கடந்து வந்த பாதை.(சிறுகதை)



நரேந்திரன் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை தன் சொந்த 2 படுக்கையறை கொண்ட புது வீட்டில் அமர்ந்து கொண்டு அசைபோட ஆரம்பித்தான்.

நரேந்திரனின் அப்பாவிற்கு ஒரு அரசு அலுவலகத்தில் Clerk வேலை. நரேந்திரனுக்கு முன் மூன்று அக்காக்கள். 4 பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்தார் நரேந்திரனின் அப்பா ராகவன். வாடகை வீட்டு வாசம். வாடகை வீடே பெரியது. 1000 ரூபாய் வாடகை.(அப்போதெல்லாம் 1000 ரூபாய்க்கே பெரிய வசதியான வீடுகள் கிடைத்துக்கொண்டிருந்த காலம். இப்போது 10000 ரூபாய்க்கு கூட சென்னையில் நல்ல வசதியான வீடுகள் கிடைப்பதில்லை)

ஓய்வு பெறும் முன்னமே தன் சேமிப்பை கொண்டு தன் மகள்களை நல்ல இடங்களில் திருமணமும் முடித்துக்கொடுத்தார். நரேந்திரனையும் நன்றாக படிக்க வைத்துவிட்டார். ஓய்வு பெற்றபின் வந்த பணத்தில் ஒரு 2கிரவுண்ட் நிலம் வாங்கி 1 படுக்கையறை மற்றும் 3 அறைகள் உள்ள வீட்டை கட்டிமுடித்து விட்டார். தன் பிந்தைய வாழ்நாளை மனைவியுடன் கழித்தார் மகிழ்ச்சியுடன்.

நரேந்திரனுக்கு பாரின் போகவேண்டும் என்ற இலட்சியம். தன் எண்ணப்படியே பாரினுக்கு போய் ஒரு வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றினான். திருமணமும் முடிந்தது. தன் மனைவியுடன் அயல் தேசம் பறந்தான்.

தாய்தந்தையின் காலத்திற்கு பிறகு அப்பா கட்டிய அந்த வீட்டை விற்று 4 பேரும் பங்கிட்டுக்கொண்டனர்.


நரேந்ததிரனுக்கு 2 குழந்தைகள் 1 மகன் 1 மகள். பிள்ளைகள் பெரியவர்களும் ஆகிவிட்டனர். நரேந்திரனை பிரிந்தும் சென்றுவிட்டனர்.
அயல்தேச கலாச்சாரம் துணைகளை சீக்கிரமாகவே தேடிக்கொண்டனர். சீக்கிரமாக விவாகரத்து வாங்கி பிரிந்தும் விட்டனர்.
இப்போது வேறு துணைகளோடு இணைந்துள்ளதாக கேள்வி.(இது எவ்வளவு நாளைக்கோ ஆண்டவனுக்கே வெளிச்சம்)

நரேந்திரனுக்கு ஓய்வு பெற்றபிறகு தன் தாய்நாட்டிற்கு வந்து செட்டில் ஆக வேண்டும் என ஆசை. ஆனால் அவன் மனைவி அதற்கு உடன்படவில்லை. அவளுக்கு அமெரிக்காதான் பிடித்துள்ளதாம். அவளுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுத்துவிட்டு மீதம் இருந்த 80 லட்சம் பணத்துடன் இந்தியா திரும்பினான் நரேந்திரன்.




வீடு வாங்க அலைந்து திரிந்து சென்னை புறநகர்ப்பகுதியில் ஒரு 2 படுக்கையறைகொண்ட வீட்டை 60 லட்சத்திற்கு வாங்கினான். இப்போது புது வீட்டில் தன்னத்தனியாக யோசித்துக்கொண்டு இருக்கிறான் தான் நினைத்ததை சாதித்தோமா இல்லையா என்று.
இவ்வளவுகால அமெரிக்கா வாசத்திற்கு பிறகு தன்னால் தன் அப்பா கட்டிய வீடடைவிட 1 படுக்கையறை அதிகம் உள்ள வீட்டைத்தான் வாங்க முடிந்தது. இதற்காக தான் இழந்தது எத்துணை எத்துணை. நினைக்கையில் வருத்தமாக இருந்தது நரேந்திரனுக்கு.

நரேந்திரன் ஜெயித்தானா இல்லையா விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
.

No comments: