உலக அமைதி – வேதாத்திரிமகரிஷி

நிரந்தரமான உலக அமைதி ஏற்பாடு முடிவு செய்யப்பட்டால்தான் மனித இன வாழ்வுக்கு உறுதி ஏற்ப்படும். ஆங்காங்கே நாடுகளில் உள்நாட்டுப்போரும் நாடுகளிக்கிடையே போர்களும் எப்போதும் நடந்து வருகின்றன. போர் முனையில் ஏற்படும் பொருள் அழிவும் மக்கள் அழிவும் இனி மனித குலம் உலகில் நீடித்து வாழ முடியுமா என்ற ஐயத்தை சிந்தனையாளர்களிடம் ஏற்படுத்தி வருகின்றன. அக்காலத்தில் உள்ள அணுகுண்டுகளின் ஆற்றலைவிட பலமடங்கு ஆற்றலை பெருக்கி இருக்கிறார்கள் என்பது சிந்தித்துணரும் எவருக்கும் மனித குலத்தின் எதிர்காலம் பற்றி கவலை ஏற்படாமல் போகாது.

உலகம்என்ற மண்மீது அனைவருமே பிறந்தோம்
உயிர்காக்கும் காற்றுஒன்றே மூச்சுவிடு வதற்கு
உலகெங்கும் ஒளிவீசும் சூரியனும் ஒன்றே
உள்ளகடல் ஒன்றேநீர் ஆவியாகிப் பொழிய
உலகில்இன்று உள்ளோர்இதில் ஒன்றும் செய்யதில்லை
ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்துசெத்துப் போவார்
உலகில்ஒரு பகுதியினர் மற்றவரைக் கொன்று
உயிர்வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்.

மனிதன் அனுபவமும் –முயற்சியும்

இந்தஉல கில்மனிதன் இந்நாள் மட்டும்
எத்துணையோ காலமாக வாழ்ந்து விட்டான்.
அந்தநாள் முதலாக அனுபோ கத்தால்,
ஆராய்ச்சி யால்கண்ட விளைவை நோக்க,
வந்தபயன் இன்பம்துன்பம் இரண்டேயாகும்.
வரவுசெல பின்மீதம் மிகுதித் துன்பம்
எந்தவகை யில்முயன்றும், என்றும் எங்கும்
எவராலும் இதைக்குறைக்க முடியவில்லை.


இறையுணர்வு உண்டானால், அதன் விளைவாக, அறநெறி தானாக மலரும். மனிதனை மனிதன் மதித்து, ஒத்தும் உதவியும் வாழ ஏற்ற ஆன்மீகக் கல்வியினால் தனிமனிதன் வாழ்வில் அமைதி உண்டாக வேண்டும். அதன்மூலம், குடும்பத்தில் அமைதி –ஊரில் அமைதி –நாட்டில் அமைதி – உலகில் அமைதி இவை உருவாகும். நிலைபெறும்.

2 comments:

அண்ணாமலையான் said...

ஏதோ நல்ல விஷயம் சொல்றீங்கன்னு மட்டும் புரியுது. வாழ்த்துக்கள்.

Unknown said...

நன்றி அண்ணாமலையான் அவா்களே..