காதலர் தினத்திற்காக -ஆா்யா விமா்சனம்நான் குட்டி படம் பார்க்கவில்லை. ஆனால் தெலுங்கில் ஆர்யா படம் சமீபத்தில் தான் பார்த்தேன். இந்த படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். நாயகன் ஆா்யா நாயகி கீதா மற்றொரு நாயகன் அஜய்.

அஜய் என்ற பணக்கார வாலிபன் கீதா என்ற பெண்ணை விரும்புவதாக சொல்லுகிறான். உடனடியாக காதலை சொல்லவில்லை என்றால் தான் கோபுரத்தில் இருந்து குதித்துவிடுவேன் என கூறுகிறான். கீதாவும் தோழிகளின் வற்புறுத்தலால் காதலிக்கிறேன் என்று கூறிவிடுகிறாள். தன் கொலுசை எடுப்பதற்காக ஒரு வாலிபன் கடலில் குதித்து இறந்துவிட்டான் என்று வருத்தப்படும் கீதா. அஜயும் ஏதாவது செய்து கொண்டுவிடுவான் என்ற பயத்தின் காரணமாக காதலை சொல்கிறாள்.

அவர்கள் படிக்கும் கல்லூரிக்கு புதிதாக வந்து சோ்கிறான் ஆர்யா.
அவனும் கீதாவிடம் தன் காதலை தெரிவிக்கிறான். என்காதலை நீ ஏற்றுக்கொள்ளாவிட்டால் பரவாயில்லை. என் காதலை உணர்ந்தால் போதும் என்கிறான். கீதா அவனைவெறுப்பதாக கூறுகிறாள்.

அஜய் ஆள் வைத்து ஆர்யாவை அடிக்கிறான். அஜய்க்கு வேறு பணக்கார பெண்ணாக பார்க்கிறார் அஜய்யின் தந்தை. அந்த பெண்ணும் இவர்களுடன் கல்லூரியில் படிக்கிறாள். நிறைய ஆண்நண்பர்களின் சகவாசம் உள்ளது அந்த பெண்ணிற்கு. அஜய் அதனால் அந்த பெண்ணை வெறுக்கிறான். திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று தந்தையிடம் கூறுகிறான்.

தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. கீதாவை மிரட்ட ஆள் அனுப்புகிறார். கீதா நான் இப்போது என் காதலில் தோற்றுவிட்டேன் இப்போது உனக்கு சந்தோசமா என ஆர்யாவைக் கேட்கிறாள். நான் இருக்கும்வரை உன்னை தோற்க விடமாட்டேன் என அவர்களுக்கு உதவுகிறான் ஆர்யா.

வேறிடத்திற்கு தப்பிச்செல்கின்றனர் மூவரும். ரவுடிகள் தலைவனை கீதா செருப்பால் அடித்து விடுகிறாள். இதனால் கடும் கோபம் கொள்ளும் அவன் கீதாவை தேடுகிறான். அஜயும் கீதாவும் நடந்து செல்லும்போது கீதாவை மடக்கிவிடுகிறான் ரவுடிகள் தலைவன். அஜயையும் கத்திகாட்டி மிரட்டுகிறான்.
அஜய் பயத்தில் ஓடி விடுகிறான்.

ஆர்யா கீதாவை காப்பாற்றி இருவரையும் அழைத்துச்செல்கிறான். அஜய் சொல்லாமல் கொள்ளாமல் தன் தந்தையிடம் திரும்பச்செல்கிறான். ஆர்யா கீதாவை தன் குடிசையில் நன்கு கவனித்துக்கொள்கிறான். அவனுடைய அன்பைக்கண்டு கீதா ஆர்யாவின்பால் காதல் வசப்படுகிறாள்.

அஜய் தன் தந்தையை சமாதானப்படுத்தி அழைத்துவருகிறான். அஜய் கீதாவின் திருமணமும் நிச்சயிக்கப்படுகிறது. தனக்காக கடலில் குதித்த வாலிபன் ஆர்யாதான் என அறிகிறாள் கீதா. தாலிகட்டும்நேரத்தில் தனக்கு ஆர்யாவைத்தான் பிடித்திருக்கிறது என கீதா ஆர்யாவிடம் செல்கிறாள்(சினிமாவில் இப்படி காண்பிப்பதால் தான் நிஜ வாழ்க்கையில் சில பெண்கள் இப்படி செய்கிறார்கள் போல பிறருக்கு வரும் துன்பத்தை உணராமல் தன் சுயநலத்திற்காக திருமணத்தின் போது காணாமல் போகிறார்கள் ம்ம் என் செய்ய எல்லாம் காலத்தின் கோலம்).

முற்றும்

நன்றி

வாழ்க வளமுடன்

.

2 comments:

அண்ணாமலையான் said...

ம்ம் சமயத்துக்கு தக்க பதிவா?

Rebacca said...

ஆமாம். அண்ணாமலையான்..