பள்ளிகள் பணி

அன்பு நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் வணக்கங்கள்...வாழ்த்துக்கள்..

சில பள்ளிகள் நன்கு படிக்கும் மாணவர்களை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்து கொள்கின்றன. அதை பெருமையுடன் தம்பட்டமும் அடித்து கொள்கின்றன.

நன்கு படிப்பவர்களையே சேர்த்து கொள்வதனால் எதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் மற்றும் HOD களும்.

அனைத்து மாணவர்களையும் படிக்க வைக்க தான் பள்ளிகள். நன்கு படிக்கும் மாணவர்களை மட்டும் சேர்த்து கொண்டால் மற்ற பிள்ளைகள் என்ன செய்வது.

அப்பா அம்மா படித்திருக்கனும் என்பது இன்னொரு கன்டிசன். இதுவும் தவறு... பெற்றோரே சொல்லிக் கொடுத்தால் ஆசிரியரின் பணி என்ன.

எல்லாருக்கும் எல்லாவற்றையும் பொதுவாக்கனும். முக்கியமாக கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்கனும்இதனால் ஆசிரியர்களுக்கு என்ன பெருமை வந்துவிடப்போகிறது.

அதை விட நன்கு படிக்காத மாணவர்களை சேர்த்து படிக்க வைத்தால் அதில் கிடைக்கும் மனத்திருப்தியே தனி.

அது வேறு எங்குமே கிடைக்காத ஒரு தனி திருப்தி.

பள்ளிகள் அதை உணர்வார்களா...

No comments: