தற்கொலைகளும் தன்னம்பிக்கையின்மைகளும்.

ஒருசிலர் ஒரு அவமானம் ஏற்பட்டது என்றாலோ எதாவது துயரம் என்றாலே உடனே தற்கொலை என்ற முடிவை நாடுகின்றனர்.

நாம் ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு அவமானத்தை சந்திக்கிறோம் என்றால் அந்த சூழ்நிலையையும் அந்த சூழ்நிலையில் நாம் சந்தித்த மனிதர்களையும் நாம் மீண்டும் சந்திக்காமலே போகலாம். அந்த சம்பவத்தையே அந்த மனிதர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்கள் என்பதும் இல்லை. காலப்போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயங்கள் என்ற பாடல் வரி நமக்கு நினைவுறுத்துவது இதைத்தான்.
காலம் எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து. இந்த உலகில் அவமானத்தை சந்திக்காத நபர்கள் யார். எல்லாருமே எதாவது ஒரு சூழ்நிலையில் அவமானத்தை சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள்

உலகம் என்பது மிகமிகப்பெரியது. அந்தப்பெரிய உலகில் நாம் எல்லாவற்றையும் எதிர்கொண்டு வலம் வரலாம். எதாவது துயரமான சூழ்நிலையை நாம் எதிர்கொள்ளும் போது இந்த நிலையும் கடந்துபோகும் என நினைக்கவேண்டும்.

நம்பிக்கையுடன் வாழ வாழ்த்துக்கள்.

No comments: