கற்றுக் கொள்ளுங்கள் இந்தியை நண்பர்களே...

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு இருப்பதால் இந்தி மொழியை அரசுப்பள்ளிகளில் நாம் கற்க வாய்ப்பில்லாமல் போகின்றது என்பதே உண்மை.

ஒரு மொழியை கற்பதில் என்ன தவறு இருக்கின்றது என்பது எனக்கு தெரியவில்லை. ஏன் எதிர்க்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

வடஇந்தியா எங்கும் இந்தி மொழியின் ஆதிக்கம்தான். இதைக்கற்பதால் நாம் அவர்களுடன் எளிதில் உரையாட முடியும். அவர்களுடன் பணியிடங்களிலும் இலகுவாக பணியாற்ற முடியும்.

என் அன்னை பயிலும் சமயங்களில் எல்லாம் இந்தி மொழி ஒரு பாடமாக இருந்ததால் அதை அவர்கள் கற்றுக்கொண்டிருந்தார்கள்.

கபில்சிபல் இந்திய நாட்டிற்கு பொதுவான மொழியினை அனைவரும் கற்கவேண்டும் என்று கூறியதாக படித்தேன்.

இந்தி எதிர்ப்பு ஆங்கில எதிர்ப்பு இவற்றின் மூலமாக நாம் வளர முடியாமல் முடங்கிப்போகிறோம் என்பதே உண்மை.

இதை எதிர்ப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை பெரிய கான்வென்டுகளில் எல்லா மொழியையும் கற்க வைக்கிறார்கள் என்பதும் உண்மை.

உலகம் முழுவதும் ஒரே மொழியாக இருந்தால் எந்தப்பிரச்சனையுமில்லை என்பது என் கருத்து. அனைவரும் அனைவருடனும் இலகுவாக உரையாடமுடியும். நிறையபோ் தற்போது ஆங்கில மொழியினை அனைவருடனும் உரையாட உபயோகப்படுத்துகின்றனர். அதுவும் சிறந்ததே…

மொழிகளை கற்றுக்கொள்வதில் தவறொன்றும் இல்லை என்பதே என் கருத்து. இந்தி தெரிந்தால் நாம் இந்தியாவின் எந்த பகுதிக்கும் சென்று பணியாற்றமுடியும். ஏன் அரசியலில் ஈடுபடுவோருக்கும் இந்தி மொழி மிகவும் அவசியமாக உள்ளது.

தனிவகுப்புகளுக்கு சென்று இந்தி கற்றுக்கொள்ளலாம் என்ற சாத்தியக்கூறும் இல்லாமலில்லை.

இப்போது நான் வடஇந்தியாவில் இருப்பதால் இந்தி கல்லாமல் விட்டதின் தீமைகள் எனக்கு புரிகின்றன.

யாருடனும் பேச பழக மிகக்கடினமாக உள்ளது. அதனால் இந்தி எதிர்ப்புப்பற்றிய என்கருத்தை பதிவு செய்கிறேன்.

நடிகர் சூர்யா கூட இந்தி கற்கிறார் என்று கேள்விப்பட்டேன்..

மாற்று கருத்து இருந்தால் தெரியபடுத்தவும். நன்றி….


வாழ்க வளமுடன்……..

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எந்த மொழியானாலும் கற்றுக் கொள்வதில் தவறே இல்லை...

சாய்ரோஸ் said...

மிகச்சரியான பார்வைதான் உங்களது கருத்துக்கள்...
நானும் சில வருடங்களுக்கு முன்பு இந்தி தெரியாத காலத்தில் பிற மாநிலங்களுக்கு பணிக்குச்சென்றபோது கூனிக்குறுகித்தான் நின்றேன்... அப்போதுதான் உணர்ந்துகொண்டேன்... குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டமுடியாது என்பதை...
அதன் பிறகு வேலைக்குச்செல்லும் மாநிலங்களில் நான் பேசுவதற்கு கற்றுக்கொண்ட மொழிகள்தான் இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம்.
தாய்மொழித்தமிழை கண்போல காக்கவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை... ஆனால் தமிழை மட்டும்தான் கற்கவேண்டும் என்பது தவறுதான்...

புகைப்படபிரியை புனிதா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....

aleesh bibin.c said...

for earn more money click on http://www.emoneyspace.com/aleeshbibin