மூன்று பேர்.

மூன்று பேர் ஒரு ஆள்அரவமற்ற காட்டில் தனியாக வழிதெரியாமல் மாட்டிக்கொண்டனர். அவர்களிடம் 5 ரொட்டித்துண்டுகள் இருந்தது. பசி அவர்களின் வயிற்றை கிள்ளியது.

முதலாமவர் ஒரு மருத்துவர்.

இரண்டமவர் ஒரு ஞானி.

மூன்றாமவர் ஒரு விவசாயி.

அந்த ரொட்டித்துண்டுக்கு மூவரும் போட்டிப்போட்டனர். அதற்கு முடிவு கிடைக்கவில்லை. மூவரும் ஒரு முடிவெடுத்தனர். மறுநாள் காலையில் யார் மிக உயர்ந்த கருத்தை தங்கள் திறமையால் சொல்கிறார்களோ அவர்களுக்கே அந்த ரொட்டித்துண்டென்று.

மறுநாள் காலையில் மருத்துவர் சொன்னார். கடவுள் என் கனவில் தோன்றினார். நான் அவர் அருகில் சென்று அவரை அணைத்துக்கொண்டேன். நான் கடவுளை முத்தமிட்டேன். அதனால் ரொட்டி எனக்கே சொந்தம் என்றார்.

ஞானி சொன்னார். கடவுள் என் கனவிலும் தோன்றினார் நான் அவரிடம் செல்லவில்லை. அவரே என்னிடம் ஓடோடி வந்தார். கட்டியணைத்து முத்தமிட்டார். அதனால் ரொட்டி எனக்கே சொந்தம் என்றார்.

விவசாயியின் முறை வந்தது. அவர் சொன்னார். கடவுள் என் கனவிலும் தோன்றினார். நான் அவர் அருகில் செல்லவில்லை. அவரும் என் அருகில் வரவில்லை. ஆனால் ரொட்டியை அருகில் வைத்துக்கொண்டு ஏன்டா சாப்பிடாமல் இருக்கிறாய் எனக் கேட்டார். அதனால் நான் சாப்பிட்டுவிட்டேன் என்றார்.

1 comment:

அண்ணாமலையான் said...

நல்ல ஐடியாதான்