நம்ப முடியவில்லை.

எனக்கு தெரிந்த என் கணவருடன் வேலை செய்த 40 வயதான ஒருவர் Heart Attack ல் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அவருக்கு ஒரேஒரு மகன். கர்நாடகாவைச்சேர்ந்தவர். பார்ப்பதற்கு இது போல ஒரு நோய் அவருக்கு இருந்தது என்று கூட சொல்லமுடியாது. இந்த விசயத்தை என்னால் நம்பவேமுடியவில்லை. இது போல நிறைய வாழ்க்கையில் நடக்கும் விசயங்களை ஜீரணிப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது.

மற்றொருவருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருந்து இந்த வருடம் ஜனவரி மாதம் ஆண்குழந்தை பிறந்தது. அவரும் ரயில் விபத்தில் பலியாகிவிட்டார்.

குறைந்த வயதுள்ளவர்கள் இறக்கும்போது அந்த இறப்பு நம் மனதில் ஒருவித வலியை வேதனையை விட்டுசெல்கிறது.

இது போல ஒன்றல்ல இரண்டல்ல. நிறைய விசயங்கள். நம்பமுடியாதவைகளாகவும் ஜீரணிக்கமுடியாதவைகளாகவும் உள்ளன.

1 comment:

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

விடுங்கள் சிநேகிதி.. இறப்பு என்பது ஒரு முடிவல்ல..

அது ஒரு அத்தியாயத்தின் கடைசிப் பக்கம் அவ்வளவே..