இவர்களின் மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் எமதர்மராஜா அவர்களை எமலோகத்திற்கு கூட்டிச்செல்கிறான். அவர்களின் பெயர் XX,AA,BB என வைத்துக்கொள்வோம்.(நிஜ தலைவர்கள் பெயர் வைத்தால் ஆட்டோ வரும்னு பயமா இருக்கு)
எமராஜா XX மற்றும் AA இருவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கிறார்.
BB யை நரகத்திற்கு அனுப்பிவைக்கிறார். BB இது என்ன அநியாயமான தீர்பாகவுள்ளது. அவர்களும் தான் நிறைய குற்றங்கள் செய்து உள்ளனர். மக்கள் பணத்தில் சொத்துக்கள் சேர்த்துக்கொண்டுள்ளனர். என்னைமட்டும் ஏன் நரகத்திற்கு அனுப்பினீர்கள் என கேள்வி எழுப்பினார்.
சரி உங்களுக்கு நான் ஒரு பரிச்சை வைக்கிறேன். அதில் பாசாகிறவர்கள் சொர்கத்திற்கு பெயில் ஆகிறவர்கள் நரகத்திற்கு என்றார் எமதர்மராசா.
மூவரும் பரிச்சைக்கு ஒத்துக்கொண்டனர். எமராசா XX அவர்களிடம் இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றது என்ற கேள்வியை கேட்டார். XX -1947 என்று சரியான விடையை சொன்னார். XX பாசாகிவிட்டதால் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
AA அவர்களிடம் சுதந்திரப்பேராட்டத்தின்போது எத்தனைபேர் இறந்தனர். மூன்று விடைகளில் ஒன்றை தேர்தெடுக்கலாம் என்றார். 100000,200000,300000. AA -200000 என்ற சரியான விடையை தேர்தெடுத்ததால் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
BB அவா்களிடம்சுதந்திரப்பேராட்டத்திற்காக இறந்த இரண்டு இலட்சம் பேர்களின் பெயர்களை எழுதுக என்றார் எமதர்மராசா. BBக்கு பதில் தெரியாததால் பெயிலாகிவிட்டார். நரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
கதையின் நீதி : தலைமை(MANAGEMENT) என்ன முடிவெடுக்கிறதோ அதை எப்படியும் செயல்படுத்தியே தீரும்.
முற்றும்
நன்றி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
5 comments:
கரெக்டுதான்
இது யாருக்கு
அடப் பாவிங்களா..,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாமலையான்,சங்கா்,சுரேஷ்
கதை நல்லா இருக்கு - தலைமை நினைத்ததை முடிக்கும் ஆற்றல் உடையது - நாம் தலைமைக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.
Post a Comment