வாழை இலையின் பயன்கள்

வாழை இலையின் பயன்கள்:

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். நான் வார இறுதிநாட்களில் எங்க ஊரில் தான் இருப்பேன். ஊரில் இருக்கும் நாட்களில் மதிய உணவு நிச்சயம் தலை வாழை இலையில் தான் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

தயிர் சாப்பிடும் போட்டி - பரிசு வென்ற ஆசிரியர்

பீகார் மாநிலத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, சனவரி பிப்ரவரி மாதங்களில் தயிர் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நம்ம ஊரில் பொங்கல் பண்டிகையின் போது சல்லிக்கட்டு நடத்தப்படுவது போல் அங்கு இந்த போட்டி நடத்தப்படுகிறது. சில இடையுறுகளால் கடந்த சில் ஆண்டுகளாக போட்டி நடத்தவில்லை.

சென்ற ஆண்டு போட்டியை எப்படியும் நடத்திவிட பேண்டும் என்ற எண்ணத்தில் பாட்னாவில் உள்ள ஒரு கல்லுரி நிர்வாகம் கடும் முயற்சி மேற்கொண்டது இதன்படி கல்லுரியல் உள்ள மாணவர்கள் பேராசிரியர்கள் ஊழியர்கள் போட்டியாளர்களாக வைத்து போட்டி நடத்தப் பட்டது. இதில் 300 பேர் பங்கேற்றனர். இறுதியாக அசய் குமார் என்ற கணிதவியல் துறை பேராசிரியர் 15 நிமிடங்களில் மூன்று கிலோ தயிரை சாப்பிட்டு வெற்றி கோப்பையை தட்டிச் சென்றார். கல்லுரி நுலகர் 2 வது பரிசை பெற்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் கல்லுரியில் அசய் குமாரை தயிர் வண்டிப் பேராசிரியர் என்று தான் செல்ல பெயரிட்டு அழைக்கின்றனர்.

மீண்டும் மீண்டும் திருமணம்- விரும்பிப் படித்தது(5)

திருமணம் என்பது ஆயிரங்காலத்து  பயிர் என்பர் நம் ஊர் பெரியவர்கள். கணவன் மனைவி இடையேயான உறவு நீண்ட காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாறு கூறுவது வழக்கம். மேற்கத்திய நாடுகளில் இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராத விசயம். பெரும்பாலான தம்பதிகள் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். அவர்களை பொறுத்தவதை திருமணம் என்பது மிகவும் சாதாரணமான விசயம்்.. சிலர் தங்கள் வாழ்நாளில் பத்து திருமணங்கள் கூட செய்து கொள்கின்றனர். திருமணம் ஆகாமல் குடும்பம் நடத்தும் கலாசாரமும் அங்கு உள்ளது.

இந்நிலையில் இன்னும் கூட சில வெளிநாடுகளில் திருமண வாழ்வை உயிருக்கும் மேலாக நேசிக்கும் தம்பதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது ஆச்சர்யமான விசயம். அமெரிக்காவைச் சேர்ந்த இவான் 41 வயது மற்றும் சூசன் 39 இவர்கள் இப்படிப்பட்ட அதிசயத் தம்பதிகள்.
இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. காதல் திருமணம்.

தேவாலயம் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்கள் முதல் திருமண நாளை கொண்டாடுவதற்கு முடிவு செய்தனர்.

சூசனுக்கு தீடீரென ஒரு ஐடியா உதித்தது. திருமண நாளை கொண்டாடுவதற்கு பதில் இதே நாளில் மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது தான் அந்த  ஐடியா. கணவரும் இதற்கு ஓகே சொல்லிவிட்டார். பிறகென்ன ஒவ்வொரு ஆண்டும் திருமணம் தான்.

வித்தியாசமான தம்பதிகள். திருமணத்தின் போது நடந்த அனைத்து சடங்குகளும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் நடக்கின்றன். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விருந்து கொடுத்தனர். விருந்தினர் பரிசு கொடுத்தனர்.

அனைவரும் உங்கள் ஐடியா மிகச்சிறந்த வித்தியாசமான ஒன்று என்று கூறினார்கள்.


திருமண வாழ்வின் பெருமையை மற்றவர்களுக்கு உணர செய்வதும் எங்களின் நோக்கம் என்கின்றனர் இருவரும்

வாழ்க தம்பதிகள்...

விரும்பிப் படித்தது(4)

சுதந்திர போரட்டத் தியாகி, எல். கரையாளர் 1940ல் தன் திருச்சி சிறை அனுபவங்களை பற்றிச் சொன்னது.

சத்தியாகிரகிகள், கடைத்தெருவிலிருந்து செயிலுக்கு வர வேண்டிய தங்களுக்கு தேவையான சாமான்களின் பட்டியலைத் குறித்துத் கொடுத்து, செயிலரிடம் அனுமதி பெற வேண்டும். பசாரிலிரு்ந்து ஒரு வார்டன் வாங்கிக் கொண்டு வாருவான். வந்ததும் அவைகளை அவரவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும்.

சாமான்களை அனுமதிக்கும் செயிலர், மிகவும் வேடிக்கையாக நடந்து கொண்டார். சோப்பை அனுமதித்துக் கொண்டே இருப்பார். திடீரென்று அனுமதிக்க மாட்டார். ஒருவருக்கு அனுமதிக்கும் சாமான் இன்னொருவருக்கு தரப்பட மாட்டாது.

எந்த சமயத்தில் எந்த சாமான் தரப்படும் தரப்பட மாட்டாது என்பது யாருக்குமே தெரியாது. ஆகவே, நாங்கள் ஒரே சாமானைத் திரும்ப திரும்ப எழுதிக் கொண்டே இருப்போம். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அது அனுமதியாகி வந்து விடும் என்று ஒரு நம்பிக்கை. அப்படியே நடந்து கொண்டும் இருந்தது.

ஒரு வேளை செயிலர் வேலைத் தொந்தரவின் காரணமாக சலித்துப் போய் சில நாட்கள் பட்டியலை பார்க்காமலே கையெழுத்துப் போட்டு விடுவார் போலிருக்கிறது.

ஒருதடவை பி.எச். சொக்கலிங்கம் ஒரு கைப் பெட்டியும் அந்தப் பெட்டியில் போடுயவதற்கு பாச்சா உருண்டைகளும் வேண்டும் என்று எழுதியிருந்தார். பெட்டி அனுமதிக்கப் படவில்லை. பாச்சா உருண்டைகள் மட்டும் இரண்டு டசன் வந்து சேர்ந்தன. அவற்றை என்ன செய்வது பெட்டியே இல்லாமல்.

இன்னொரு முறை டாக்டர் சுப்பராயன் சமசுகிருதத்தில் ஒரு புத்தகத்தின் பெயர் ஆசிரியர் பெயர் வெளியிட்ட கம்பெனியின் பெயர் கிடைக்கும் இடம் இவற்றை குறித்திருந்தார்.

இவை ஒவ்வொன்றையும் பார்த்து தனித்தனிப் பொருள் என்று எண்ணி ஒவ்வொன்றையும் அனுமதிப்பதற்கு அறிகுறியாக சரி என்ற குறி போட்டிருந்தார் செயிலர்.

தேன் நெய் அனுமதிப்பர். ஆனால் எந்தவிதமான எண்ணெய் அனுமதிப்பதில்லை. நாமாகவும் வரவழைத்துக் கொள்ள முடியாது. சர்தார் வேதரத்தினம் பிள்ளை யோசனை செய்து ஒருநாள் தன் பட்டியலில் கொப்ரிகாதேல் என்று  விட்டார். செயிலர் சரி என்றார் ஒரு பெரிய தேங்கா எண்ணெய் புட்டி சிறைக்குள்ளே வந்து வந்து விட்டது.

விரும்பிப் படித்தது(3)

தபால் தலையைச் சுற்றி ஓட்டைகள் காணப்படுகிறதே, இவை எப்படி தோன்றின? நுற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் நகரத்தில் ஒரு சத்திரத்தில், பத்திரிகை நிருபர் ஒருவர் உட்கார்ந்து அன்றைய செய்திகளை எழுதி முடித்தார். வெளியுர் பத்திரிகைகளுக்கு அந்த செய்திகள் உடனடியாக போய் சேர வேண்டும். எழுதியவற்றை அந்த நிருபர் அவசரம் அவசரமாக உறைகளில் போட்டு வாயை ஒட்டினார்.

பையிலிருந்து நீண்ட அகலமான காகிதத்தை எடுத்தார். அவை அத்தனையும் தபால் தலைகள் தனித்தனியாக கிழிப்பதற்கு கத்தயைத் தேடினார். கத்தி கிடைக்கவில்லை. குண்டூசி தான் கிடைத்தது. கோணல் மாணலாக கிழித்தார்.

சத்திரத்தில் இருந்த ஒருவர் அந்த நிருபர் பட்ட பாட்டையெல்லாம் கவனித்தார். தபால் தலைகளை சுற்றிலும் ஓட்டைகள் இருந்தால் சுலபமாக கிழிக்க முடியும் என எண்ணினார். அவர் இயந்திரம் ஒன்றை ஓட்டை போட தயாரித்தார். அந்த இயந்திரத்தின் பயனை எண்ணி பிரிட்டிசு தபால் துறை அந்த இயந்திரத்தை அவரிடம் இருந்து விலை கொடுத்து வாங்கியது.

இதுதான் தபால் தலை ஓட்டையின் கதை................

விரும்பிப் படித்தது(2)

உலகின் மிக வயதான தந்தை

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர். உலகின் வயதான தந்தை என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரது பெயர் கரம்சித் ராகவ். வயது 94. இவரது மனைவி சகுந்தலாவிற்கு 59 வயதாகிறது. இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மிகவும் வயதான தந்தைக்கு பிறந்தாலும், அந்த குழந்தை மற்ற குழந்தைகளைப் போல் ஆரோக்கியமாகவே உள்ளது. இந்த தள்ளாத வயதில் எப்படி உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்தது. என கரம்சித் காலையில் எழுந்தவுடன் மூன்று லிட்டர் பால் குடிப்பேன்.

புரோட்டா, சப்பாத்தி, அரிசி சாதம் இவற்றையும் பதம் பார்ப்பேன். கண்டிப்பாக தினமும் உணவில் அரை கிலோ நெய் சேர்த்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார். இன்னும் பத்தாண்டுகள் என் மகனுடன் விளையாடுவேன். இன்னொரு குழந்தை பெற்றுக் கொண்டாலும் ஆச்சர்யப்பட தேவையில்லை. அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளேன் என்கிறார் இந்த தாத்தா.

இது எப்படி இருக்கு. நீங்களும் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். 

அந்தரங்கம் (1)

நான் வாரமலர் பகுதியில் அன்புடன் அந்தரங்கம் பகுதியை விரும்பிப் படிப்பேன். அதில் இந்த வாரம் வந்த கடிதம் உங்களுடன் பகிர்க்கிறேன். ஒரு பெண் எழுதிய கடிதம் அது. அவள் அவளின் அக்கா கணவனின் தம்பியை விரும்புகிறாளாம். அவன் இவளை விரும்பவில்லை. இன்னொரு பெண்னை விரும்பினான். அந்த காதல் கைகூடாமல் மறுபடியும் இன்னொரு காதலில் விழுந்தான். அந்த காதலும் கைகூடவில்லை. பின்பு இவளை விரும்புவதாக கூறியுள்ளான். ஆனால் அதை கூறியவுடன் 1 வாரம் இவளுடன் பேசவில்லை.

பின்பு இவளிடம் என்னை காதலனாக வேண்டுமானால் நினைத்துக்கொள் இல்லையென்றால் அண்ணனாக நினைத்துக் கொள் என்றானாம்.

எப்படி இருக்கிறது பாருங்கள் கதை. சகுந்தலா கோபிநாத் அவர்கள்இப்படிப் பட்டவனை நம்ப வேண்டாம் என்று கூறினார்கள்.

மலர் விட்டு மலர் தாவும் வண்டு அவன் என்று கூறினார்கள். மிகச்சிறந்த ஆலோசனை..