
நாம் ஒரு தொழில் தொடங்க நினைக்கிறோம் என்றால் அதில் நம் நல்ல எண்ணத்தையும் கலந்தால் தொழில் மிக சிறப்பாக இருக்கும்.
உதரணத்திற்கு நாம் கல்யாணமண்டபம் ஆரம்பிக்க நினைத்தால் அங்கு நடைபெறும் திருமணங்கள் மிக சிறப்பாக இருக்கவும் அவர்கள் சிறப்பாக வாழவும் நாம் வேண்டிக்கொள்ளலாம்.
ஒரு பெட்டிக்கடை வைத்தால் அதில் போதை பொருள்களை எல்லாம் விற்ககூடாது என்ற எண்ணம் வேண்டும்.

அப்போது நமக்கும் நல்லது நடக்கும். நம்மிடம் பொருள் வாங்குவோரும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்க வேண்டும். இவை எல்லாவற்றிகும் பொருந்தும்.
இப்படி எல்லாவற்றிலும் வியாபார நோக்கம் மட்டும் இல்லாமல் நல்ல எண்ணங்களையும் இணைத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்