பதிவுலக நண்பர்களுக்கு புதியவளின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.(கவிதை)

சின்னச்சிறுவர்களின்
சிறு சிறு ஆசைகள்
நிறைவேறிட…

இளைஞர்களின்
இலட்சியங்கள்
இனிதாய் நிறைவேற..

தம்பாத்ய கனவுகள்
தரமாய் நனவாகும்.
தருணங்கள் வாய்த்திட..

மூத்தோரின் வாழ்க்கை
சிறப்பாய் இனிக்க

வாழ்த்துகிறேன்…
புத்தாண்டே வருக…
நலம் பல நல்கிடுக…


நன்றி.

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்..

.

காதலிக்க நேரமில்லை(சிறுகதை)…

@@@@@@என் முதல் சிறுகதை@@@@@@@

புவனா அங்க என்னடி பண்ணற?

சீக்கிரம் கிளம்பு… ஆபிசுக்கு டைம் ஆச்சு…

சூடா இட்டிலியும் வெங்காய சட்டினியும் வச்சுருக்கேன். சாப்பிட்டுட்டு லஞ்ச் பேக்கை எடுத்துட்டு போ.

ம் சரிம்மா…

புவனா அடையாரில் கணிப்பொறி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறாள்.

அங்கே புதிதாக வேலைக்கு சோ்ந்திருந்தான் ராசா. இவள் team அல்ல அவன் வேற ஒரு PHP project ல் வேலை பார்க்கிறான்.

அவன் அடிக்கடி இவளையே பார்ப்பது போன்று இவளுக்கு தோன்றியது.

ஒருநாள் Intranet Chat ல் hi…. என்று message அனுப்பினான்…

இவளும் பதிலுக்கு hi என்று அனுப்பினாள்.

Chat window ல் busy என்று set செய்து விட்டு தன் project work பார்க்க தொடங்கினாள் புவனா…


வேலை முடித்துவிட்டு 8 மணிக்கு வீட்டிற்கு போவதற்காக பஸ் ஸ்டான்டில் wait செய்து கொண்டிருந்தாள் புவனா..

அங்கே ராசாவும் வந்தான் hi என்றான். பதிலுக்கு hi என்றாள். உடனே தான் செல்ல வேண்டிய பேருந்து வந்ததால் ஓடி போய் அதில் ஏறிக் கொண்டாள்.

அவளுக்கு ஒரே குழப்பம் ஏன் இவன் தன்னையே அடிக்கடி பார்க்கிறான் பின் தொடர்கிறான் என்று…

அடுத்த நாள் வேலையை முடித்து விட்டு பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாள் புவனா..

ராசா வந்தான். உங்ககிட்டே கொஞ்சம் பேசனும் என்றான்.

சொல்லுங்க என்றாள் புவனா மனதில் பயத்தோடு….

எங்க team ல எல்லாரும் வேற வேற மாநிலத்தை சோ்தவங்க இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேசறாங்க…

நான் கிராமத்தை சோ்ந்தவன்றதால இந்தியும் தெரியாது English ம் fluent ஆக பேச வராது அதனால உங்களுக்கு free time கிடைக்கும் போது என்னோடு Intranet la English la chat பண்ணிங்கன்னா நானும் English நல்ல develop பண்ணிப்பேன். நீங்க பெரிய கான்வென்ட்ல படிச்சீங்கன்னு கேள்விப்பட்டேன் என்றான்.

Ok sure என்றாள் புவனா… பேருந்து வந்தது Bye சொன்னாள் உற்சாகமாக அப்படியே மனதுக்குள் தன்னைத்தானே திட்டிக்கொண்டாள். சின்ன விசயத்தை தான் என்னவோ ஏதோ என்று கற்பனை செய்து கொண்டதை நினைத்து.…..

நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.!
.

பயனுள்ள குறிப்புகள்…

@@@@@@எனக்கு தெரிந்த சில குறிப்புகள்@@@@@@@

மீன் சாப்பிட்டுவிட்டு பாலோ பால் சார்ந்த பொருள்களோ சாப்பிடக்கூடாது.(வெண் குட்டம் நோய்) ஏற்பட இதுவும் ஒரு காரணம்.


பச்சை மிளகாய் வாங்கியதும் அதன் காம்பை கிள்ளி விடவேண்டும் அப்போது நிறைய நாட்கள் இருக்கும்.


தனியா துள் மாவு அரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து அரைக்கும்போது அதனுடன் பச்சரிசி சிறிதளவு (1 கிலோவிற்கு 1 ஆழாக்கு ) துவரம்பருப்பு 1 ஆழாக்கு சமையலுக்கு உபயோகப்படுத்தும் மஞ்சள் கிழங்கு 200 கிராம் சீரகம் 100 கிராம் மிளகு 100 கிராம் உடைத்த கடலை 100 கிராம் சோம்பு 100 கிராம் போட்டு அரைத்துக்கொண்டால் குழம்பு மிகவும் தண்ணியாக இல்லாமல் நன்றாக கெட்டியாக வரும். ருசியாகவும் இருக்கும். பச்சரிசியையும் துவரம்பருப்பையும் வறுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து குழம்புவகைகளுக்கும் உபயோகிக்கலாம்.


மிளகாய் துளை தனியாகவும் தனியா தூளை தனியாகவும் அரைத்து வைத்துக்கொண்டால் தனித்தனியாக உபயோகப்படுத்த சிறப்பாக இருக்கும்.(எங்கள் வீட்டில் அவ்வாறுதான் அரைப்போம்).


கோழிக்கறியை சமைத்த அன்றே சாப்பிடுவது நன்று.

சாப்பிடுவதற்கு 15 நிமிடம் முன் சிறிதளவு வெந்நீர் அருந்துவது நல்லது. உடல் எடை குறையும் உணவின் அளவும் குறையும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது பால் அல்லது தயிர் சோ்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும். மாவு பிசைந்தவுடன் செய்யாமல் சிறிது நேரம் கழித்து சப்பாத்தி செய்யவேண்டும்.


மாகியுடன் முட்டை சோ்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது மஞ்சள்துள் சிறிதளவு வெந்தயம் சிறிதளவு சோ்த்துக் கொள்ளவேண்டும். (மஞ்சள்தூளை உணவில் சோ்த்துக் கொண்டால் பன்றிக்காய்ச்சல் வராது என்று படித்த ஞாபகம்)


நன்றி.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.!

.

கடவுளின் வார்த்தைகள்…..

ஓர் ஊரில் ஒரு குரு இருந்தார். அவர் தன் சீடர்களுக்கு நல்ல சிந்தனைகளை பரப்பி வந்தார்.

தன் போதனைகளை மற்ற பிற ஊர்களுக்கும் பரப்புவதற்காக தன் சீடர்களை பல்வேறு இடங்களுக்கு தன் சார்பாக அனுப்பி வைத்தார்.

அனுப்பும்போது அனைத்து சீடர்களையும் அழைத்து ”நீங்கள் எங்கு சென்றாலும் கடவுள் உங்களை காப்பாற்றுவார்” என கூறி அனுப்பினார்

அனைவரும் பல்வேறு திசைகளை நோக்கி சென்றனர்.

அதில் ஒரு சீடர் ஒரு திசையை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது பின்னால் நிறைய போ் ஓடி வந்து கொண்டிருந்தனர்.

மதயானை வருகிறது தப்பித்துப்போங்கள் என கத்திக்கொண்டே வந்தனர்.

சீடர் எதற்கும் அஞ்சாமல் அவர் வழியே போய்க்கொண்டிருந்தார்.
நம் குருதான் கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்று கூறியிருக்கிறாரே நாம் எதற்காக அஞ்ச வேண்டும் என்று எண்ணிக் கொண்டே சென்று கொண்டிருந்தார்.

மதயானை வந்து சீடரை மிதித்தும் விட்டது. சீடருக்கு பலத்த காயம். இதைப்பார்த்த மற்றவர்கள் அந்த
சீடரை குருவினிடம் கொண்டு சென்றனர்.

குரு ஓடோடி வந்தார். சீடர் குருவிடம் நீங்கள் தானே கடவுள் காப்பாற்றுவார் என்று சொன்னீர்கள் இப்போது என்நிலைமையை பார்த்தீர்களா என்றான்.

குருவோ நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டாயே சீடனே. கடவுள் காப்பாற்றுவார் என்றால் அவரே நேரடியாக வந்துதான் காப்பாற்றவேண்டுமா? அத்தனை மனிதர்கள் மதயானை வருகிறது என்று சொன்ன பிறகும் செவிமடுக்காமல் சென்றது உன் தவறல்லவோ என்றார். சீடரும் தன் தவறை உணர்ந்தான். சிகிச்சை பெற்று நலமடைந்து மக்கள் பணியாற்றினான்.

நாம் எல்லோரும் அந்த இறைநிலையிலிருந்துதான் வந்துள்ளோம். அதே இறைநிலையோடு தான் ஐக்கியமாக போகிறோம். பார்க்கும் மனிதர்கள் எல்லாம் இறைவனின் சாயலே. சில பல களங்கங்கள் இருந்தாலும் அவை களைந்து இறையோடு தியானம் மூலமாகவும் நல்ல எண்ணங்கள் மூலமாகவும் ஐக்கியமாவோம்.

ஆலன் ஜேம்ஸ் என்ற தத்துவஞானி நல்ல எண்ணங்களே நம் துணைவர்கள்[friends]. நல்ல எண்ணங்கள் நல்ல காரியங்களை செய்யும்படி செய்யும் என்று கூறியுள்ளார்.

வைத்தகுறி மனப்பழக்கம் என்பதற்கிணங்க நல்ல எண்ணங்களை எண்ணுவதற்கு பழகிக்கொள்வோம். 15 நாள் ஒரு செயலை நாம் தொடர்ந்து செய்தால் அதுவே நமக்கு பழக்கமாகி எப்போதும் செய்யவைக்கும் என்று படித்திருக்கிறேன். நிறைய நல்ல பழக்கங்களை உருவாக்கிக்கொள்வோம்.

நாமும் நலமாக வாழுவோம். அனைவரும் நலமாக வாழ வாழ்த்துக்களும் உதவிகளும் செய்வோம்.

நன்றி…

வாழ்க வளமுடன்…

இந்தி எதிர்ப்பும்……………………………….என் கருத்துக்களும்…………………………….

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு இருப்பதால் இந்தி மொழியை அரசுப்பள்ளிகளில் நாம் கற்க வாய்ப்பில்லாமல் போகின்றது என்பதே உண்மை.

ஒரு மொழியை கற்பதில் என்ன தவறு இருக்கின்றது என்பது எனக்கு தெரியவில்லை. ஏன் எதிர்க்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

வடஇந்தியா எங்கும் இந்தி மொழியின் ஆதிக்கம்தான். இதைக்கற்பதால் நாம் அவர்களுடன் எளிதில் உரையாட முடியும். அவர்களுடன் பணியிடங்களிலும் இலகுவாக பணியாற்ற முடியும்.

என் அன்னை பயிலும் சமயங்களில் எல்லாம் இந்தி மொழி ஒரு பாடமாக இருந்ததால் அதை அவர்கள் கற்றுக்கொண்டிருந்தார்கள்.

கபில்சிபல் இந்திய நாட்டிற்கு பொதுவான மொழியினை அனைவரும் கற்கவேண்டும் என்று கூறியதாக படித்தேன்.

இந்தி எதிர்ப்பு ஆங்கில எதிர்ப்பு இவற்றின் மூலமாக நாம் வளர முடியாமல் முடங்கிப்போகிறோம் என்பதே உண்மை.

இதை எதிர்ப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை பெரிய கான்வென்டுகளில் எல்லா மொழியையும் கற்க வைக்கிறார்கள் என்பதும் உண்மை.

உலகம் முழுவதும் ஒரே மொழியாக இருந்தால் எந்தப்பிரச்சனையுமில்லை என்பது என் கருத்து. அனைவரும் அனைவருடனும் இலகுவாக உரையாடமுடியும். நிறையபோ் தற்போது ஆங்கில மொழியினை அனைவருடனும் உரையாட உபயோகப்படுத்துகின்றனர். அதுவும் சிறந்ததே…

மொழிகளை கற்றுக்கொள்வதில் தவறொன்றும் இல்லை என்பதே என் கருத்து. இந்தி தெரிந்தால் நாம் இந்தியாவின் எந்த பகுதிக்கும் சென்று பணியாற்றமுடியும். ஏன் அரசியலில் ஈடுபடுவோருக்கும் இந்தி மொழி மிகவும் அவசியமாக உள்ளது.

தனிவகுப்புகளுக்கு சென்று இந்தி கற்றுக்கொள்ளலாம் என்ற சாத்தியக்கூறும் இல்லாமலில்லை.

இப்போது நான் வடஇந்தியாவில் இருப்பதால் இந்தி கல்லாமல் விட்டதின் தீமைகள் எனக்கு புரிகின்றன.

யாருடனும் பேச பழக மிகக்கடினமாக உள்ளது. அதனால் இந்தி எதிர்ப்புப்பற்றிய என்கருத்தை பதிவு செய்கிறேன்.

நடிகர் சூர்யா கூட இந்தி கற்கிறார் என்று கேள்விப்பட்டேன்..

மாற்று கருத்து இருந்தால் தெரியபடுத்தவும். நன்றி….


வாழ்க வளமுடன்……..

வேண்டுதலும்………….நம் நம்பிக்கைகளும்………………………………

ஓர் ஊரில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. மழை வேண்டி நடைபெற்ற அப்பிரார்த்தனை கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கனோர் பங்கேற்றனர்.

பிரார்தனை கூட்டம் 3 மணி நேரம் நடைபெற்றது. அனைவரும் மழை வேண்டி உளமாற வேண்டிகொண்டனர்.

பிரார்தனை முடியும் தருவாயில் மழை வெகு வேகமாக பொழிய ஆரம்பித்தது.

பிரார்தனை முடிந்தும் விட்டது. மிக அதிக அளவில் பெய்த மழையால் யாராலும் அவரவர் வீடுகளுக்கு செல்ல இயலவில்லை. ஏனென்றால் அவர்கள் யாரும் குடை கொண்டு வரவில்லை.

ஒரே ஒரு சிறுமி மட்டும் குடை கொண்டு வந்திருந்தாள். வீட்டிற்கு தன் அன்னையுடன் சென்றாள்.

அவர்கள் வேண்டுதலின்மீது அவர்களுக்கே நம்பிக்கையில்லை. அந்த சின்னசிறு சிறுமியைத்தவிர………

நாமும் இப்படித்தான் பல நேரங்களில் நடந்து கொள்கிறோம். நம்புங்கள் நம்பிக்கையே வாழ்க்கை………………

வாழ்க வளமுடன்



நான் எடுத்த புகைப்படங்கள் சில

http://www.redgage.com/photos/megajoseph/multi-color-plant.html


http://www.redgage.com/photos/megajoseph/christmas-hut-santhome-church.html


http://www.redgage.com/photos/megajoseph/muneeswaran-god.html

http://www.redgage.com/photos/megajoseph/grass-flower.html


http://www.redgage.com/photos/megajoseph/drumstick-leaves.html


http://www.redgage.com/photos/megajoseph/yellow-flower-plant.html

http://www.redgage.com/?rf=/photos/megajoseph/blue-flower.html

அன்பின் இனிமை

அன்பை சுவாசிக்கும் இதயம்
மகிழ்ச்சியில் திளைக்கும்
அனைவரையும் நேசிக்கும்

பொறுமையுடன் இயங்கும்
பொறாமை நெருங்காது
பரிவுடன் பகிரும்

பெருமைகள் கொள்ளாது
சீற்றங்கள் சீராகும்
ஏற்றங்கள் உருவாகும்

எண்ணங்கள் வளமாகும்
மனமது செம்மையாகும்
நன்மாற்றங்கள் எளிதாகும்

அன்பை சுவாசிப்போம்
அனைவரையும் நேசிப்போம்
இன்பமாக வாழ்வோம்



நான் எடுத்த புகைப்படங்கள் சில

http://www.redgage.com/photos/megajoseph/multi-color-plant.html


http://www.redgage.com/photos/megajoseph/christmas-hut-santhome-church.html


http://www.redgage.com/photos/megajoseph/muneeswaran-god.html

http://www.redgage.com/photos/megajoseph/grass-flower.html


http://www.redgage.com/photos/megajoseph/drumstick-leaves.html


http://www.redgage.com/photos/megajoseph/yellow-flower-plant.html

http://www.redgage.com/?rf=/photos/megajoseph/blue-flower.html

உலக அமைதி – வேதாத்திரிமகரிஷி

நிரந்தரமான உலக அமைதி ஏற்பாடு முடிவு செய்யப்பட்டால்தான் மனித இன வாழ்வுக்கு உறுதி ஏற்ப்படும். ஆங்காங்கே நாடுகளில் உள்நாட்டுப்போரும் நாடுகளிக்கிடையே போர்களும் எப்போதும் நடந்து வருகின்றன. போர் முனையில் ஏற்படும் பொருள் அழிவும் மக்கள் அழிவும் இனி மனித குலம் உலகில் நீடித்து வாழ முடியுமா என்ற ஐயத்தை சிந்தனையாளர்களிடம் ஏற்படுத்தி வருகின்றன. அக்காலத்தில் உள்ள அணுகுண்டுகளின் ஆற்றலைவிட பலமடங்கு ஆற்றலை பெருக்கி இருக்கிறார்கள் என்பது சிந்தித்துணரும் எவருக்கும் மனித குலத்தின் எதிர்காலம் பற்றி கவலை ஏற்படாமல் போகாது.

உலகம்என்ற மண்மீது அனைவருமே பிறந்தோம்
உயிர்காக்கும் காற்றுஒன்றே மூச்சுவிடு வதற்கு
உலகெங்கும் ஒளிவீசும் சூரியனும் ஒன்றே
உள்ளகடல் ஒன்றேநீர் ஆவியாகிப் பொழிய
உலகில்இன்று உள்ளோர்இதில் ஒன்றும் செய்யதில்லை
ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்துசெத்துப் போவார்
உலகில்ஒரு பகுதியினர் மற்றவரைக் கொன்று
உயிர்வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்.

மனிதன் அனுபவமும் –முயற்சியும்

இந்தஉல கில்மனிதன் இந்நாள் மட்டும்
எத்துணையோ காலமாக வாழ்ந்து விட்டான்.
அந்தநாள் முதலாக அனுபோ கத்தால்,
ஆராய்ச்சி யால்கண்ட விளைவை நோக்க,
வந்தபயன் இன்பம்துன்பம் இரண்டேயாகும்.
வரவுசெல பின்மீதம் மிகுதித் துன்பம்
எந்தவகை யில்முயன்றும், என்றும் எங்கும்
எவராலும் இதைக்குறைக்க முடியவில்லை.


இறையுணர்வு உண்டானால், அதன் விளைவாக, அறநெறி தானாக மலரும். மனிதனை மனிதன் மதித்து, ஒத்தும் உதவியும் வாழ ஏற்ற ஆன்மீகக் கல்வியினால் தனிமனிதன் வாழ்வில் அமைதி உண்டாக வேண்டும். அதன்மூலம், குடும்பத்தில் அமைதி –ஊரில் அமைதி –நாட்டில் அமைதி – உலகில் அமைதி இவை உருவாகும். நிலைபெறும்.