்று சந்தோசத்துடன் சென்றான் சிஷ்யன் சிகாமணி.

முற்றும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

No comments: