நான் 9ம் வகுப்பு படிக்கும்போது நடந்த கசப்பான சம்பவம் இது. அப்போது எழுதிய கணித பரிட்சைக்கான விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டன. வழங்கியதும் என் விடைத்தாளை என் தோழி பார்த்துக்கொண்டிருந்தாள். பார்த்துவிட்டு இங்கே பாரு ஒரு
Question நீ correct ஆக எழுதியிருக்கிறாய். Sir திருத்தாம விட்டுட்டார் என்றாள். நானும் பார்த்தேன் திருத்தாமல் தான் விட்டிருந்தார். போய் கேளு என்றாள் தோழி. நான் போகமாட்டேன் என்றேன். எனக்கு அவரிடம் கேட்க பயம். ஆனாலும் என் தோழி விடவில்லை. போய் கேளு. நீ கேட்கலைன்னா நான் கேட்கிறேன் என்றாள். நானே சென்று அவரிடம் கேட்டேன். என் தோழியும் உடன் வந்தாள்.
அவரோ அவரின் பிழையை ஒப்புக்கொள்ளாமல் நீ இப்போதுதான் இந்த விடையை எழுதியிருக்கிறாய் என என்மீதே குற்றத்தை திருப்பிவிட்டார். எல்லா மாணவிகள் முன்னிலையில் திட்டியும்விட்டார். எனக்கு மிகுந்த மனவருத்தமாகிவிட்டது. ஏன்தான் கேட்டோமோ என்றாகிவிட்டது.
தான் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல் தவறே செய்யாத என்னை மனவருத்தம் அடையசெய்தார் அந்த ஆசிரியர். சிலசமயங்களில் இப்படித்தான் தவறே புரியாமல் தண்டனைபெற வேண்டியுள்ளது நிஜவாழ்க்கையில்.
இறைநிலையானது என்னுடைய உண்மையான உழைப்பிற்கு மதிப்பளித்தது. 10ம் வகுப்பில் நடந்த பொதுத்தேர்வில் நான் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றேன். மனிதர்கள் தவறுசெய்யலாம் ஆனால் இறைநிலை எப்போதும் தவறுவதேயில்லை. நாம் என்ன செயல் செய்கிறோமோ அதற்கான விளைவை இன்றோ நாளைக்கோ அல்லது வேறேப்போதோ நமக்கோ நம் சந்ததிக்கோ தந்துவிடும். இறைநிலையை யாரும் ஏமாற்ற முடியாது. இதைத்தான் செயல்விளைவு என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மைவிளைந்தது. அட தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது என ராசாசின்னரோஜா படத்தில் ஒரு பாடல் வருமே அதுபோல.
நன்றி.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
.
6 comments:
சின்ன கதையாக இருந்தாலும் நல்ல கதை..
கதையல்ல நிஜம். பிரகாஷ். கருத்துக்கு நன்றி..
நல்ல செய்தி .. 100 க்கு 100 வாங்கியதுக்கு இப்ப வாழ்த்து சொல்றேன் :))
நன்றி முத்துலெட்சுமி..
இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். என் தோழி பெயர் சாந்தி...
அந்த தோழி இப்போது எங்கு இருக்கிறாள் என்பது தெரியவில்லை...
Post a Comment