ஆழமறிந்து.



நர்மதா ஒரு கணிப்பொறி சார்ந்த நிறுவனத்தின் சென்னை கிளையில் வேலை செய்கிறாள். தனக்கு கொடுக்கப்பட்ட வேலை முடிந்ததும் orkut ல் scrap செய்வதும் google ல் chat செய்வதுமே அவள் வேலை. இதன் வழியாக நண்பனாக அறிமுகம் ஆனான் தினேஷ்.

பார்க்காமலேயே நர்மதா தினேஷின் நட்பு நாளுக்குநாள் வளர்ந்தது. காதலாக மலர்ந்தது. தான் பெங்களுரில் கணிப்பொறி நிறுவனத்தில் வேலைசெய்வதாக சொன்னான். ஒருநாள் நேரில் சந்திப்பதாகவும் சொன்னான். நர்மதாவும் அவனை தன் வீட்டிற்கு அழைத்தாள். அவனும் வந்து நர்மதாவின் தாய்தந்தையிடம் நன்கு பேசினான். பார்ப்பதற்கும் அழகனாக தெரிந்தான்.

நர்மதாவின் அலுவலக நண்பர்கள் சரியாக விசாரிக்காமல் யாரோ ஒருவனை நம்பாதே. திருமணம் செய்துகொள்ளாதே என அறிவுரை கூறினர். நிஜத்தில் நடந்த பல விசயங்களையும் சொல்லி நர்மதாவை எச்சரித்தனர். நர்மதா யார் பேச்சையும் கேளாமல் தன் காதலில் உறுதியாக இருந்தாள். மனிதன் என்று பிறந்துவிட்டால் யாராவது ஒருவரை நம்பி அல்லது சார்ந்துதான் வாழவேண்டும். நான் தினேஷை நம்புகிறேன். அதற்கும் மேலே என்னை நம்புகிறேன். எந்த ஒரு தீமையும் என்னை எப்போதும் அணுகாது என்பதில் உறுதியாய் நேர்மறை எண்ணத்தோடு இருக்கிறேன் என்றாள்.

தனக்கு தாய்தந்தை யாரும் இல்லையெனவும் அதனால் நாம் திருமணம் முடிந்தவுடன் சென்னையிலேயே வேலைபார்த்து செட்டில் ஆகிவிடலாம் என்றும் கூறினான். நர்மதாவும் சரிஎன்றாள்.

ஒரு சுபயோக சுபதினத்தில் நர்மதா தினேஷின் திருமணம் நடந்தது. தினேஷிற்கு சென்னையிலேயே வேலையும் கிடைத்தது.
மனம்போல் மாங்கல்யம் அடையப்பெற்ற இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினர்.

2 comments:

அண்ணாமலையான் said...

என்னங்க இது? விக்ரமன் படம் மாதிரி சுபமா இருக்குது?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்தப் படத்தில் இருக்கும் அம்மையாருக்கும் இந்தக் கதைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்றே நம்புகிறேன்