ஆணாதிக்கமும் பெண்களின் நிலைமையும்


ஆணாதிக்கம் பற்றி சிலர் எழுத படித்துள்ளேன். என் கருத்தையும் வெளியிடவே இந்தப்பதிவு. நிறைய பேர் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகின்றனர் அப்படி இப்படி என்று எழுதுகின்றனர். அடிமைப்படுத்துதல் என்றால் என்ன ? ஒரு தந்தையாகிய ஆண் தன் மகளை அடிமைப்படுத்தி படிக்க அனுமதியாமல் இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறெல்லாம் எழுதிக்கொண்டிருக்கமுடியுமா.

தந்தையோ தாயோ தாங்கள் உயர்தரமான வாழ்க்கை வாழவில்லையெனினும் தன் மகளோ மகனோ உயர்தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்றே விரும்புகின்றனர். இதில் எங்கிருக்கிறது அடிமைத்தனம்.

என் வாழ்க்கையை பொறுத்தவரை என் தந்தையோ,சகோதரனோ,கணவனோ என்னை அடிமைப்படுத்தியதாக நினைவில்லை. மாறாக என் வளர்ச்சியையே அவர்கள் எப்போதும் விரும்புகின்றனர். நுற்றுக்கு எண்பது சதவீதம் பேர்கள் இப்படித்தான் பெண்களின் வளர்ச்சியையே விரும்புகின்றனர.. எங்கோ ஒரு சில தவறுகள் நடந்துகொண்டிருக்கலாம். ஆனால் எல்லாரையும் ஒட்டுமொத்தமாக குறைகூறுவது தவறு

பெண்ணின் வெற்றிக்கு காரணமாக ஆண்கள் இருக்கின்றனர். அதனால்தான் இந்த அளவிற்கு பெண்கள் உயர்ந்துகொண்டிருப்பதற்கு காரணம்.

ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டிற்கு சீக்கிரம் வந்துவிடவேண்டும். நல்ல கண்ணியமான ஆடைகளை அணியவேண்டும் என்று பெற்றோர் சொல்லுகின்றனர். அதையெல்லாம்கூட ஒரு சிலர் அடிமைத்தனம் என்று சொல்கின்றனர். நம் நலத்திற்காக சொல்லப்படும் வார்த்தைகள் எப்படி அடிமைத்தனம் ஆகும்.

ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதில்லை. அவர்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றனர் என்பதே என் கருத்து.
இதை வாசிக்கும் தங்களின் கருத்துக்களையும் பின்னூட்டத்தின் மூலம் தெரிவிக்கலாம்.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

2 comments:

அண்ணாமலையான் said...

சரியா சொன்னீங்க

Robin said...

நன்றி!