
ஓடோடி உழைத்து
பொருளீட்டி
நீங்கள் உயர
உழைத்தேன் நான்.
எமக்கென என் செய்தாய்
என கேள்விக்கணைகளுடன்
நீங்கள்
இழந்த பருவத்தை
சொல்வதா
இல்லாத பணத்தை
சொல்வதா.
எல்லாம் இருந்தும்
நிறைமனம் இல்லாமல்
குறைமனம் கொண்டு
இருப்பதேன் நீங்கள்.
சுற்றமாய் இருந்தும்
சுயநலமாய் இருப்பதேன்
பதில் தெரியா
கேள்விகளுடன் நான்.
பணபற்று பாசத்தை
பட்டுப்போக செய்கிறது
மாறுமா மனம்
ஏக்கத்துடன் நான்.
நன்றி
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
.
3 comments:
நன்றி அண்ணாமலையான் அவா்களே..
உண்மையிலும் உண்மை..
மறுக்க முடியாத உண்மை..
எல்லோருமே சுயநலவாதிகள்...
மனசு உள்ளவர்களுக்கு மட்டுமே
இது வலிக்கும் ..!! இந்த மனதின் வலி புரியும் ..
மிகவும் அற்புதமா வரிகள்... வாழ்த்துக்கள்
நன்றி Silverstar அவர்களே....
Post a Comment