என் வீட்டில் எலி நிறைய நாட்களாக தொல்லை கொடுத்து கொண்டு வருகிறது.
சரி என்று எலிப்பொறி வாங்கி வந்தேன் என் அக்காவிடம் இருந்து.
சரி என்று என்னிடம் இருந்த பிஸ்கட் ஒன்றை வைத்தேன்
எலி பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு விட்டு சென்று விட்டது.
பொறியில் அகப்படவில்லை.
சரி என்று பக்கத்துக்கு வீட்டுக்கரர்களிடன் கருவாடு இருக்குமா என்று விசாரித்தேன்.
அவர்கள் வைத்து கொண்டு இல்லை.
சரி இரண்டு ரூபாய்க்கு வாங்கலாம் என்றால் இந்த கடையிலும் இல்லை.
மீன் மார்க்கெட் சென்று இரண்டு ரூபாய்க்கு கேட்டேன்.
அவர்கள் பிரீயகவே தந்து விட்டார்கள்.
இந்த காலத்திலும் எப்படியும் சில நல்லவர்கள்.
No comments:
Post a Comment