கதையல்ல உண்மை

நான் ஒருநாள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு ரயில் ஏறுவதற்காக வந்தேன். ரயில் கிளம்பப்போகும் நேரம் ஆகிவிட்டது. அவசரமாக ஏறும் போது ஒரு பெண்மணி என் அம்மாவின் வயது இருக்கும். சீக்கிரமாக உள்ளே வாம்மா ரயில் எடுத்துட போறாங்க என்றார்கள். நானும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன்.

அப்போது ஒரு பெண் ரயில் பெட்டியில் ஏறும் இடத்தில் நின்றுகொண்டு தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். அந்த பெண்ணையும் சீக்கிரம் உள்ளே வாம்மா ரயில் எடுத்துவிடப்போறாங்க என்று சொன்னார்.

அந்த பெண்ணின் நலத்திற்காகதான் அவர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த பெண்ணோ எனக்கு எல்லாம் தெரியும் நீ ஒண்ணும் சொல்ல வேணாம் என்றாள். வார்த்தைகளில் மரியாதை இல்லவே இல்லை.

அவர்கள் நீ உங்க அம்மா நம்பரைத்தா நீ இப்படி செய்கிறாய் என அவர்களிடம் சொல்கிறேன் என்றார்கள். உடனே அந்த பெண்ணோ ஆவேசமாக என் அம்மாவிடம் சொல்லுவியா இந்த சொல் என செல்போனை அந்த அம்மாவின் மீது வீசினாள். தன் வயது ஒத்த பெண்களிடம் பேசுவது போல் வாடி போடி என்றுதான் அவள் பேசினாள்.

இதை பார்த்த மற்றவர்கள் அந்த அம்மாவிற்காக பரிந்து பேசினார்கள். அந்த பொண்ணுக்கு என்ன ஆன உங்களுக்கு என்னம்மா. விட்டுடுங்க. நல்லது சொன்ன புரிஞ்சுக்கனும். புரிஞ்சிக்காதவங்க கிட்ட சொல்லி என்ன செய்ய என்று சொன்னார்கள். அந்த பொண்ணையும் திட்டினார்கள். அப்போதுதான் அந்த பெண்ணின் ஆவேசம் அடங்கியது. ஆனாலும் தன் தவறை உணர்ந்தாள் இல்லை. இத்தனைக்கும் அந்த பெண் நன்கு படித்து வேலைக்கு போய் கொண்டிருக்கும் பெண்தான். என்ன படித்து என்ன பண்பாடு இல்லை. நான் அடிக்கடி அந்த பெண்ணை பார்ப்பேன். பார்க்கும்போது என்னுள்ளே அந்த சம்பவம்தான் நினைவுக்கு வரும். வெறுப்பாகவும் இருக்கும். நல்லதே செய்தாலும் அதை
புரிந்து கொள்ள மனம் இல்லாமல் இருப்பவர்களும் இருக்கின்றார்கள் இந்த உலகத்தில் என்ன செய்ய?

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

நன்றி

.

5 comments:

அண்ணாமலையான் said...

அதே.....

Anonymous said...

சரி,,

கக்கு - மாணிக்கம் said...

தாங்கள் படித்துவிட்டதாகவும், வேலைக்கு சென்று பணம் பண்ணுவதாகவும் எல்லா பெண்களுக்கும் திமிரும் அகம்பாவமும் இப்போது நிறைத்து விட்டது. பொது இடங்களில் கூட மகா கீழ்த்தரமாகவே நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். ஆனால் தலயில் திமிர் இருக்கும் அளவுக்கு மண்டையில் மூளை மட்டும் இல்லை வெறும் நாய் மலம் தான் இருக்கிறது. பெண் புத்தி பின் புத்தி என்பது முற்றிலும் உண்மையே

Subathra G said...

Nice :)

Mary Jose said...

அனைவரின் கருத்துக்கும் நன்றி.. அனைவரும் பணிவுடன் இருக்கவேண்டும்....