கடவுளின் வார்த்தைகள்…..

ஓர் ஊரில் ஒரு குரு இருந்தார். அவர் தன் சீடர்களுக்கு நல்ல சிந்தனைகளை பரப்பி வந்தார்.

தன் போதனைகளை மற்ற பிற ஊர்களுக்கும் பரப்புவதற்காக தன் சீடர்களை பல்வேறு இடங்களுக்கு தன் சார்பாக அனுப்பி வைத்தார்.

அனுப்பும்போது அனைத்து சீடர்களையும் அழைத்து ”நீங்கள் எங்கு சென்றாலும் கடவுள் உங்களை காப்பாற்றுவார்” என கூறி அனுப்பினார்

அனைவரும் பல்வேறு திசைகளை நோக்கி சென்றனர்.

அதில் ஒரு சீடர் ஒரு திசையை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது பின்னால் நிறைய போ் ஓடி வந்து கொண்டிருந்தனர்.

மதயானை வருகிறது தப்பித்துப்போங்கள் என கத்திக்கொண்டே வந்தனர்.

சீடர் எதற்கும் அஞ்சாமல் அவர் வழியே போய்க்கொண்டிருந்தார்.
நம் குருதான் கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்று கூறியிருக்கிறாரே நாம் எதற்காக அஞ்ச வேண்டும் என்று எண்ணிக் கொண்டே சென்று கொண்டிருந்தார்.

மதயானை வந்து சீடரை மிதித்தும் விட்டது. சீடருக்கு பலத்த காயம். இதைப்பார்த்த மற்றவர்கள் அந்த
சீடரை குருவினிடம் கொண்டு சென்றனர்.

குரு ஓடோடி வந்தார். சீடர் குருவிடம் நீங்கள் தானே கடவுள் காப்பாற்றுவார் என்று சொன்னீர்கள் இப்போது என்நிலைமையை பார்த்தீர்களா என்றான்.

குருவோ நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டாயே சீடனே. கடவுள் காப்பாற்றுவார் என்றால் அவரே நேரடியாக வந்துதான் காப்பாற்றவேண்டுமா? அத்தனை மனிதர்கள் மதயானை வருகிறது என்று சொன்ன பிறகும் செவிமடுக்காமல் சென்றது உன் தவறல்லவோ என்றார். சீடரும் தன் தவறை உணர்ந்தான். சிகிச்சை பெற்று நலமடைந்து மக்கள் பணியாற்றினான்.

நாம் எல்லோரும் அந்த இறைநிலையிலிருந்துதான் வந்துள்ளோம். அதே இறைநிலையோடு தான் ஐக்கியமாக போகிறோம். பார்க்கும் மனிதர்கள் எல்லாம் இறைவனின் சாயலே. சில பல களங்கங்கள் இருந்தாலும் அவை களைந்து இறையோடு தியானம் மூலமாகவும் நல்ல எண்ணங்கள் மூலமாகவும் ஐக்கியமாவோம்.

ஆலன் ஜேம்ஸ் என்ற தத்துவஞானி நல்ல எண்ணங்களே நம் துணைவர்கள்[friends]. நல்ல எண்ணங்கள் நல்ல காரியங்களை செய்யும்படி செய்யும் என்று கூறியுள்ளார்.

வைத்தகுறி மனப்பழக்கம் என்பதற்கிணங்க நல்ல எண்ணங்களை எண்ணுவதற்கு பழகிக்கொள்வோம். 15 நாள் ஒரு செயலை நாம் தொடர்ந்து செய்தால் அதுவே நமக்கு பழக்கமாகி எப்போதும் செய்யவைக்கும் என்று படித்திருக்கிறேன். நிறைய நல்ல பழக்கங்களை உருவாக்கிக்கொள்வோம்.

நாமும் நலமாக வாழுவோம். அனைவரும் நலமாக வாழ வாழ்த்துக்களும் உதவிகளும் செய்வோம்.

நன்றி…

வாழ்க வளமுடன்…

1 comment:

அண்ணாமலையான் said...

நிறைய நல்ல பழக்கங்களை உருவாக்கிக்கொள்வோம். நாமும் நலமாக வாழுவோம். அனைவரும் நலமாக வாழ வாழ்த்துக்களும் உதவிகளும் செய்வோம். நிச்சயமாக