அவளா அப்படி(சிறுகதை)


கண்ணன் மாலை காய்கறி வாங்க கடைத்தெருவிற்கு போயிருந்தான்.

காய்கறி வாங்கிக்கொண்டு திரும்பும் போது கண்ணா கண்ணா என்று அழைத்த குரல்கேட்டு திரும்பினான். அவர்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் வாசுதேவன்.

ரொம்ப நாளா உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனுமின்னு ஆனா உங்களை பாக்கவே முடியறதில்லை.

ம் சொல்லுங்க என்றான்.

இது என் Wife சொன்ன விசயம். உங்க wife Daily நீங்க ஆபிஸிக்கு போன உடனே ஒரு 2 மணிநேரம் எங்கயோ போய்ட்டு வராங்கலாம். இது தினமும் நடக்குதாம்.

எதுக்கும் உங்க காதுலயும் போட்டு வைக்கலாமின்னு. சரிங்க வாசுதேவன். நான் என்ன ஏதுன்னு பாக்கறேன். அவசரமாய் சொல்லிவிட்டு நழுவினான்.

ஒரே குழப்பமாக இருந்தது கண்ணனுக்கு தன் மனைவி தன்னிடம் எதையும் மறைத்ததில்லையே. எங்கு செல்கிறாள் தினமும். நாளை சென்று பார்த்துவிடவேண்டியதுதான்.

அடுத்தநாள் அலுவலகம் செல்லுவதாக சொல்லிவிட்டு தெரிந்த நண்பனின் கடையில் wait பண்ணினான். தன் மனைவி கிளம்பியபின் பின்தொடர்வதற்காக.

கண்ணனுடைய மனைவி ரேவதி வீட்டைவிட்டு கிளம்பினாள். இவனும் சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்.
அங்கே ஒரு ஆசிரமத்திற்குள் நுழைந்தாள். பிள்ளைகள் படிப்பதற்கான பள்ளிகளும் ஆசிரமத்திலேயே இருந்தன. அங்கே சென்றாள் அவன் மனைவி. இவனும் பின்தொடர்ந்தான்.

3ம்வகுப்பிற்குள் நுழைந்த அவளை பார்த்தவுடன் ஒரு சிறுமியை அவளிடம் அனுப்பிவைத்தார் ஆசிரியை.

கண்ணன் ஒரு மரத்தின் பின்னே ஒளிந்துகொண்டான். அந்த சிறுமிக்கு தான் கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸை தந்தாள்.
அவளும் மம்மி நாளைக்கு சீக்கிரமே வர்ரீயா என்றாள். ம் சரிம்மா. நீ சமத்தா படிக்கனும். மம்மி போய்டு வரேன் என்றாள்.

வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் மனைவி ரேவதி. கண்ணனுக்கு பல எண்ணங்கள் பலபல குழப்பங்கள். அந்த சிறுமி பார்ப்பதற்கு வேறு தன் மனைவியின் சாயலிலேயே இருந்ததால் குழப்பம் அதிகமாகியது. ஒருவேளை திருமணத்திற்கு முன் தவறான தொடர்பு இருக்குமோ அதனால் பிறந்த குழந்தையோ. கண்ணனுக்கு யோசித்து யோசித்து தலைவலித்தது.

மாலை எப்போதும் போல வீடு திரும்பினான். என்னங்க இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கீங்க. ஆபிஸ்ல ரொம்ப வேலையோ என்றாள்.

இதுக்கும் ஒன்னும் கொறச்சலில்லை மனதில் நினைத்துக்கொண்டான்.

காலைல எங்க போன நான் ஒரு பைல எடுக்கறதுக்காக வந்தேன். வீடு lock பண்ணியிருந்துச்சு என்றான்.

கடைத்தெருவிக்கு போனேங்க என்றாள்.

இது சரிப்படாது. நேரடியாகவே விசயத்திற்கு வந்தான். யார் அந்த குழந்தை. காலைல நடந்ததெல்லாம் நான் பாத்திட்டு தான் இருந்தேன்.

ரேவதியின் முகம் இருட்டிபோய்விட்டது. அது வந்து அது வந்து என்று இழுத்தாள்.

ம் சொல்லு கர்ச்சித்தான்.

அது எங்க அக்காவோட குழந்தைங்க. அக்காவும் மாமாவும் லவ் மேரேஜ்ங்கறாதால எங்கஅம்மா அப்பாவோ அவங்க அம்மா அப்பாவோ அவங்க கல்யாணத்த ஒத்துக்கலை. அதுமட்டுமில்ல அவளை தலைமுழுகிட்டாங்க. ஆனா நான் மட்டும் அவகூட கான்டக்ட்ல இருந்தேன்.

இரண்டு பேரும் ஒருநாள் பைக் ஆக்ஸிடேன்ட்ல இறந்துட்டாங்க. குழந்தைய ஆயா பொறுப்புல விட்டுட்டுபோயிருந்தாங்க. இந்த விசயம் இதுவரைக்கும் எங்க அப்பாஅம்மாவுக்கு கூட தெரியாதுங்க. அவங்க எங்கியோ இருக்கறதாதான் நினைச்சிட்டு இருக்காங்க.

நான்தான் குழந்தைய ஆசிரமத்துல சேத்து வளக்கறதுக்கு ஏற்பாடு பண்ணேன். என்னை மன்னிச்சுடுங்க உங்ககிட்ட சொல்லாததுக்கு என்று அழுதாள்.

இதை என்கிட்ட முன்னமே சொல்லியிருந்தா குழந்தைய நாமளே வளர்த்திருக்கலாமில்ல நமக்கும் கல்யாணமாகி 6 வருசமாக குழந்தையில்ல. நம்ம குழந்தையா அவளை பாத்திருக்கலாமில்ல.

சரி சரி கிளம்பு நம்ம போய் குழந்தைய அழைச்சிட்டு வந்திரலாம் என்றான் குழப்பங்கள் நீங்கபெற்ற கண்ணன். ரேவதியும் மகிழ்ச்சியாக கிளம்பினாள்.

முற்றும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

4 comments:

அண்ணாமலையான் said...

என்னாங்க இது? காதலர் தினம் அதுவுமா ஒரு ஜோடிய கொன்னுட்டீங்க? செண்டிமெண்ட்டா சரியில்லயே

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதை ரொம்ப நல்லாருக்கு ..

ஆனா பாருங்க முடிவு .

Unknown said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாமலையான் ,ஸ்டார்ஜன்.

எல் கே said...

nallathan iruku