தண்ணீர் தண்ணீர்நான் சென்ற சனி அன்று கூடுவாஞ்சேரியில் உள்ள வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கு எப்போதும் தண்ணீர் வைத்திருப்பார்கள். ஆனால் அன்று தண்ணீர் சிறிதளவும் இல்லை.

ஆனால் தண்ணீர் 4 கேன்கள் அளவிற்கு இருந்தது. வங்கியில் பணி புரிபவா்கள் இருவரிடம் தண்ணீ்ர் இல்லை கொஞ்சம் போடவும் எனக்கூறினேன். இருவரும் பெண்கள் அதில் ஒருவர் நான் சொன்னதை கண்டும் காணாதது போல சென்றுவிட்டார். மற்றொருவர் சொன்னது என்ன தெரியுமா. வங்கியின் சேவை நேரம் முடிந்துவிட்டது. இனி தண்ணீர் கேன் எல்லாம் போட முடியாது என்று. சேவைநேரம் முடிந்துவிட்டால் வாடிக்கையாளர்கள் தண்ணீர் கூட அருந்தக்கூடாது போலும் எப்படி இருக்கிறது பாருங்கள்

என்னைப்பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். நானே தண்ணீரை கொண்டு சென்றிருந்தால் எனக்கு இந்த பிரச்சனை வந்திருக்காது பாருங்கள்.

1 comment:

Jaleela Kamal said...

என்ன மனுச தனம் தண்ணீருகு கூடவா