வாணியின் வருத்தம்

வாணி வேலைக்கு சென்று திரும்பி இருந்தாள்.

அவள் மனம் முழுக்க வருத்தம் மேலிட்டது. இனிமேல் அவள் வாழ்க்கையில் யாரும் இல்லை. அவள் அனைவரும் விட்டுவிட்டு வந்துவிட்டாள்.

பரதன் அவள் கணவன். மிகுந்த முன்கோபி..

இவள் வரும் வழியி்ல் அவள் நண்பனுடன் பேசுவதை கண்டு சந்தேகப்பட்டு அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டேன். அவனுக்கு சந்தேக நோய் தோன்றிவிட்டது.

மூன்றே மாதத்தில் முடிந்து விட்ட வாழ்க்கை.

இனி அவள் தனி மரம். சமைக்க பிடிக்காமல் உட்கார்ந்திருந்தாள்.

எந்த தவறும் செய்யாத தான் தண்டிக்கப் பட்டோம் என மிகுந்த மனவேதனையில் இருந்தாள்.

அங்கு பரதன் மனது நிலை கொள்ளவில்லை. அவன் தன் மனைவியின் மீது உயிரை வைத்திருந்தான்.

தன் பொருள் தனக்கு மட்டுமே என்ற Possessive எண்ணம் அவனுக்கு. அதனால் வந்த சந்தேக நோய்தான் அது.

இப்போது பிரிந்த பின் ஞாபகம் இன்னும் அதிகமாகியது. ஆனாலும் அவளை பார்க்க பேச முடியாத நிலை.

இவர்கள் பிரிந்ததை தாங்க முடியாமல் அப்பா உடல் நலம் குன்றினார்.

தன் மருமகளை பார்க்க வேண்டும் என்றார்.

சாகும் தருவாயில் இருந்தார் பரதனின் தந்தை.

தன் மருமகளை அழைத்து வரும்படி கூறினார்.

அவளை அழைக்க சென்றான் பரதன்.

வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள்.

தன் தந்தையின் நிலையை பற்றி கூறியதால் வருவதாக சம்மதம் கூறினாள்.

வந்து இருவரும் ஒற்றுமையாக இருப்பதை போல் நடித்தனர்.

3 மாதம்  சென்றது. அவனின் தந்தை உடல்நலம் தேறினார்.

தந்தையை பார்க்க கிளம்பிய நேரம் மயக்கம் வந்து விழுந்தாள். வாணி... உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றான் பரதன்.

கர்ப்பம் தரித்திருப்பதாக கூறினார் மருத்துவர். இருவருக்கும் சந்தோசம்.

தான் தன் மனைவியை தவறாக சந்தேக பட்டோம் என தன் தவறை உணர்ந்தான் பரதன். அவளிடம் மன்னிப்பு வேண்டினான். நல்ல வாழ்க்கை வாழ்ந்தனர் இருவரும்.