மீண்டும் மீண்டும் திருமணம்- விரும்பிப் படித்தது(5)

திருமணம் என்பது ஆயிரங்காலத்து  பயிர் என்பர் நம் ஊர் பெரியவர்கள். கணவன் மனைவி இடையேயான உறவு நீண்ட காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாறு கூறுவது வழக்கம். மேற்கத்திய நாடுகளில் இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராத விசயம். பெரும்பாலான தம்பதிகள் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். அவர்களை பொறுத்தவதை திருமணம் என்பது மிகவும் சாதாரணமான விசயம்்.. சிலர் தங்கள் வாழ்நாளில் பத்து திருமணங்கள் கூட செய்து கொள்கின்றனர். திருமணம் ஆகாமல் குடும்பம் நடத்தும் கலாசாரமும் அங்கு உள்ளது.

இந்நிலையில் இன்னும் கூட சில வெளிநாடுகளில் திருமண வாழ்வை உயிருக்கும் மேலாக நேசிக்கும் தம்பதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது ஆச்சர்யமான விசயம். அமெரிக்காவைச் சேர்ந்த இவான் 41 வயது மற்றும் சூசன் 39 இவர்கள் இப்படிப்பட்ட அதிசயத் தம்பதிகள்.
இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. காதல் திருமணம்.

தேவாலயம் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்கள் முதல் திருமண நாளை கொண்டாடுவதற்கு முடிவு செய்தனர்.

சூசனுக்கு தீடீரென ஒரு ஐடியா உதித்தது. திருமண நாளை கொண்டாடுவதற்கு பதில் இதே நாளில் மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது தான் அந்த  ஐடியா. கணவரும் இதற்கு ஓகே சொல்லிவிட்டார். பிறகென்ன ஒவ்வொரு ஆண்டும் திருமணம் தான்.

வித்தியாசமான தம்பதிகள். திருமணத்தின் போது நடந்த அனைத்து சடங்குகளும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் நடக்கின்றன். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விருந்து கொடுத்தனர். விருந்தினர் பரிசு கொடுத்தனர்.

அனைவரும் உங்கள் ஐடியா மிகச்சிறந்த வித்தியாசமான ஒன்று என்று கூறினார்கள்.


திருமண வாழ்வின் பெருமையை மற்றவர்களுக்கு உணர செய்வதும் எங்களின் நோக்கம் என்கின்றனர் இருவரும்

வாழ்க தம்பதிகள்...

No comments: