இந்தி எதிர்ப்பும்……………………………….என் கருத்துக்களும்…………………………….

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு இருப்பதால் இந்தி மொழியை அரசுப்பள்ளிகளில் நாம் கற்க வாய்ப்பில்லாமல் போகின்றது என்பதே உண்மை.

ஒரு மொழியை கற்பதில் என்ன தவறு இருக்கின்றது என்பது எனக்கு தெரியவில்லை. ஏன் எதிர்க்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

வடஇந்தியா எங்கும் இந்தி மொழியின் ஆதிக்கம்தான். இதைக்கற்பதால் நாம் அவர்களுடன் எளிதில் உரையாட முடியும். அவர்களுடன் பணியிடங்களிலும் இலகுவாக பணியாற்ற முடியும்.

என் அன்னை பயிலும் சமயங்களில் எல்லாம் இந்தி மொழி ஒரு பாடமாக இருந்ததால் அதை அவர்கள் கற்றுக்கொண்டிருந்தார்கள்.

கபில்சிபல் இந்திய நாட்டிற்கு பொதுவான மொழியினை அனைவரும் கற்கவேண்டும் என்று கூறியதாக படித்தேன்.

இந்தி எதிர்ப்பு ஆங்கில எதிர்ப்பு இவற்றின் மூலமாக நாம் வளர முடியாமல் முடங்கிப்போகிறோம் என்பதே உண்மை.

இதை எதிர்ப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை பெரிய கான்வென்டுகளில் எல்லா மொழியையும் கற்க வைக்கிறார்கள் என்பதும் உண்மை.

உலகம் முழுவதும் ஒரே மொழியாக இருந்தால் எந்தப்பிரச்சனையுமில்லை என்பது என் கருத்து. அனைவரும் அனைவருடனும் இலகுவாக உரையாடமுடியும். நிறையபோ் தற்போது ஆங்கில மொழியினை அனைவருடனும் உரையாட உபயோகப்படுத்துகின்றனர். அதுவும் சிறந்ததே…

மொழிகளை கற்றுக்கொள்வதில் தவறொன்றும் இல்லை என்பதே என் கருத்து. இந்தி தெரிந்தால் நாம் இந்தியாவின் எந்த பகுதிக்கும் சென்று பணியாற்றமுடியும். ஏன் அரசியலில் ஈடுபடுவோருக்கும் இந்தி மொழி மிகவும் அவசியமாக உள்ளது.

தனிவகுப்புகளுக்கு சென்று இந்தி கற்றுக்கொள்ளலாம் என்ற சாத்தியக்கூறும் இல்லாமலில்லை.

இப்போது நான் வடஇந்தியாவில் இருப்பதால் இந்தி கல்லாமல் விட்டதின் தீமைகள் எனக்கு புரிகின்றன.

யாருடனும் பேச பழக மிகக்கடினமாக உள்ளது. அதனால் இந்தி எதிர்ப்புப்பற்றிய என்கருத்தை பதிவு செய்கிறேன்.

நடிகர் சூர்யா கூட இந்தி கற்கிறார் என்று கேள்விப்பட்டேன்..

மாற்று கருத்து இருந்தால் தெரியபடுத்தவும். நன்றி….


வாழ்க வளமுடன்……..

11 comments:

jothi said...

உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. அதனால் பிடியுங்க ஓட்டு.

jothi said...

உங்களுக்கு ஒன்று தெரியுமா? கத்தாரில் இலங்கை தமிழர்கள் நிறைய பேர் வேலை செய்கிறார்கள் . பொதுவாக 70% பேருக்கு இந்தி தெரியும். வெளி நாட்டில் வாழ்பவன் அவசியம் கருதி நம் மொழியினை கற்று பேசும்போது நமக்கு ஏன் வலிக்கிறது??

Unknown said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி jothi அவா்களே....

blogpaandi said...

நல்ல கருத்து. இந்தியை தெரிந்து கொள்வதால் நமக்கு பாதகம் ஒன்றுமில்லை. சாதகமே.

Unknown said...

நன்றி blogpaandi அவா்களே.

பெருங்காயம் said...

//தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு இருப்பதால் இந்தி மொழியை அரசுப்பள்ளிகளில் நாம் கற்க வாய்ப்பில்லாமல் போகின்றது என்பதே உண்மை//
அரசு பள்ளிகளில்தான் கற்க வேண்டுமா? தேவையானவர்கள் மட்டும் தனியாக கற்றுக்கொள்ளுங்களேன்.

\\கபில்சிபல் இந்திய நாட்டிற்கு பொதுவான மொழியினை அனைவரும் கற்கவேண்டும் என்று கூறியதாக படித்தேன்.\\
இந்தியாவிற்கு பொது மொழியாக ஆங்கிலம் ஏற்கனவே உள்ளது.

//இந்தி எதிர்ப்பு ஆங்கில எதிர்ப்பு இவற்றின் மூலமாக நாம் வளர முடியாமல் முடங்கிப்போகிறோம் என்பதே உண்மை.//
தமிழகத்தில் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் உள்ளது. இங்கு இந்திக்கு மட்டுமே எதிர்ப்புள்ளது.

நண்பரே... தேவையானவர்கள் தேவையான மொழியை கற்றுக்கொள்ளட்டும். ஒரு மனிதன் எத்தனை மொழிகளை கற்றுக்கொள்கிறhனோ அத்தனை மனிதர்களுக்கு அவன் சமம். இந்தியாவில் நிறைய மொழிகள் உள்ளன. அவற்றில் பல மொழிகள் பழமை வாய்ந்தவை.
ஏற்கனவே ஆங்கிலத்தால் பலர் தம் தாய் மொழியை மறந்து வருகின்றனர். இப்ப மேலும் இந்தியையும் திணித்தால் பல மொழிகள் அழிந்து விடும்.

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்தியா....

kumaresan said...

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் குழந்தைகள், தங்களின் பெற்றோரிடமிருந்து எளிதாக இந்தி மொழிப் பாடல்களை மனப்பாடமாகக் கற்றுக் கொள்வர். உங்கள் வயல்களில், தொழிற்சாலைகளில், உங்கள் வீடுகளில், குடிசைகளில் என்று ஒவ்வொரு தொழிலிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், ஆயிரம் வழிகளில் நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்வீர்கள். புத்தகங்களைப் படித்து இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை உங்களுக்கு இல்லை. அங்கு பிறந்ததினாலேயே நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்கிறீர்கள். பாரம்பரியமான உங்கள் மொழியை கற்றுக்கொண்டு அதில் சமமற்ற முறையில் உங்களுடன் நாங்கள் போட்டி போட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இத்தகைய போட்டிகளை ரோமானியர்கள்தான் நடத்துவார்கள். கொடிய வனவிலங்குகளுடன் ஆயுதம் ஏதுமின்றி போர் புரிய வீரர்களை அரசர்கள் பணிப்பார்கள். எனது அருமை நண்பர் சத்யநாராயணா போன்ற சிலர் அவ்வாறு போரிடவும் செய்தனர். ஆனால் மற்ற வீரர்களை அந்த விலங்குகள் கிழித்துப் போட்டன. இவ்வாறு நடத்தப்படுவதற்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் மீது உங்கள் மொழியைத் திணித்து, அதனை நாங்கள் கற்றுக் கொண்டு உங்களுடன் அதில் போட்டியிட வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்?

இதில்தான் அநீதியே அடங்கியிருக்கிறது. அமைதியாக சிந்தித்துப் பார்த்தால் இந்தியை ஆதரிப்பவர்களே இத்தகைய அநீதியைச் செயல்படுத்தத் துணியமாட்டார்கள். அதனால் நாம் நியாயமாக, நேர்மையாக, நண்பர்களாக நடந்து கொள்வோம். அனைத்துக்கும் மேலாக நாம் ஜனநாயகப்

Unknown said...

கருத்துகளுக்கு நன்றி VIJAY & KUMARESAN அவா்களே...

Unknown said...

Hi maryftech,

Congrats!

Your story titled 'இந்தி எதிர்ப்பும்……………………………….என் கருத்துக்களும்…………………………….' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th December 2009 02:08:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/151516

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Unknown said...

thanks all tamilish friends...

Kevin Matthews said...

jothi said...

//உங்களுக்கு ஒன்று தெரியுமா? கத்தாரில் இலங்கை தமிழர்கள் நிறைய பேர் வேலை செய்கிறார்கள் . பொதுவாக 70% பேருக்கு இந்தி தெரியும்//

இலங்கையில் ஹிந்தியை பள்ளிகளில் பயிற்றுவிக்கிறார்களா?