புதுஉலகம்.

கைநீட்டி வாங்க
தேவையில்லை
வங்கிக்கணக்கிற்கு
வந்துவிடுகிறது
ஊதியம்.

மனதின் எண்ணங்கள்
நிமிடத்தில்
எழுத்துக்களாக
பதிவுலகில்.

ஒரு கோடியில் உள்ள
சித்ராவின் எண்ணத்தை
மறுகோடியில் உள்ள
மித்ரா அறிகிறாள்.

என்னே விந்தை
உலகம் சுருங்கியது
மனிதர்கள் நெருங்கினர்

ஆசிரியர் மாணவர்
ஆராய்ச்சியாளர்
கணிப்பொறியாளர்
வடிவமைப்பாளர்
வங்கியாளர்
பாகுபாடில்லை
இப்புதுவுலகில்.

இப்போதே இப்படி
இன்னும் வருங்காலம்
இன்னும் எத்துணை
அதிசயங்கள் கொண்டிருக்குமோ
வரவேற்போம் புதுஉலகை.


நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

.

ஆராயத்தவறிய ஆசிரியர்.

நான் 9ம் வகுப்பு படிக்கும்போது நடந்த கசப்பான சம்பவம் இது. அப்போது எழுதிய கணித பரிட்சைக்கான விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டன. வழங்கியதும் என் விடைத்தாளை என் தோழி பார்த்துக்கொண்டிருந்தாள். பார்த்துவிட்டு இங்கே பாரு ஒரு
Question நீ correct ஆக எழுதியிருக்கிறாய். Sir திருத்தாம விட்டுட்டார் என்றாள். நானும் பார்த்தேன் திருத்தாமல் தான் விட்டிருந்தார். போய் கேளு என்றாள் தோழி. நான் போகமாட்டேன் என்றேன். எனக்கு அவரிடம் கேட்க பயம். ஆனாலும் என் தோழி விடவில்லை. போய் கேளு. நீ கேட்கலைன்னா நான் கேட்கிறேன் என்றாள். நானே சென்று அவரிடம் கேட்டேன். என் தோழியும் உடன் வந்தாள்.

அவரோ அவரின் பிழையை ஒப்புக்கொள்ளாமல் நீ இப்போதுதான் இந்த விடையை எழுதியிருக்கிறாய் என என்மீதே குற்றத்தை திருப்பிவிட்டார். எல்லா மாணவிகள் முன்னிலையில் திட்டியும்விட்டார். எனக்கு மிகுந்த மனவருத்தமாகிவிட்டது. ஏன்தான் கேட்டோமோ என்றாகிவிட்டது.

தான் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல் தவறே செய்யாத என்னை மனவருத்தம் அடையசெய்தார் அந்த ஆசிரியர். சிலசமயங்களில் இப்படித்தான் தவறே புரியாமல் தண்டனைபெற வேண்டியுள்ளது நிஜவாழ்க்கையில்.

இறைநிலையானது என்னுடைய உண்மையான உழைப்பிற்கு மதிப்பளித்தது. 10ம் வகுப்பில் நடந்த பொதுத்தேர்வில் நான் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றேன். மனிதர்கள் தவறுசெய்யலாம் ஆனால் இறைநிலை எப்போதும் தவறுவதேயில்லை. நாம் என்ன செயல் செய்கிறோமோ அதற்கான விளைவை இன்றோ நாளைக்கோ அல்லது வேறேப்போதோ நமக்கோ நம் சந்ததிக்கோ தந்துவிடும். இறைநிலையை யாரும் ஏமாற்ற முடியாது. இதைத்தான் செயல்விளைவு என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மைவிளைந்தது. அட தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது என ராசாசின்னரோஜா படத்தில் ஒரு பாடல் வருமே அதுபோல.

நன்றி.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
.

சங்கராந்தி(சிந்தனை)

சங்கராந்தி என்ற தெலுங்கு படம் பார்த்தேன்(பழைய படம்தான்). அந்த படம் தமிழிலும் வந்துள்ளது பெயர் தெரியவில்லை. பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாட்டு வருமே அந்த படம்(படம் பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்).

இப்போது தெரிந்து விட்டது.. அந்த படத்தின் பெயர் ஆனந்தம்.


மிக அருமையான படம். குடும்பக்கதை மிகவும் நன்றாக உள்ளது.
அதில் உள்ள மூத்த சகோதரன் தன் சகோதரர்களின் நலனுக்காக மற்றும் குடும்ப நலனுக்காக உழைக்கிறான். அதனால் தாமதமாக திருமணம் செய்து கொள்கிறான். அதனால் அவனுக்கு குழந்தையில்லை(தாமத திருமணத்தால்).

அதில் மூத்த சகோதரனின் பெயர் ராகவா. அவனுக்கு திருமணம் ஆகவில்லையென அவனுடைய தாய் மிகவும் கவலைப்படுகிறாள். நிறைய பிரார்த்தனைகள் செய்கிறார். திருமணம் செய்ய மறுக்கும் மூத்த சகோதரன் சிநேகாவைப் பார்த்ததும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு திருமணம் நடக்கிறது.

எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்று உள்ளது. அதிலும் இதேபோல் நான்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். மூத்தவனுக்கு திருமணம் ஆகிவிட்டது(தாமதத் திருமணம்தான்).

நல்ல பழக்கங்கள் உள்ளவர்கள் நால்வரும். அந்த நல்ல பழக்கங்களுக்கு காரணம் அவர்களின் பெற்றோரே. பிள்ளைகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அன்னையிடம் தந்துவிடுகிறார்கள். மற்ற மூவரும் திருமண வயதை நெருங்குகிறார்கள். ஆனால் அந்த அன்னையும் தந்தையும் பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றி கவலையேபடுவதில்லை. அவர்களுக்காக எதுவும் சேமிப்பதுமில்லை. தேவையோ இல்லையோ தான் நினைத்த பொருட்களை வாங்கிவிடுவது. ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என நினைப்பது. எவ்வளவு பணம் வந்தாலும் ஏதாவது செலவு என்றால் தன்னிடம் எதுவுமே இல்லை என்று சொல்வது இது அவரின் வாடிக்கை.

மூத்த சகோதரன் நல்லது சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. நான் உங்களுக்காக எதுவும் சோ்த்துவைக்கவில்லையா என்ன?
அங்கங்கே எவ்வளவு கடன் வைச்சிருக்காங்க என்று பாரு என்கிறார் பதிலுக்கு. கடன் எதுவும் வைப்பதில்லையாம் அது அவர்களுக்கு பெரிய விசயமாம்.

தள்ளிப்போகும் திருமணங்கள் பற்றி ஒரு பதிவு படித்தேன். தள்ளிப்போகும் திருமணங்களுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் பெற்றோரின் அக்கறையின்னை மற்றும் சுயநலமும் ஒரு காரணம் என்பது என் கருத்து.

பணத்தின் மீதுள்ள ஆசை எல்லா தீங்கிற்கும் காரணமாகிறது என்று படித்திருக்கிறேன். பணத்தின் மீதுள்ள ஆசை பாசத்தையும் மாற்றிவிடுகிறது. நம் பிள்ளைகளின் வாழ்க்கை வீணாவதற்கு நாமே காரணமாக இருக்கலாமா?. யோசியுங்கள் பெற்றோரே.

பிள்ளைகளும் பெற்றோரையும் கவனிக்கவேண்டும் அதே சமயம் தங்கள் வாழ்க்கைக்காகவும் சிறிது சேமித்து வைத்துக்கொள்வது நல்லது. அதேசமயம் பெற்றோரையும் மறந்துவிடக்கூடாது. அவர்களுக்கும் தேவையான அனைத்தையும் செய்யவேண்டும்.
உழைப்பது ஒருவரென்றால் அதை உழைப்பின் அருமை தெரியாமல் அனுபவிப்பது வேறோருவராக இருந்துவிடக்கூடாது.

முதிர்கன்னிகளைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கும் சமூகம் முதிர்காளைகளைப்பற்றி எப்போது சிந்திக்கப்போகிறது. ஆண் எப்போ கல்யாணம் பண்ணிட்டால் என்ன என்ற சிந்தனை வேறு.
ஆணாகயிருந்தாலும் பெண்ணாகயிருந்தாலும் சரியான வயதில் திருமணம் முடிப்பதே சிறந்தது. தாமதமாய் திருமணம் செய்துகொண்டு அப்புறம் குழந்தையில்லையே என்று வருத்தப்பட்டால் என்ன பயன்.

குழந்தையின்மை சிகிச்சைமையங்கள் தற்காலத்தில் பெருகிவிட்டன. குழந்தையின்மைக்கு பலகாரணம் இருந்தாலும் தாமதத்திருமணங்களும் ஒரு காரணம்.


சிந்தியுங்கள்.

நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

EARN IN INTERNET - இணையத்தின் மூலம் பணம் சம்பாதியுங்கள்.

பணம் பண்ணும் வழிகள் :

பின்வரும் முன்று தளங்களின் முலம் நான் பணம் இட்டுகிறேன். இதற்கு ஜீரோ பெர்சென்ட் கூட முதலிடு தேவை இல்லை ...

முதல் தளம் - வழிமுறை ஒன்று

mobile -ல் விளம்பரம் பெறுவதன் மூலம் சம்பாதிக்க பின்வரும் தளம் உதவும். குறிப்பிட்ட அளவு பணம் சோ்ந்தவுடன் நம் முகவரிக்கு அவர்கள் cheque அனுப்பிவிடுவார்கள். ரேகிச்டேர் செய்தவுடன் ஒரு டோல்ல்ப்ரீ நம்பர் கண்பிகிரர்கள். அதற்கு டயல் செய்து விட்டு கிழ உள்ள பட்டன் கிளிக் செய்யவும். உங்களுக்கு எந்த பிரிவில் விளம்பரம் தேவையோ அதை ப்றேபிறேன்சில் தேர்தெடுக்கலாம். ஓகே வ ... இங்கே கிளிக் செய்யவும். போன் நம்பர் வெறிபி செய்வது மிக மிக முக்கியம். அதே போல் நான் என் வலை பூவில் விளம்பரம் செய்தது போல நீங்களும் உங்கள் வலைப்பூவில் இதை பற்றி விளம்பரம் செய்யவும். அப்போது நீங்கள் நிறைய சம்பாதிக்கலாம். முயற்சி திருவினையாக்கும். முலளுங்கள். வெற்றி பெறுங்கள்.

http://mGinger.com/index.jsp?inviteId=9444583152
http://mGinger.com/index.jsp?inviteId=351374










MGINGER.COM

வழிமுறை -இரண்டு
email-பெறுவதன் மூலம் சம்பாதிக்கலாம். ஈமெயில் விளம்பரம் பெறுவதன் முலம் சம்பாதிக்கலாம் .

நாம் விரும்பும் ஈமெயில்களை கிளிக் செய்து கொள்ளலாம்.

இணைக. சம்பாதிக்க ஆரம்பிக்க. வாழ்க.

RUPEEMAIL
நன்றி



வழிமுறை - முன்று

பைசா லைவ் முலம் பணம் சம்பாதிக்கலாம் . சம்பாதிக்க ஆரம்பியுங்கள் .

Hi ,

I have something interesting for you - you can easily earn regular income online via PaisaLive.com!

It’s really amazing! You get paid to open & read the contents of PaisaLive mails. You also receive special discount coupons, promotions and free passes to various events in your city.

Join now and get Rs. 99 instantly, just for joining. What more, as a special bonus you get paid for inviting your friends also!

Create your PaisaLive Account & refer your friends to earn launch referral bonus on every new registration.

http://www.PaisaLive.com/register.asp?3607393-6165560

PaisaLive - Get Paid to read emails

















வழிமுறை - நான்கு

நீங்கள் எழுதுவதை பகிருங்கள் பணம் சம்பதிங்கள்.

உங்கள் வெப்சைட் ல் உள்ளவற்றை மற்றவர்கள் படித்தால் பணம் சம்பாதிக்க முடியும்

அதற்கு பின்வரும் தளம் உதவுகிறது ஓகே

உறுப்பினர் ஆகுங்கள் .

சம்பதிங்கள்

வாழ்த்துக்கள்
http://adf.ly/?id=1220414

விளம்பரங்களை மெயில் முலம் பார்பதற்கு பணம் தருகிறது பைசளிவே தளம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் . நன்றி .

.

மருமகள்.(சிந்தனை)

கல்யாணி கல்யாணி என அழைத்துக்கொண்டே உள் நுழைந்தாள் அவள் தோழி பங்கஜம்.

என்ன பங்கஜம் என்றாள் கல்யாணி.

இருவருக்கும் 50 வயதிருக்கும். பல வருடங்களாக தோழிகள்.

சாயந்திரம் பக்கத்து வீட்டு விமலாவுக்கு நிச்சயதார்த்தமில்ல அதான் நியாபக படுத்திட்டு போலான்னு வந்தேன்.

சீக்கிரம் கிளம்பிடு.

நான் எங்கிருந்து சீக்கிரம் கிளம்பறது. எல்லா வேலையும் செஞ்சிட்டில்ல வரணும்.

அதுதான் மருமக இருக்கால்ல. அவ பார்த்துக்க போற.

அவ என்னத்த பாத்துப்பா. எல்லா வேலையும் நான்தான் செய்யனும்.

ம் எல்லாம் என் தலையெழுத்து..

கல்யாணியின் மருமகள் வசுமதி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். கொழுந்தன் டிவி பார்த்துக் கொண்டிருக்க தானும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் தானாக டிவியை ஆன் செய்வதில்லை. யாராவது பார்த்தால் கூட அமர்ந்து பார்ப்பதுதான்.

அந்த வீட்டில் எல்லாம் கல்யாணியின் ஆட்சிதான். வசுமதிக்கு வேலை செய்யக்கூடாதென்ற எண்ணமில்லை.


ஒருநாள் அப்படித்தான் சாம்பாருக்க புளி ஊற வைத்திருந்தார்கள் அவளுடைய மாமியார். வெளியில் ஏதோ முக்கியமான வேலையாக அவரின் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் வருவதற்கு நேரமாகும் என்பதால் வசுமதி புளி கரைத்து ஊற்றிவிட்டாள். வந்தபின் ஏன் இப்போது ஊற்றினாய். என ஒரெ வசவுதான். காய் நல்லா வெந்தபிறகு ஊற்றனும். காய் நன்றாக வெந்துவிட்டது. ஆனாலும் அவள் குணம் அப்படித்தான்.தான்மட்டும் தான் அந்த வீட்டில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கல்யாணிக்கு.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல பல பல நிகழ்வுகள். எனவே வசுமதி ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். சமையல்வேலையில் தான் ஏதாவது செய்ய நினைத்தால் அது அவளின் மாமியாருக்கு பிடிக்காது. மற்ற வேலைகள் மட்டும் செய்வாள் வசுமதி. துணி துவைப்பது. பாத்திரம் கழுவுவது போன்றவை.


செய்யவும்விடமாட்டார்கள் அதே சமயம் தான்தான் எல்லா வேலையும் செய்கிறேன் யாரும் உதவி செய்வதில்லை என்று சதா புலம்பிகொண்டே இருப்பார்கள். அவர்களின் குணம் அப்படி


என்னதான் செய்வாள் வசுமதி.

அவள் கணவன் சுகுமாரும் அம்மாவுக்கு கூடமாட உதவி செய்யலாமில்லை என்பான். அவங்க என்ன எதுவும் செய்யவிடமாட்டாங்கங்க என்பாள்.

அவளுடைய கொழுந்தன்மார்களுக்கும் அண்ணிக்கு எந்த வேலையும் தெரியாது போல என்ற எண்ணம் வருமளவிற்கு செய்திருந்தாள் கல்யாணி.


மாமனார் நடேசன் தன் மனைவிக்கு எது சொன்னால் பிடிக்குமோ அதையேதான் சொல்வார். தன் மனைவிக்கு மருமகளை திட்டினால் பிடிக்கும் என்பதால் சிறு குறையையும் பெரிதுபடுத்தி பேசுவார்.

அவருக்கு தன் மனைவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே. ஏனென்றால் அங்கு கல்யாணியின் ஆட்சி அல்லவா நடக்கிறது.

கல்யாணம் ஆனதிலிருந்து இப்படித்தான். ஆனால் வசுமதியின் கொழுந்தன்கள் அப்படில்ல. அவர்களுக்கு அண்ணி என்ற பாசம் ஒரளவிற்கு இருந்தது. தன் அப்பாவே ஏதாவது தவறு செய்தால் கூட எடுத்து சொல்லுமளவிற்கு இருந்ததார்கள்.

வசுமதியின் கணவன் சுகுமாரும் மிகவும் நல்லவன். அவர்கள் வயதானவர்கள் எது சொன்னாலும் நீ பொறுமையாக இரு என்பான். வசுமதியும் அப்படித்தான் பொறுமையாக இருந்தாள். எல்லா வசவுகளையும் தாங்கிக் கொண்டாள்.

இதற்குத்தான் வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்று பழமொழியே உள்ளது போல.

காலம் எல்லாவிதமான காயங்களுக்கும் மருந்து என்று மனதைத்தேற்றிக் கொண்டாள் வசுமதி.


வசுமதியை மட்டுமல்ல மூத்த மருமகள் நித்யாவையும் இதேபோல நடந்துகொண்டு தனியே அனுப்பிவிட்டாள் கல்யாணி.

ஆனால் பேரன் பேத்திகளிடம் மட்டும் பாசத்தை பொழிகிறாள் அதே கல்யாணி.

உலகில் ஆயிரமாயிரம் வசுமதிகள். எந்த உறவுவாயினும் நாம் உண்மையான அன்பை பொழிந்தால் அவர்களும் உண்மையான அன்பைபொழிவார்கள். புரிந்துகொள்வார்களா கல்யாணியைப் போன்றவர்கள்.

மூத்தோர் காட்டும் வெறுப்புதான் நிறைய தனிக்குடித்தனங்கள் மற்றும் பல பிரச்சனைகள் தோன்றகாரணம். இளைய தலைமுறையையே அனைத்திற்கும் குறை சொல்லாமல் தாங்களும் தங்கள் குறைகளை திருத்திக் கொள்ளவேண்டும் மூத்த தலைமுறை.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

.

நேசமனம் (கவிதை)





ஓடோடி உழைத்து
பொருளீட்டி
நீங்கள் உயர
உழைத்தேன் நான்.

எமக்கென என் செய்தாய்
என கேள்விக்கணைகளுடன்
நீங்கள்

இழந்த பருவத்தை
சொல்வதா
இல்லாத பணத்தை
சொல்வதா.

எல்லாம் இருந்தும்
நிறைமனம் இல்லாமல்
குறைமனம் கொண்டு
இருப்பதேன் நீங்கள்.

சுற்றமாய் இருந்தும்
சுயநலமாய் இருப்பதேன்
பதில் தெரியா
கேள்விகளுடன் நான்.

பணபற்று பாசத்தை
பட்டுப்போக செய்கிறது
மாறுமா மனம்
ஏக்கத்துடன் நான்.

நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

.

கிரகம்(சிறுகதை)..




ANDREW பூங்காவிற்கு சற்று நேரம் நண்பனிடம் பேசிக் கொண்டிருக்கலாம் என சென்றான்.

நண்பனையும் வரச்சொல்லியிருந்தான்.

சே இவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் இவனை காணலையே…

அப்போதுதான் பார்த்தான். பூங்காவில் உள்ள ஒரு பெஞ்சில் வித்தாயசமான உருவம் அமர்ந்திருப்பதை…

அதன் அருகில் சென்றான். அது இவனை பார்த்து Hello என்றது.

பார்க்க மனிதனின் சாயலும் இருந்தது அதனிடம்…

இவனும் பதிலுக்கு Hello என்றான்…

அதன் கண்கள் மிகப்பெரியனவாயிருந்தன.. நிறம் வெளிர் பச்சை நிறத்தில் இருந்தது.

நீ நீ நீங்கள் யார் என்றான் சற்று உதறியவாறே…

நான் வேற்றுகிரகவாசி என்றது.

Andrew ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான். உங்களுக்கு எங்கள் மொழி எப்படி தெரியும்.

எங்களுக்கு அனைத்து மொழிகளும் தெரியும். அப்படி தெரியாத பட்சத்தில் என்னிடம் உள்ள ரோபோ பதிலளிக்கும்.


ஓ அப்படியா… நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என்றான் Andrew.

கிரகம் விட்டு கிரகம் பாயும் ஊர்தி உள்ளது எங்களிடம் அதன்மூலம் இங்கு வந்தேன்.

எதற்காக இங்கு வந்தீர்கள். பூமி கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக வந்தேன்.

இவ்வளவு நேரம் பேசியதில் பயம் சிறிது தெளிந்தது.

உங்களுடைய வாகனம் எங்குள்ளது.அங்குதான் நிற்கிறது என கைகாண்பித்தான்.

அங்கு ஒரு வித்யாசமான வாகனம் நின்று கொண்டிருந்தது.
வாருங்கள் அருகே சென்று பார்ப்போம் என அழைத்து சென்றது.

Andrew வும் உடன் சென்றான். உள்ளே சென்று பார்த்தான். உடனே ஊர்தி புறப்பட்டு விட்டது.

அய்யோ என அலறினான் Andrew. என்னை எங்கே அழைத்து செல்கிறாய் என கத்தினான்.

எங்கள் கிரகத்திற்கு என்றான் cool ஆக.. எதற்காக என்றான் பதட்டம் மற்றும் பயத்துடன்.

நாங்கள் எல்லா கிரகங்களை பற்றி ஆராய்ச்சி செய்கிறோம். அதற்காக எல்லா கிரக வாசிகளும் எங்களுக்கு தேவைப்படுகிறார்கள்.

பயப்படாதே உன்னிடம் சில பரிசோதனைகள் செய்து விட்டு இன்று மாலைக்குள் உன்னை உன் கிரகத்திற்கு அனுப்பிவிடுகின்றேன்.

இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை. நான் சொல்லியிருந்தால் நீ வந்திருப்பாயா என்றான் வேற்றுகிரகவாசி.

வாகனம் அவனுடைய கிரகத்தை அடைந்துவிட்டிருந்தது. மிகப்பெரிய மாளிகைக்குள் அழைத்து சென்றான். அங்கு ஒருவன் மிகப்பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான்.

Hi Boss பூமி கிரக மனிதனை கூட்டி கொண்டு வந்துள்ளேன் என்றான்.

Very nice. அவனிடம் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிந்ததும் அவனை பூமி கிரகத்திற்கு கொண்டு வந்து விட்டான் வேற்றுகிரகவாசி. வாகனத்தை விட்டு இறங்கும்போது ஏதோ ஒரு சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

என்ன சத்தம் இது என்று யோசித்தான் Andrew. Andrew வின் அம்மா alarm அடிக்குது இவ்வளவு நேரமா. எழுந்திரிக்காம இன்னும் என்னடா தூக்கம் என இவனை உலுக்கினாள்.

Andrew எழுந்தான். அட சே இவ்வளவுநேரம் தான் கண்டது கனவா என நினைத்து கொண்டே brush செய்ய சென்றான்.

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

.

கதையல்ல உண்மை

நான் ஒருநாள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு ரயில் ஏறுவதற்காக வந்தேன். ரயில் கிளம்பப்போகும் நேரம் ஆகிவிட்டது. அவசரமாக ஏறும் போது ஒரு பெண்மணி என் அம்மாவின் வயது இருக்கும். சீக்கிரமாக உள்ளே வாம்மா ரயில் எடுத்துட போறாங்க என்றார்கள். நானும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன்.

அப்போது ஒரு பெண் ரயில் பெட்டியில் ஏறும் இடத்தில் நின்றுகொண்டு தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். அந்த பெண்ணையும் சீக்கிரம் உள்ளே வாம்மா ரயில் எடுத்துவிடப்போறாங்க என்று சொன்னார்.

அந்த பெண்ணின் நலத்திற்காகதான் அவர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த பெண்ணோ எனக்கு எல்லாம் தெரியும் நீ ஒண்ணும் சொல்ல வேணாம் என்றாள். வார்த்தைகளில் மரியாதை இல்லவே இல்லை.

அவர்கள் நீ உங்க அம்மா நம்பரைத்தா நீ இப்படி செய்கிறாய் என அவர்களிடம் சொல்கிறேன் என்றார்கள். உடனே அந்த பெண்ணோ ஆவேசமாக என் அம்மாவிடம் சொல்லுவியா இந்த சொல் என செல்போனை அந்த அம்மாவின் மீது வீசினாள். தன் வயது ஒத்த பெண்களிடம் பேசுவது போல் வாடி போடி என்றுதான் அவள் பேசினாள்.

இதை பார்த்த மற்றவர்கள் அந்த அம்மாவிற்காக பரிந்து பேசினார்கள். அந்த பொண்ணுக்கு என்ன ஆன உங்களுக்கு என்னம்மா. விட்டுடுங்க. நல்லது சொன்ன புரிஞ்சுக்கனும். புரிஞ்சிக்காதவங்க கிட்ட சொல்லி என்ன செய்ய என்று சொன்னார்கள். அந்த பொண்ணையும் திட்டினார்கள். அப்போதுதான் அந்த பெண்ணின் ஆவேசம் அடங்கியது. ஆனாலும் தன் தவறை உணர்ந்தாள் இல்லை. இத்தனைக்கும் அந்த பெண் நன்கு படித்து வேலைக்கு போய் கொண்டிருக்கும் பெண்தான். என்ன படித்து என்ன பண்பாடு இல்லை. நான் அடிக்கடி அந்த பெண்ணை பார்ப்பேன். பார்க்கும்போது என்னுள்ளே அந்த சம்பவம்தான் நினைவுக்கு வரும். வெறுப்பாகவும் இருக்கும். நல்லதே செய்தாலும் அதை
புரிந்து கொள்ள மனம் இல்லாமல் இருப்பவர்களும் இருக்கின்றார்கள் இந்த உலகத்தில் என்ன செய்ய?

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

நன்றி

.

36500 நாட்கள்…





நண்பர்களே அது என்ன 36500 நாட்கள் என்றுதானே எண்ணுகீறிர்கள். வேறொன்றுமில்லை. ஒரு மனிதனின் அதிக பட்ச வாழ் நாட்கள் தான் 36500 நாட்கள். அதாவது ஒரு மனிதன் 100 ஆண்டுகள் வாழ்வேனேயானால் அவன் மொத்த வாழ்நாட்களின் எண்ணிக்கை 36500 நாட்கள். 100 x 365 =36500

ஆனால் 100 வருடங்கள் அனைவரும் வாழ்கின்றனரா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் இந்த குறுகிய வாழ்நாட்களில் எத்துணை எத்துணை பகைமைகள் போர்கள். அவனை அழிக்க வேண்டும் இவளை முன்னேற விடக்கூடாது என்ற தீய எண்ணங்கள் அப்பப்பா………

எல்லோரும் பிறந்தோம் வாழ்கிறோம். செத்துப்போகப்போகிறோம் இது அனைவருக்குமே தெரிந்த உண்மை. இது அறிந்திருந்தும் இந்த குறுகிய வாழ்நாட்களை கூட சிறப்பாக மகிழ்ச்சியாக வாழவிடாமல் மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எத்தணை.எத்துணை.

இதை வாசிப்பவர்கள் பெரும்பாலோனோர் வாங்கும் ஒரு மாத சம்பளத்தை விட நம் வாழ்நாட்களின் எண்ணிக்கை மிகக்குறைவுதான்.

இதில் நாம் எத்துணை நாட்கள் வாழ்ந்து முடித்து விட்டோம் என கணக்கு போட்டு பார்த்து கொள்ளலாம். நான் 11000 நாட்களை வாழ்ந்து முடித்துவிட்டேன். மீதி எவ்வளவு நாட்கள் என்பது விதியின் மதியை பொருத்தது. ஏன் நாம் எவ்வாறு நம் உடலை பேணுகிறோம் என்பதையும் பொருத்தது.

இதை வாசிக்கிற ஒவ்வொருவரும் வெறுப்பையும் தீய எண்ணங்களையும் விரட்டுவோம். குறுகிய வாழ்நாளில் நிறைவாய் வாழ்வோம்.

அன்னை தெரசா – மனிதர்களை நீங்கள் மதிப்பீடு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் அவர்களை நேசிப்பதற்கு நேரம் இல்லாமல் போய்விடும் என்று கூறியிருக்கிறார்.

இதை எழுதும் நான் எல்லாரையும் நேசிக்கிறேனா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். நேசிக்காவிட்டாலும் நேசிக்க முயற்சியாவது செய்வோம். அன்பு செய்வது போல நடித்தால் கூட அது காலப்போக்கில் உண்மை அன்பாக மாறக்கூடும். ஏனென்றால் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாற்றம் பெறுகிறாய். நீங்கள் தினமும் செய்யும் செயல்கள் பழக்கங்களாக உருவெடுக்கின்றன.

உதாரணத்திற்கு சிகரேட் பிடிக்கும் பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள் சிகரேட் பிடிக்கும் எண்ணம் எழும்போதெல்லாம் பழச்சாறு அல்லது சாக்லேட் சாப்பிடலாம். 30 நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டால் பழக்கமாக மாறிவிடும்.
உடல்நலத்திற்கும் கேடு இல்லை. வாழ்நாளையும் நீட்டிக்கலாம். இன்பமாக வாழலாம்.

குறுகிய வாழ்நாளை சிறப்புற வாழ்வோம். நம்மை பற்றி நினைக்கும் போது பிறருக்கு இனிமையாக இருக்கும் அளவிற்கு நாம் நடந்து கொள்வோம்.

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

.