தலைவா உனை வணங்க
உன் தலை மேல் கரம் குவிக்க
வரமே உனைக் கேட்க
நான் சிரமே தாழ் பணிந்தேன்
அகல் போல் எரியும் அன்பு
அது பகல் போல் மணம் பரவும்
நிலையை உனை நினைத்தால்
நான் மலையாய் உயர்வடைவேன்
நான் மலையாய் உயர்வடைவேன்
தலைவா உனை வணங்க
உன் தலை மேல் கரம் குவிக்க
வரமே உனைக் கேட்க
நான் சிரமே தாழ் பணிந்தேன்
நீர் போல் தூய்மையையும்
உன் நினைவினில் ஓட செய்யும்
சேற்றினில் நான் விழுந்தால்
என்னை சிக்கிரம் தூக்கிவிடு
என்னை சிக்கிரம் தூக்கிவிடு
No comments:
Post a Comment