எதிர்வீட்டு இம்சை

எங்கள் எதிர் வீட்டில் ஒரு இம்சை அரசி இருக்கிறாள். அவள் எப்போதும் நாம் எது செய்தாலும் வந்து இலவச கமெண்ட் கொடுப்பாள். இதை ஏன் செய்கிறாய் அதை ஏன் செய்கிறாய். என்று எப்போதும் இம்சைதான்.

நாங்கள் ஒரு விழாவிற்கு அழைக்க அந்த இம்சையின் வீட்டிற்கு சென்றோம். எங்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. அந்த இம்சை நாங்கள் திரும்பி வந்த பிறகு சொல்கிறது.

நாங்கள் வந்து சென்ற பிறகு சின்ன குழந்தை கீழே விழுந்து அழுததாம் என்னிடம் வந்து சொல்கிறது அந்த இம்சை...

அதன் பிறகு நான் அந்த இம்சையிடம் பேச்சு வார்த்தையே வைத்துக் கொள்வதில்லை.

யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்று நினைப்பவள் நான். ஆனால் அந்த இம்சையிடம் பேசினால் என் மனதை குத்தி கிழித்து ரண கள படுத்தும் அந்த இம்சை. அதனால் அதனிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன். இப்படிப்பட்ட இம்சைகளை என்ன செய்வது.

தனக்கு எல்லாம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களை இழிவுபடுத்தும் இம்சைகளை என்ன செய்வது...