தங்கர்பச்சான் அஜித் - படித்ததில் பிடித்தது

தலைசிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி தரமான இயக்குநராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருப்பவர் தங்கர்பச்சான். வான்மதி காதல் கோட்டை என்ற அஜித்தின் திரை வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு படங்களுக்கு தங்கர்பச்சான் ஒளிப்பதிவாளர். அப்போது அவருடனான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அஜித் என்றால் மனிதம் என சொல்வேன். அந்த அற்புதமான நடிகர் எப்படியெல்லாம் வடிவமைக்கபடவேண்டும் என்று எனக்குள் ஒரு ஆசை உண்டு.

ஆனால் அவரை இன்றைய திரை உலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற வருத்தமும் உண்டு.

வான்மதி படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு நிகழ்வு.

அஜித் ஒரு ஆட்டோவை ஓட்டிச் செல்லவேண்டும். வேகமாக செல்லும் அந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்வது போன்ற காட்சி. அஜித்திற்கு பதில் டூப்பை பயன்படுத்தலாம் என்று நான் சொன்னேன்..ஆனால் அந்த காட்சியில் வேறு யாரையும் பயன்படுத்துவதை அஜித் விரும்பவில்லை. அவரே நடிப்பது எனபதில் உறுதியுடன் இருந்தார். நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்கவில்லை. அவர் அதை நடிக்கும் போது நான் கண்களை மூடிக்கொண்டேன். ஆனால் அவர் கவலைப்படாமல் கச்சிதமாக நடித்தார். இதுபோல் பல காட்சிகளில் நடித்து உள்ளார். அவர் சிறந்த நடிகர். 

2 comments:

சேக்காளி said...

அண்ணன் DD யை முந்தி பின்னூட்டம் இட்டு விட்டேன்.

Mary Jose said...

நன்றி நன்றி.. திண்டுக்கல் தனபாலன் தான் எப்போதும் முதல் பின்னூட்டம் இடுவார்.

இன்று தான் நீங்கள் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். நன்றி சேக்காளி அவர்களே...

Blog Archive