குறுகிய வாழ்நாள்..

நண்பர்களே அது என்ன 36500 நாட்கள் என்றுதானே எண்ணுகீறிர்கள். வேறொன்றுமில்லை. ஒரு மனிதனின் அதிக பட்ச வாaழ் நாட்கள் தான் 36500 நாட்கள். அதாவது ஒரு மனிதன் 100 ஆண்டுகள் வாழ்வேனேயானால் அவன் மொத்த வாழ்நாட்களின் எண்ணிக்கை 36500 நாட்கள். 100 x 365 =36500

ஆனால் 100 வருடங்கள் அனைவரும் வாழ்கின்றனரா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால் இந்த குறுகிய வாழ்நாட்களில் எத்துணை எத்துணை பகைமைகள் போர்கள். அவனை அழிக்க வேண்டும் இவளை முன்னேற விடக்கூடாது என்ற தீய எண்ணங்கள் அப்பப்பா………

எல்லோரும் பிறந்தோம் வாழ்கிறோம். செத்துப்போகப்போகிறோம் இது அனைவருக்குமே தெரிந்த உண்மை. இது அறிந்திருந்தும் இந்த குறுகிய வாழ்நாட்களை கூட சிறப்பாக மகிழ்ச்சியாக வாழவிடாமல் மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எத்தணை.எத்துணை.

இதை வாசிப்பவர்கள் பெரும்பாலோனோர் வாங்கும் ஒரு மாத சம்பளத்தை விட நம் வாழ்நாட்களின் எண்ணிக்கை மிகக்குறைவுதான்.

இதில் நாம் எத்துணை நாட்கள் வாழ்ந்து முடித்து விட்டோம் என கணக்கு போட்டு பார்த்து கொள்ளலாம். நான் 11000 நாட்களை வாழ்ந்து முடித்துவிட்டேன். மீதி எவ்வளவு நாட்கள் என்பது விதியின் மதியை பொருத்தது. ஏன் நாம் எவ்வாறு நம் உடலை பேணுகிறோம் என்பதையும் பொருத்தது.

இதை வாசிக்கிற ஒவ்வொருவரும் வெறுப்பையும் தீய எண்ணங்களையும் விரட்டுவோம். குறுகிய வாழ்நாளில் நிறைவாய் வாழ்வோம்.

அன்னை தெரசா – மனிதர்களை நீங்கள் மதிப்பீடு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் அவர்களை நேசிப்பதற்கு நேரம் இல்லாமல் போய்விடும் என்று கூறியிருக்கிறார்.

இதை எழுதும் நான் எல்லாரையும் நேசிக்கிறேனா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். நேசிக்காவிட்டாலும் நேசிக்க முயற்சியாவது செய்வோம். அன்பு செய்வது போல நடித்தால் கூட அது காலப்போக்கில் உண்மை அன்பாக மாறக்கூடும். ஏனென்றால் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாற்றம் பெறுகிறாய். நீங்கள் தினமும் செய்யும் செயல்கள் பழக்கங்களாக உருவெடுக்கின்றன.

உதாரணத்திற்கு சிகரேட் பிடிக்கும் பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள் சிகரேட் பிடிக்கும் எண்ணம் எழும்போதெல்லாம் பழச்சாறு அல்லது சாக்லேட் சாப்பிடலாம். 30 நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டால் பழக்கமாக மாறிவிடும்.
உடல்நலத்திற்கும் கேடு இல்லை. வாழ்நாளையும் நீட்டிக்கலாம். இன்பமாக வாழலாம்.

குறுகிய வாழ்நாளை சிறப்புற வாழ்வோம். நம்மை பற்றி நினைக்கும் போது பிறருக்கு இனிமையாக இருக்கும் அளவிற்கு நாம் நடந்து கொள்வோம்.

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


Video vaga parka click

.

No comments: