சுயநலத்தின் உச்சங்கள்.

உண்மைச்சம்பவங்கள்.

சம்பவம்-1இது சென்ற வருடம் நடந்த உண்மை சம்பவம்(நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்). தன் பழைய காதலுக்காக மெத்த படித்த கணிப்பொறி துறையில் பணியாற்றிய மாதம் 3 லட்சத்திற்கு மேல் சம்பாதித்த மேதாவி ஒருவர் தன் மனைவியை(மனைவி பெங்களுர் IBM ல் 60000 ஊதியத்திற்கு வேலை செய்து கொண்டு இருந்தாராம்) இரும்புகம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு யாரோ கொன்றதுபோல் நாடகமாடி பின் அகப்பட்டுகொண்டார். இத்தனைக்கும் அவருடைய பழைய காதலி ஒன்றும் திருமணமாகாமல் இல்லை. திருமணமாகி விவாகரத்து வாங்கினவராம்.(இது எப்படி இருக்கு பாருங்க அந்த அம்மணிகிட்ட மாட்டின அப்பாவி யாரோ)

சம்பவம்-2இது 2006ம் ஆண்டு மூணாறில் நடந்த சம்பவம். திருமணமான சில நாட்களிலே கணவனை தன் பழைய காதலன் துணையுடன் கொன்றாள் வித்யா என்கிற பெண். நகைகளுக்காக யாரோ கொன்றார்கள் என்று நாடகமாட எண்ணியிருக்கிறார்கள். பின் மாட்டிக்கொண்டார்கள்.

இதுபோல எத்துணை எத்துணையோ தினசரி பத்திரிகைகளில் வாசிக்கிறோம். இது போன்ற நபர்களுக்கு பிறர் உயிரை பறிக்கும் அதிகாரத்தை வழங்கியது யார். தனக்காக தன் சுயநலத்திற்காக அடுத்தவர் உயிரை எடுக்கும் அளவிற்கு விஷவிருட்சம் அவர்கள் மனதில் விதைத்தது யார்.

முதல் சம்பவத்தில் திருமணத்திற்கு முன்னமே தனக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி இருக்கலாம். அல்லது திருமணம் நடந்த பிறகாவது அந்த பெண்ணிடம் தன் பழைய காதலை கூறி விவாகரத்து வாங்கிக்கொண்டு இருக்கலாம். அந்தப்பெண் உயிருடன் தன் சம்பாத்தியத்தில் வாழ்ந்திருப்பாள். எதுவுமே செய்யாமல் தானும் இப்போது கம்பி எண்ணிக்கொண்டு மனைவியையும் வாழவிடாமல் செய்துவிட்டான் அந்த சுயநலமி.


இரண்டாவது சம்பவத்திலும் அப்படியே இந்த மெத்த படித்த இது போன்று வாழ்க்கையை படிக்காமல் தானும் கெட்டு பிறர் வாழ்க்கையும் கெடுக்கும் சுயநலத்தின் உச்சங்கள் திருந்துவார்களா?

உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே தீரணும் தப்பு பண்ணவன் தண்டனை அனுபவித்தே தீரணும் இதுதான் உலக நியதி.

தனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ மனத்தளவிலோ உடலளவிலோ துன்பம் விளைவிக்காத செயல்களே ஒழுக்கம் என வரையறுக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

.

2 comments:

ஜீவன்சிவம் said...

இங்கு பெண் செய்யும் கொடுமைகளுகென்று வன்மையான சட்டம் எதுவும் கிடையாது. பெண் சம்பத்தப்பட்ட எல்லா வழக்குகளிலேயுமே ஆணே
சந்தேக கண் கொண்டு பார்க்கபடுகிறான்.

அண்ணாமலையான் said...

அட ஆதரவு குரல்..?!!