Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

கிசோரும் குமாரும்

கிசோர் மற்றும் குமார் ஆகிய இருவரும் உயிர் நண்பர்கள். இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின் தம்தம் வழியில் பிரிந்து சென்றனர்.

கிசோருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் குமாரின் திருமண அழைப்பிதழ் வந்தது. கிசோர் குமாரின் திருமணத்திற்கு புறப்பட்டான்.

புறப்பட முடியாத நிர்பந்தமான சூழ்நிலைக்கிடையில் புறப்பட்டான் கிசோர்.

திருமண மண்டபத்தை அடைந்தான்.

கோலகலமாக திருமண ஏற்பாடுகள் நடந்தது.

தீடீரென சலசலப்பு

மணப்பெண்ணை காணவில்லை என்று.

குமாரின் திருமணம் நின்று போனது.

கிசோருக்கு வருத்தமாகி போனது.

திரும்ப சென்று விட்டான்.

8 மாதங்களுக்கு பின் மறுபடியும் குமாரின் திருமண அழைப்பிதழ் வந்தது.

கிசோர் சென்றான். இந்த திருமணமும் பெண் காணாமல் போனதால் நின்றது.

ஏன் குமாருக்கு இப்படி நடக்கிறது.

அனைவரும் குமாருக்காக பரிதாபப்பட்டனர்.

ராசியில்லை என்றனர்.

இப்படி 5 தடவை திரும்ப திரும்ப நடந்தது.

கடைசியில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.

குமார் ராசியில்லாமல் இல்லை.

குமார் பெண்களை விற்கும் வேலையில் ஈடுபட்டான் என்ற உண்மை போலிசு விசாரணையில் தெரிந்தது.

பணத்திற்காக இப்படி எல்லாம் நண்பன் நடந்தானே என்ற வேதனை கிசோருக்கு.

முற்றும்.

மீண்டும் மீண்டும் திருமணம்- விரும்பிப் படித்தது(5)

திருமணம் என்பது ஆயிரங்காலத்து  பயிர் என்பர் நம் ஊர் பெரியவர்கள். கணவன் மனைவி இடையேயான உறவு நீண்ட காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாறு கூறுவது வழக்கம். மேற்கத்திய நாடுகளில் இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராத விசயம். பெரும்பாலான தம்பதிகள் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். அவர்களை பொறுத்தவதை திருமணம் என்பது மிகவும் சாதாரணமான விசயம்்.. சிலர் தங்கள் வாழ்நாளில் பத்து திருமணங்கள் கூட செய்து கொள்கின்றனர். திருமணம் ஆகாமல் குடும்பம் நடத்தும் கலாசாரமும் அங்கு உள்ளது.

இந்நிலையில் இன்னும் கூட சில வெளிநாடுகளில் திருமண வாழ்வை உயிருக்கும் மேலாக நேசிக்கும் தம்பதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது ஆச்சர்யமான விசயம். அமெரிக்காவைச் சேர்ந்த இவான் 41 வயது மற்றும் சூசன் 39 இவர்கள் இப்படிப்பட்ட அதிசயத் தம்பதிகள்.
இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. காதல் திருமணம்.

தேவாலயம் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்கள் முதல் திருமண நாளை கொண்டாடுவதற்கு முடிவு செய்தனர்.

சூசனுக்கு தீடீரென ஒரு ஐடியா உதித்தது. திருமண நாளை கொண்டாடுவதற்கு பதில் இதே நாளில் மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது தான் அந்த  ஐடியா. கணவரும் இதற்கு ஓகே சொல்லிவிட்டார். பிறகென்ன ஒவ்வொரு ஆண்டும் திருமணம் தான்.

வித்தியாசமான தம்பதிகள். திருமணத்தின் போது நடந்த அனைத்து சடங்குகளும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் நடக்கின்றன். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விருந்து கொடுத்தனர். விருந்தினர் பரிசு கொடுத்தனர்.

அனைவரும் உங்கள் ஐடியா மிகச்சிறந்த வித்தியாசமான ஒன்று என்று கூறினார்கள்.


திருமண வாழ்வின் பெருமையை மற்றவர்களுக்கு உணர செய்வதும் எங்களின் நோக்கம் என்கின்றனர் இருவரும்

வாழ்க தம்பதிகள்...

நல்ல எண்ணங்களும் தொழிலும்



நாம் ஒரு தொழில் தொடங்க நினைக்கிறோம் என்றால் அதில் நம் நல்ல எண்ணத்தையும் கலந்தால் தொழில் மிக சிறப்பாக இருக்கும்.

உதரணத்திற்கு நாம் கல்யாணமண்டபம் ஆரம்பிக்க நினைத்தால் அங்கு நடைபெறும் திருமணங்கள் மிக சிறப்பாக இருக்கவும் அவர்கள் சிறப்பாக வாழவும் நாம் வேண்டிக்கொள்ளலாம்.

ஒரு பெட்டிக்கடை வைத்தால் அதில் போதை பொருள்களை எல்லாம் விற்ககூடாது என்ற எண்ணம் வேண்டும்.

அப்போது நமக்கும் நல்லது நடக்கும். நம்மிடம் பொருள் வாங்குவோரும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்க வேண்டும். இவை எல்லாவற்றிகும் பொருந்தும்.





இப்படி எல்லாவற்றிலும் வியாபார நோக்கம் மட்டும் இல்லாமல் நல்ல எண்ணங்களையும் இணைத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்



Blog Archive